(Reading time: 35 - 70 minutes)

“ஹனி ஆர் யூ ஓகே? எல்லாத்திலேயும் உனக்கு அவசரம் தான்?” இப்போது குறும்பாய் சிரித்தான். முன்னேபோல் அவனை முறைக்க முடியவில்லை. அவள் செய்த காரியம் அப்படி. இவள் யோசனையாய் அவனைப் பார்க்கவும், “ஐயோ காவீ பின் தலை நல்ல வலிக்கு” என்று கையை பின்னால் கொண்டு போனான், ஆம் விழும்போது அவன் தலை அருகே இருந்த மேசை விழிம்பில் இடித்து லேசான இரத்தம் கசிந்தது.

விளையாடுகிறான், என நினைத்து ஏதும் பேசாதிருந்தவள், அவன் பின் தலையைத் தொட்டு கையைப்பார்க்க அவள் கைவிரல்களில் இருந்த இரத்தத்துளிகளைப் பார்த்து மனம் கலவரப்பட்டது. “ரிஷி ப்ளட் வருது.. மைகாட்” என வருந்தியவள் கண்களில் இப்போது கண்ணீர் துளிகள், இரத்த கரை மங்க, கண்களில் இருந்து கன்னத்திற்கு வந்தது கண்ணீர். இவன் வாயைப்பிளக்காத குறைதான். காவ்யாவின் மனது இத்தனை மென்மையானதா? வெகித்துப்பார்த்தான்,  ஒரு நொடிதான், விருட்டென்று அவனது முன் தலை முடிக்கற்றையை பிடித்து அவனை முன்னே இழுத்தாள், அவனது தலையை தன் மடிமீது குப்புற அழுத்தி, அருகே கிடந்த அவளது கைக்குட்டையால் அவன்  பின் தலையை ஓற்றி எடுத்தாள், லேசான காயம் தான், அவள் துடைக்கும்போது வலியில் அவன் உடல் நடுங்கியது [உண்மையில் வலித்ததா, இல்லை பாவனையா? அதை அவனிடம் தான் கேட்க வேண்டும்]. இப்போது மென்மையாய் அவன் கையிரண்டும் அவள் இடுப்பை வளைத்துக்கொள்ள மெது வாய் அவள் வயிற்றின் மீது முகத்தை புதைத்துக்கொண்டான். காவ்யாவிற்கு உடல் நடுங்கியது. என்ன காரியம் செய்கிறான் என்பது புலனுக்கு புரிகிறது, அவளுடைய பெண்மை பதறுகிறது, அதன் அடையாளமாய் உடல் நடுங்குகிறது, கால்கள் வெடவெடக்க அதை உணர்ந்தவன் இன்னுமாய் அவளுள் புதைந்தான்.

தட்டுதடுமாறி சுதாகரித்து, இரண்டு மூன்று நிமிடமாய் முயற்சிசெய்து வாயைத்திறந்தாள் பெண், வெறும் காத்து தான் வந்தது, அதிர்ச்சியில் ஊமையாகிபோனேனா என்னும் எண்ணம் இவளுக்கு, முடிவாய் வரவழைத்த தைரியத்தைகொண்டு அவன் இரு தோளையும் உலுக்கி, “ரிஷி, லேட் ஆச்சு, ப்ளீஸ் எழுந்திரிங்க? என்று அவசரகதியாய் அவனை எழுப்ப அவன் கரம் இன்னும் ஆளமாய் அவள் இடையை இருக்கியது, அவள் அமர்ந்திருந்த ஸ்டூலுக்கு அருகே, வாக்காக சம்மனம் இட்டு அமர்ந்து இவள் இடையை முன் பக்கமாக சுற்றி, தலையை பஞ்சினும் மென்மையான அவள் வயிற்றில் புதைத்து ஒரு மோன நிலையில் கிடந்தான் அவன். அவள் தன் முழு பலத்தை பிரயோகித்து அவனை எழுப்ப முயன்றாள், அது வீண் காரியம் என புரிந்தது, அவனை அசைக்கக்கூட முடியவில்லை. மாறாக, அவனை கலைக்கும் அவளது செயலுக்கு எதிர்ப்பாக இன்னுமொரு அஸ்திரத்தை தொடுத்தான்.

