(Reading time: 35 - 70 minutes)

கூடவே, “எதுக்கும் அவர் கிட்ட உன் வால கொஞ்சம் சுருட்டி வை!”  என்ற தர்ஷினியின் அறிவுரையும் ஞாபகம் வந்தது. ஆனால் அவன் அதற்கெல்லாம் அசரவில்லை, “அப்டியா எங்க பல்ல கலட்டு பார்ப்போம்!” என்று தன் வலதுகையை ஸ்டீயரிங்கில் ஊன்றி அவனது இருக்கையிலிருந்து உடலை வளைத்து அவள் அருகே வந்து குனிய, அப்போதுதான் குளித்திருப்பான்போலும் கும்மென வந்தது பெர்ஃப்யூம் மனம், பார்க்க அழகாய், துருதுரு கண்களுடன், தீர்க்கமாய் மொத்ததில் மனதை மயக்கும் வண்ணமிருந்தாந்தான், ஆனால் அந்த திடீர் அருகாமையிலும், முதன்முறை ஒரு ஆணின் வாசம் நுகர்ந்ததாலும், இதயம் ஒரு நொடி நின்றுபோனது, வார்த்தைக்கு வார்த்தை வாயாடும் அவளது இதழ்களின் மீது மேய்ந்த அந்தப் பார்வை இவள் அடி வயிற்றை பிசைய அவன் அருகாமையில் அதிர்ந்து சர்வ நாடியும் அடங்கி, முகம் வெளிறி போனாள், அவன் நெருங்கும் போது, அவளது கால் தொடை நடுங்குவது அவளுக்கே புரிந்தது, அவள் இன்னுமாய் சீட்டில் பின்னால் சாய்ந்து கண்களி மூடி முகத்தை திருப்ப,

இவன் இப்போது தன் இடக்கையை அவள் சீட்டின் மீது ஊன்றி அவனது உடலை முன்னே தள்ளி கிட்டத்தட்ட அவளை அணைக்கும் பாவனையில் தன் வலதுகையை அவள் இடையைத் தழுவியிருந்த ஆடை மீது பரவ, இவள் வெக்கித்துபோனாள், அவனோ இயல்பாக அவள் இடையைத்தாண்டி கீழே சரிந்திருந்த சீட் பெல்ட்டை சாவகாசமாக எடுத்து அவள் மார்ப்புக்கு குறுக்கே கொண்டுவந்து அவளது வலது தோள்பட்டை அருகே இருந்த கிளிப்பிள் மாட்டினான்,  அவன் இதை தான் செய்கிறான் என்பது புரிந்ததும் நடுக்கம் கொஞ்சம் குரைந்தது, மெதுவாக கண்கள் திறந்து அவனை பார்த்தாள்,  இன்னும் இவளது சீட்டின் மேல் அவளுடைய தலைக்கு அருகாமையில் அவனது இடதுகை, முகம் இன்னும் இவளது முகத்தில் தான் நிலைத்திருந்தது, அவள் விழியைத்திறந்ததும் இயல்புக்கு வந்த இருவர் மூளையும் அவர்களது நிலையை எடுத்துரைக்க இப்போது புன்னகைத்தவன், “சேஃப்ட்டி ஃபர்ஸ்ட் பேபி, நீ என் பல்ல கழட்ட நிறைய டைம் இருக்கு, பட் இந்த டைம் நமக்கே நமக்கான ப்ரீஸீயஸ் டைம்!” கண்கள் சிமிட்டினான், அடுத்த நொடி சீறிப்பறந்தது அந்த வாகனம். இப்போது காவ்யாவிற்கு புரிந்தது அவன் ஏன் சீட் பெல்டை அவ்வளவு அவசரமாக மாட்டினான் என்று.

