(Reading time: 35 - 70 minutes)

ஸ்டர் சாலையிலிருந்து விலகி, ஓர் பெரிய கட்டடத்திற்குள் பிரவேசித்தது, “விஸ்வம்” என அழகிய எழுத்து வடிவத்தில் பல வண்ணத்தில் கட்டத்தின் மேல் மின் விளக்குகள் ஒளிர்ந்தது. காரை நிறுத்திவிட்டு இறங்கியவன், அவள் அருகே வந்து, கதவை திறந்து விட்டான், ஒரு சின்ன வேலை ஹனி, முடிச்சுட்டு கிளம்பிடலாம், நீ உள்ள வந்து ரிஷப்ஷன்ல வெயிட் பண்ணு. மறுபடியும் அவன் இயல்பு நிலைக்கு வந்தது மனதுள் ஒர் நிம்மதியைத் தரதான் செய்தது. இறங்கி வந்தவளை உள்ளே அழைத்துபோனான், அவளது தந்தையின் அலுவலகத்தை விட பன்மடங்கு பெரிதாய் இருந்தது, வெவ்வேறு கிளைகளுக்கென பிரித்துக்கொடுக்கப்பட்ட அறைகளும், தளங்களும். இரவு நேரம் என்பதால், அனைத்தும் வெற்றிடமாய் இருந்தது. தரைத்தளத்தில் அரைமணி நேரம் அவளருகே கிடந்த பத்திரிக்கை இதழ்களைப் புரட்டினாள். மனம் தான் அங்கில்லையே ரிஷியிடம் கேட்க பல கேள்விகள் இருக்கத்தான் செய்தது. எங்கிருந்து தொடங்குவதென தயக்கம்.  பல நேரங்களில் நினைவை நனைக்கும் அவன் முகத்தை வலிய வரவழைத்த வெருப்பில் மறைப்பாள். வெகு அருகாமையில் அவனைப் பார்க்கும்போதும் அவன் செய்கையை வெருப்பதாய் காண்பித்தாலும், மனதில் துளி அளவில் எங்கோ அவன் செயல்களை மனம் இரசிக்கிறதோ என உள்ளம் கலவரப்பட்டது. இவனுடன் நிச்சயம் வைத்தால், அனைவர் முன்னிலும் இவனை பிடிக்கவில்லை என கூற நினைத்தவள் தான் இன்று, அது அத்தனை சுலபமல்ல என்பதையும் உணர்ந்தாள். மனம் சோர்ந்தது. எழுந்து நடந்தாள். அமைதியான அந்த முன் இரவு பொழுதில் அந்த அலுவலகம் சலனமற்று இருந்தது.

முதல் தளத்திற்கு வந்து பின் திரும்ப நினைத்தவள் “ரிஷிகேஷ் விஸ்வம்” என பெயர் பொரிக்கப்பட்ட கண்ணாடி அறையைப் பார்த்து அங்கேயே நின்றாள். விளக்குகள் அனைக்கப்பட்டிருந்தது. கதவை திறக்க நினைத்தாள். அது லாக் செய்யப்பட்டிருந்தது. செய்வது தவறு என்ற எண்ணம் தோன்ற, மீண்டும் வரண்டாவில் நடக்க திரும்பும்போது, படிகளில் ஏறி, ஒரு செக்யூரிட்டி ஓடி வந்தார், இவளருகே வந்து புன்னகைத்து, “கீ எங்கிட்ட இருக்கு மேடம், வாங்க ஐயா ரூம திறந்து விடுறேன்!” – பணிவுடன் அவர் கூறியது இவளுக்கு என்னவோபோல் ஆக,

“இல்லப் பரவா இல்ல, நான் சும்மா ஒரு வாக் வந்தேன்!” – காவ்யா

“மேடம் நான் ஐயாவோட, அசிஸ்டன்ட் தான், வாங்க உங்கள இங்க நிக்க வச்சது தெரிஞ்சா ஐயா கோபடுவாரு! ப்ளீஸ் வாங்க”  என்றவாரே அந்த தளத்தின் மின் விளக்குகளை ஒளிரசெய்து ரிஷியின் அறையைத் திறந்து, அவளிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, ஏசியை ஆன் செய்து, இவளுடைய மற்ற தேவை ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிந்து பின் சென்றார் அந்த அசிஸ்டன்ட். “பரவாயில்லயே இந்த களிமண்ணோட அஃபீஸ்ல நமக்கு இவ்ளோ மரியாதையா? இதுவே டேடி ஆஃபீஸ்க்கு போனா, டேடி ரூமுக்குள்ள கூட அலோ பன்னமாட்டார், எதையாவது நோண்டி, டிஸ்டர்ப் பன்னுவேனு சொல்லி உடனே துரத்திவிட்டுடுவாரு, ம்ம் காவீ எல்லாம் நேரம்..!” என்று மனதிற்குள் நினைத்தவள் அறையை பார்வை இட்டாள்.