“காவீ ப்ளீஸ், எத்தன வருஷமா நான் இதுக்காக ஏங்கி இருக்கேன் தெரியுமா, என்னோட அம்மா மடியில படுத்து இருக்கிற மாதிரி எனக்கு தோணுது, ப்ளீஸ் என்ன தப்பா எடுத்துக்காத, இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே என்னவிடுடி ஹனி!” கொஞ்சலும் முனங்கலுமாய் அவன் மொழி. அந்த ஏக்கம் கலந்த நெருக்கம் பெண்ணை துளைத்து உள்ளேபோனது. எத்தனையோ முறை தர்ஷினி இவள் மடியில் படுத்து உறங்கியிருக்கிறாள், அவளும் இந்த அரவணைப்பைதான் எதிர்பார்த்திருப்பாள் போலும், அந்த சமயத்தில் எல்லாம், “ஏய், கன்வீனீயன்ட்டா பில்லோ வச்சு படுடீ!”  என இவள் சொல்வதை பொருட்படுத்தாது இவள் மடி மீது எத்தனையோ முறை உறங்கியிருக்கிறாள் அவள் உயிர் தோழி.

 தாயின் அரவணைப்பை எதிர்நோக்கும் கன்றின் நிலை, இப்போது அவளை அறியாது கைகள் மடியில் கிடந்தவனின் தலை முடியைக்கோதியது, சுருள் சுருளாய் அடர்த்தியாய், முடிக்கற்றைக்குள் உள்ளே சென்று அவள் விரல்கள் வெளியே வரும்போது ஏற்பட்ட சுகத்தில் அவன் இன்னும் அதிகமாய் இவளிடம் புகலிடம் தேட, அவள் எவ்வளவு முயன்றும் அவனது அசைவுகள் ஏற்படுத்தும் சலனத்தையும் இன்னும் எண்ணங்கள் போகும் திசையையும் உணர்ந்து தவித்தாள். அந்த செயல்பாடின் பொருள் புரிகிறது தான், அதற்காக இவனை இப்படியே விட்டால் வேறு வினையில் போய் முடியும்.

நல்ல வேளையாக அவள் அலைபேசி சிணுங்கி, இருவரது மோன நிலையைக் கலைத்தது. இவன் மெதுவாக எழுந்து, ஒலி வந்த திசையை கவனித்தான். அவனது மடிக்கணினிக்கு அருகே இவள், அலைபேசி, எழுந்து நடந்து, எடுத்து வந்து இவள் கைகளில் கொடுத்தான், இயந்திரகதியாய் வாங்கினாள், இவன் அவள் காலின் அருகே தரையில் அமர்ந்தான். இவள் இவனைப் பார்த்துக்கொண்டே, அழைப்பை ஏற்றாள்.

“ஹேய், எங்கடி இருக்க, அங்கிள் நீ இங்க வருவேனு சொன்னாங்க, இவ்ளோ டைம் ஆச்சு, நீ இங்கயும் வரல, எங்க இருக்க?”  தர்ஷினியின் குரல் இவளை மாயாலோகத்திலிருந்து பூமிக்கு இழுத்துவந்தது. ஆனால் இவள் இருக்கும் நிலையை தோழிக்கு என்னவென்று சொல்வாள் திகைத்து தயங்கி நின்ற இவள் முகத்தைப்பார்த்து புன்னகைத்தவன், அவள் கன்னத்தில் ஒட்டி நின்ற கைப்பேசியை பொறாமையுடன் பரித்தான்,

“தர்ஷினி, நான் ரிஷி.. காவ்யா இங்க என்னோட ஆஃபீஸ் ல தான் இருக்கா, வி ஜஸ்ட் கேம் அவுட் ஃபார் எ டின்னர், போற வழில கொஞ்சம் வேலை முடிச்சுட்டு போலாம்னு ஆஃபீஸ் வந்தோம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.