(Reading time: 16 - 32 minutes)

‘இவன் என் தம்பி..’ விவேக் ஷிவாவை தாமோதரனுக்கு அறிமுக படுத்தி வைக்க அண்ணனின் மலர்ந்த முகத்தை பார்த்தவனுக்கு அப்படி ஒரு நிறைவு.

‘உங்களை இப்படி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு’ ஷிவா புன்னகையுடன் சொல்ல

‘ஆமாம் ஷிவா தரையிலே இருக்கும் போது நான் இவ்வளவு சந்தோஷமா இருந்து நாளாச்சு’ சொன்னான் விவேக்.

‘நீ பைலட்டா பா..’ அவனது சீருடையை பார்த்து கேட்டார் தாமோதரன்.

‘ஆமாம்பா’ அவரை பார்த்து புன்னகைத்தான் விவேக்.

ஹரிணியின் நினைவு வந்து போனது தாமோதரனுக்கு. ஆனாலும் அவளை பற்றி எதுவும் சொல்லிக்கொள்ள தோன்றவில்லை அவருக்கு,.

‘நீங்க வேணும்னா வீட்டுக்கு போயிட்டு கொஞ்சம் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க. நான் இங்கே இவருக்கு துணையா இருக்கேன்’ விவேக்கிடம் சொன்னான் ஷிவா.

‘இல்லடா... எனக்கு இவரை விட்டு போக மனசில்லை. இங்கேயே இருக்கேனே’ அவர் முகத்தை பார்த்தபடியே  விவேக் சொல்ல.

‘.அண்ணா ....நேத்து நைட் ஃபுல்லா இங்கேதான் இருந்தீங்களா நீங்க???’ கேட்டான் தம்பி

‘ம்’

‘பாருங்க. அதான் ரொம்ப டயர்ட்டா இருக்கீங்க. யூனிஃபார்ம் கூட மாத்தலை. இன்னைக்கு நைட்டும் நீங்க இங்கே இருக்கணும் இல்ல. போயிட்டு வாங்க.’ ஷிவா கட்டாய படுத்தி சொல்ல மனமில்லாமல்தான் கிளம்பினான் விவேக்!!! .அங்கே வீட்டில் அவனுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை அறியாமல்!!!

அவன் கிளம்பியவுடன் ‘உங்க அண்ணன் எப்படி என்னை அப்பா அப்பான்னு கூப்பிடறார்???. அவரை பத்தி எதுவும் சொல்லவும் மாட்டேங்கிறார். எனக்கு எதுவும் புரியலை’ ஷிவாவிடம் தாமோதரன் கேட்க

ஸ்ரீனிவாசனை பற்றியும், விவேக்கை பற்றியும் அவரிடம் சொல்ல ஆரம்பித்தான் ஷிவா. கேட்க கேட்க தாமோதரனுக்கு அவர்கள் இருவர் மீதும் நிறையவே மரியாதை பிறந்தது.

அதே நேரத்தில் அங்கே வீட்டில் இருந்தாள் ஷிவாவின் மனைவி ரஞ்சனி. ஷிவாவின் அப்பாவும், அம்மாவும் வீட்டில் இல்லை. மாடி பால்கனியில் இங்கமங்கும் உலாவிக்கொண்டிருந்தாள் அவள்.

அவள் கரம் வயிற்றை மெல்ல வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தது. அவளது வயிற்றில் மூன்று மாதங்களாக வளர்ந்துக்கொண்டிருக்கும் அந்த சின்ன சிசுவே இப்போதெல்லாம் அவளது சிந்தனையை நிறைய ஆக்கிரமிக்கிறது.

ஏதோ யோசித்தபடியே தனது கைப்பேசியை கையில் எடுத்தவளுக்கு கண்ணில் பட்டது அந்த வாட்ஸ் ஆப் செய்தி!!! ஹரிணி அனுப்பிய அந்த வாட்ஸ் ஆப் செய்தி!!! அந்த புகைப்படம் அவளுக்கு யாரையோ நினைவு படுத்த சிறிது நேரம் யோசித்தபடியே அமர்ந்திருந்தவளுக்கு பொறி தட்டியது. அந்த முகம் யாரை நினைவு படுத்துகிறது என புரிந்தது.

இங்கே எல்லாவற்றையும் தாமோதரனுக்கு விளக்கிய ஷிவா பேசாமல் இருந்திருக்கலாம். இந்த அதிசயத்தை பற்றி ரஞ்சனிக்கு சொன்னால் என்ன என தோன்றியது அவனுக்கு.

பாவம்!!! அவன் எங்கே அறிந்தான் இவர் ஹரிணியின் தந்தை என!!! ரஞ்சனியின் மூலமாக ஹரிணிக்கு செய்தி போகப்போகிறது என!!!

அழைத்தான் அவளை ‘ஹேய்... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா???’ கூவினான் அவன்.

‘வாட்???’ அவன் சொல்ல சொல்ல ரஞ்சனியின் மனம் கடகடவென கணக்கு போட்டது நிமிடத்தில் புரிந்து விட்டது எல்லாம்.

‘அப்படி என்றால் அங்கே மருத்துவமனையில் இருப்பவர்தான் ஹரிணியின் தந்தையாக இருக்க வேண்டும்!!!’

அவரை பார்த்ததும் அண்ணன் ரொம்ப சந்தோஷமா ஆகிட்டார்!!!’ ஷிவா சொன்ன இந்த வார்த்தைகளை அவளால் ஏனோ ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

‘ம். அப்படியா??? சரி..’ என்று அழைப்பை துண்டித்தாள் ரஞ்சனி.

அது ஏனோ, எப்படியோ ஷிவா அவளை பெண் பார்க்க வந்த நாளிலிருந்தே விவேக்கின் மீது ஒரு காரணமில்லா வெறுப்பு ரஞ்சனிக்கு. அன்று அவளை மற்றவர்கள் எல்லாருக்கும் பிடித்துப்போக, கடைசியில் சொன்னான் ஷிவா  

‘எங்க அண்ணன்கிட்டே போட்டோ காமிச்சிட்டு அவர் சரின்னு சொல்லிட்டா எனக்கு ஒகேதான்’ பற்றிக்கொண்டு வந்தது இவளுக்கு.

‘இவன் திருமணதிற்கு அவன் என்ன சம்மதம் சொல்வதாம்???’ முகம் பார்த்திராத போதே அவன் மீது எரிச்சல் மூண்டது.

விவேக்கின் சம்மதம் பெற்று நிச்சியம் நடந்துவிட, ஹரிணி அவளது நெருங்கிய தோழி என்பதால் அவள் அவனை பற்றி சொன்னவைகள் இவளது வெறுப்பை இன்னும் கொஞ்சம் விசிறி விட்டன.

அவளது திருமணத்தின் போதும் ஹரிணியும், ரஞ்சனியும் சேர்ந்து ரகசியமாய்  அவனை சீண்டிக்கொண்டேதான் இருந்தார்கள். அதில் ரஞ்சனிக்கு ஒரு வித திருப்தி இருந்ததே உண்மை. ஒரு கட்டத்தில் அவன் பொறுமை இழந்து வெடிக்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.