(Reading time: 35 - 70 minutes)

“பாரு, உன்னோட ஸ்மார்ட் மூளைக்கு அப்பவாது புரியுதான்னு பார்க்கலாம்!”

இவள் கையை நீட்டி கணினியை வாங்கிக்கொண்டாள், அவள் எதிரிலேயே ஒரு கையால் தாடையைக் குத்தி, மறுக்கையை மார்புக்கு குறுக்கே கட்டி இவளை அசையாது பார்த்திருந்தான். இவள் அவன் காண்பித்த கோப்புகளை ஆராய்ந்தாள்,  சம்பந்தத்தின் குழுமம் ரிஷியின் குழுமத்திற்கு செய்வதாய் இருந்த உதவி இரத்து செய்யப்பட்ட கோப்புகள் அவை. இவன் புதிதாய் தொடங்கும் பணியின் மொத்த காப்புரிமையும் காவ்யாவின் பெயரில்..பதிவாகி இருந்தது.  இவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள், கணினியைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றாள்.

“போதுமா? இல்ல இன்னும் கொஞ்சம் டாக்குமென்ட்ஸ் இருக்கு, மேம் வெரிஃபை பன்றீங்களா? காவீ.. உங்கப்பாவோட தொழில் ரீதியான ஒப்பந்தங்களெல்லாம் உன்ன பர்த் டே பார்ட்டில பாத்த அன்னிக்கே நான் கேன்சல் பன்னிட்டேன்.. உன்ன ஒரு அக்ரிமென்ட்டா நான் உங்கப்பா கிட்ட கேட்கல.. நான் உன்ன பார்க்கும்போது நீ சம்பந்தம் அங்கிளோட பெண்ணா எனக்கு தெரியல…ஐ ஃபெல் இன் லவ் வித் யூ காவ்யா, இது வியாபரம் இல்ல, நீ கூட என்ன புரிஞ்சுக்க முயற்சிசெய்யல சரி இப்போவாவது உன்னோட டவுட் கிளியர் ஆயிட்டா இல்ல இஃப் யூ வான்ட் டூ மீட் மை லாயர் ஐவில் அரேஞ்ச்?”

இவள் அவனை பார்த்தாள். “ஓ மேம்க்கு இன்னும் டவுட் க்ளியர் ஆகல இல்ல?”

இல்லை என்பதாய் தலையசைத்தாள், “அதானே அவ்ளோ சீக்கிரம் நீங்கல்லாம் எங்கள புரிஞ்சுகிட்டா.. உலகம் சுத்துறத நிறுத்திடும்..! இன்னும் உனக்கு என்னதாண்டி வேணும்” அவன் ஓர் அடி முன்னால் வைத்தான். இவள் அவன் டிஷர்டைப்பற்றி ஒரு கையால்  பின் கழுத்தை  வளைத்து அவன் கன்னத்தில் ஒரு மென்மையான முத்தத்தை வைத்தாள். அப்போது அவள் கைவிரல்கள் அவன் ஏதும் பேசாத வண்ணம் அவன் இதழ்களை மூடியது, இவளின் மென்மையான விரல்கள் அவனை வருடியதும், பத்தாதற்கு இவள் அவன் கன்னத்தில் கொடுத்ததும் சூடாக இருந்தவனை இன்னும் உசுப்பேற்ற, இப்போது அவன் கை அவள் இடுப்பை வளைத்து அவளை முன்புறமாய் அனைத்து மேலேத்தூக்கினான், அவன் இதழ்கள் பெண்ணின் தோளில் புதைந்தது. இவள் கால் விரல்களில் எம்பி அவன் தோளில் சாய்ந்தாள். அவன் மீது தோன்றிய நம்பிக்கையை அவனுக்கு உணர்த்த இன்னும் புதைந்தாள். வார்த்தைகளில் பதில் சொல்ல இவளுக்கு தெரியாது, அவனை புரிந்துகொண்டதன் விளைவு இதுவரை இவளை தடுத்திருந்த தளை உசைந்தது.  மெதுவாக அவன் அணைப்பின் நிலை மாறுவதை பெண்மை உணர்ந்தது, இப்போது விலகி நின்றாள்..

அவன் பார்வையில் அதிகமாய் கிறக்கம் தெரிந்தது.. இன்னும் அவன் கைகளில் இருந்தவளிடம், மெல்லியக்குரலில், “காவீ ப்ளீஸ்..” என்றான். அவள் பதிலுக்கு காத்திராது இழுத்து அணைத்துக்கொண்டான், சில நிமிடங்களுக்கு பிறகு, அவன் அணைப்பிலிருந்து விலகி, அருகிலிருந்த சோஃபாவில் அமர்ந்தாள். அவன் இன்னும் கலையாத தாபத்துடன்.

“சாரி ரிஷி..” இதுவரை அவன் மீதான தவறான புரிதலுக்காக கேட்கிறாள், ஆனால் இப்போது இது அவசியமற்றது.. அவளருகே ஊர்ந்து வந்து அவள் மடிமீது தலையை வைத்து நீண்டிருந்த சோஃபாவில் கால்கள் நீட்டிப்படுத்தான்.. அவன் தலையை இழுத்து வசதியாக வைத்துக்கொண்டு, கைகளால் முடியைக்கோதி பின் இருக்கையில் மெதுவாக சாய்ந்தாள். அருகே இருந்த ரிமோட்டால் ரிஷி வளக்கை அனைததான்.. இன்னும் வெகுநேரம் அங்கே அவர்களது மெல்லிய பேச்சும் சிரிபொலியும் கேட்டுக்கொண்டிருந்தது.. நாகரீகம் கருதி அதன்பின்னான அவர்களது உரையாடல்களை நாம் கவனிக்காது விலகுவோம்..

தொடரும்

Episode # 10

Next episode will be published on 24th Aug. This series is updated fortnightly on Thursday evenings.

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.