நெடுஞ்சாலைக்கடந்து, குருக்கே புகுந்து வளைந்து காரை ஓட்டினான், காவ்யாவின் வீட்டிற்கு அவளை அழைத்து செல்லும் எண்ணம் இவனுக்கு இல்லை என்பது அவளுக்கும் புரிந்தது. ஆனால் ஒன்று மட்டும் கேள்வியாய் அவள் மனதில், இவனை அத்தனை வெருத்த மனது, இப்போது தாயின் அருகே பதுங்கும் குட்டி பூனையைப்போன்று ஏன் பதுங்குகிறது?. பாதி இருளும், பாதி வெளிச்சமும் விழுந்த ஒரு சாலைக்குள் காரை செலுத்தினான், காரின் ஸ்டீரியோவை இவள் ஆன் செய்யும்போது, அவனும் அதையே செய்ய, அவன் இடதுகையை தொட நேர்ந்தது, சில்லென்று இருந்தது அவன் கைவிரல்கள், வெடுக்கென இவள் கையைஎடுத்து, இதுவும் அவனது குறும்பா என பார்க்கும்போது, இவளைப் பார்த்து சிரித்தான், டேப் வொர்க் ஆகல பேபி, ஐ டிரைடு அல்ரெடி!” கண்ணை சிமிட்டினான்.

“அப்ப ஏன் இப்ப ஆன் செய்ய நினைச்சீங்க?” மனதிற்குள், ஏண்டா என் கையைத்தொட்ட என்ற அவள் கேள்வியை அவன் வெகு இயால்பாய் உணர்ந்தான்,

“உன்ன தொடனும் போல இருந்தது பேபி!” நக்கலும் கேலியுமாய் அவன் சொன்ன விதம் தனில் அவன் கண்களில் ஒரு தாபம் வந்துபோனது, அதை உணரும்போது பெண்மைக்குள் மெல்லிய பயம் வந்துபோனது. எவ்வளவு தைரியம்? இவனை நம்பி வந்தோமே? எல்லாம் டேடியோட வேலை, ச்ச! என்றிருந்தது அவளுக்கு. இன்னும் அவளிடமிருந்து பதில் வராததுகண்டு அவன் கண்கள் இவளை மேய,

“என்னோட பேரு ஒன்னும் பேபி இல்ல மிஸ்டர், ஒழுங்கா அட்ரஸ் பன்னுங்க, இல்லனா.. உங்களுக்கு புரியும்னு நினைக்கேன்!”

சின்னதாய் சிரித்தான், “சரிடி காவ்யா, இனிமே பேபினு கூப்பிடலடி ஹனி, ஹனினு கூப்பிடுறேன்!”

பல்லைக் கடித்தாள், கதவை திறந்து வெளியே குதித்துவிடலாம் என் தோன்றியது.

“சரிடா ரிஷி, நீ என்ன ஹனினு கூப்பிட்டா நான் உன்ன கொஞ்சம் கூட சுரனை இல்லாத, தலைல மசாலாவே இல்லாத மண்ணுனு கூப்பிடுவேன் ஓகேவா?” இவள் வேக வேகமாக உதட்டையும் பல்லையும் கடித்து சொன்னவிதத்தில் அவனுக்கு கோபம் துளி அளவும் வரவில்லை, மாறாக மனதில் லேசாக மோகம் வந்து படர்ந்தது, அதை அவளுக்கு உணர்த்த விரும்பாது, சாலையை நோக்கி காரை செலுத்தினான், தீடீரென அவன் அமைதியானதும் இவளுக்கு ஒருமாதிரி உணர்வு, காயப்படுத்திவிட்டோமோ?, தேவைதான், இவன் ஒழுங்கா ட்ரைவர் வேலைய மட்டும் பார்த்தா வம்பில்லாம வீட்டுக்கு போலாம், இல்ல ஏதாச்சும் சீண்டினான நிச்சயம் ஒரு கடவா பல்லையாவது கழட்டி எடுக்கனும், அப்ப தான் கொஞ்சமாவது பயம் வரும், ராஸ்கல் என்னவெல்லாம் சொல்றான், ஆல் ஃப்லாட்டரிங்க் டெக்னிக்! பேபி, ஹனி, இன்னும் பொண்டாட்டினு மட்டும் தான் சொல்லல. மனதில் குமைந்து மீண்டும் அவனைப் பார்த்தாள், முகத்தில் ஒர் அழுத்தம், இவ்வளவு நேரம் குழைந்த அவனா இப்படி, அன்று காவல் நிலையத்தில் கோபம் கொப்பளிக்க நின்ற ரிஷியின் ஞாபகம் வந்தது, இடதுகை மெதுவாக கண்ணத்தை தடவ, ஓரக்கண்ணில் அவனைப்பார்த்தாள். அவன் கர்மமே கண் என்பதுபோல் வண்டியை செலுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.