பளீரென்று இருந்தது. பொருட்கள் எங்கெங்கே இருக்க வேண்டுமோ அங்கங்கே இருந்தது.  பிராதான மேசைமேல் மடிக்கணினி இரண்டு இருந்தது. ஒன்றின்மேல் டூ நாட் டச் என்ற சிறிய ஸ்டிக்கர், அதைப் பார்த்ததுமே, காவ்யாவிற்கு கைகள் பரபரத்தது, எதையாவது நோண்டி, ரிஷியை கடுப்பேத்த நினைத்தவள், கணினியை உயிர்ப்பித்தாள், திரை ஒளிர மெதுவாக மின்னியது காவ்யாவின் முகம் திரையில்! அவளது நடந்து முடிந்த பிறந்தநாளன்று எடுக்கப்பட்டது, இடது கழுத்தோரம் ஒரு பூங்கொத்தை அனைத்து புன்னகைத்து நின்றாள். இன்று இவள் முகம் மலரும் வண்ணம் அவன் இவள் கைகளில் கொடுத்த அதேப்போன்ற பூங்கொத்து, செண்பகமும் தாளம் பூவின் மனமும் இப்போது அவள் நினைவை நனைத்தது. பிறந்தநாள் பரிசுகளில் இவளிடம் யாரோ ஒரு நபர் கொண்டு வந்து கொடுத்த அந்த பூங்கொத்து இவளுடைய பிறந்த நாள் ஆடையோடு ஒட்டிய நூல் இழைகளில் கைவண்ணம் பதிந்து…அன்று முழுவதும் சிறுமியின் கையில் இருக்கும் டெடிபேர் போன்று அந்த பூங்கொத்து அவளிடம் இருந்தது இப்போது நினைவு வந்தது, அந்த மனத்தில் தன்னை மறந்து படுக்கும்போதும் கூட அருகே வைத்துக்கொண்டு உறங்கினாள் பெண்.

“பேர்த்டேக்கு ரிஷி வந்தானா என்ன? இது அவன் கொடுத்த பொக்கேவா? ச்ச கொஞ்சம் கூட ஞாபகமில்லையே?” கடவுச்சொல்லுக்காக [ பாஸ்வோர்டு ] சிணுங்கி நின்றது கணினி திரை. உள்ளே நோண்டி பார்க்கும் ஆர்வம் இன்னும் அதிகமாய் உள்ளே படர, கைபரபரத்தது. ‘ரிஷி’, ‘விஸ்வம்’ ‘கீர்த்தி’ என ஒவ்வொன்றாக மென் எழுத்தை அடித்துப்பார்த்தாள், இறுதியாக ‘காவீ’ என ஆங்கிலத்தில் தட்ட மெல்லிய சத்ததுடன் கணினி திரை திறந்து தன்னுள் பாதுகாக்கப்பட்ட விசயங்களைப் பளிச்சிட்டது. “பார்ரா! என்றது மனம், சின்னதாய் ஒரு மகிழ்ச்சி”, ஒவ்வொரு ஃபோல்டராக திறந்துப்பார்த்தாள், சில அலுவலகம் சம்பந்தப்பட்டவை. சில அவனுடைய  எதிர்கால ப்ளான் குறித்தானவை, எதுவும் அவள் கண்களுக்கு தப்பவில்லை. மனதுள் சில வற்றைக் குறித்துக்கொண்டாள். இறுதியாக மறைத்துவைக்கப்பட்ட ஃபோல்டர்களைத் துருவினாள். படங்கள் நிறைந்த அந்த ஃபோல்டரில் ரிஷியின் சிறிய வயது புகைப்படங்களில், விஸ்வத்துடன் பெரும்பாலும் இருந்தான், அவன் சிறிய வயதிலேயே கோல்ஃப்  விளையாடியது, நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டது, முதல் வெளிநாடு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது வரை, இவன் தோளோடுபினைந்து நின்ற சில வெளிநாட்டு பெண்களின் புகைப்படமும் இருந்தது, அதனை பார்க்கும்போது மட்டும் முகம் சுழித்தாள் பெண். இறுதியாக “லைஃப்”  என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்ட ஃபோல்டரை திறந்தாள். நூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அத்தனையும் காவ்யாவோடது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.