(Reading time: 14 - 27 minutes)

"அப்போ அவனை கடல்ல குதிச்சு சாக சொல்லு. ஜெஸிகாவை காதலிக்குறதுக்கு இந்த முடிவு எவ்வளவோ பரவாயில்லை"

"இரண்டு நாள் முன்னாடி ஜெஸிகாகிட்ட அவளை விரும்புறதா சொன்னான்"

"அதுக்கு ஜெஸிகா என்ன சொன்னா?" ஜான் படபடப்போடு கேட்டான்.

"டைம் கேட்ருக்கா"

"என்ன? நான் வருஷ கணக்கா நாயா பேயா அலைஞ்சிருக்கேன். நேத்து வந்தவனுக்கு டைம் கொடுக்கிறாளா?"

"நீ ஏன் டென்ஷன் ஆகுற ஜான்? நீ தான் அவளை காதலிக்கலையே"

ஜான் பதில் கூற முடியாமல் விழித்தான்.

"இப்போ கூட நான் என் சுயநலத்துக்காக இங்கே வரலை. உங்க காதலுக்கு  உதவ தான் வந்திருக்கேன்"

ஜான் வசந்தை புதிராய் நோக்கினான்.

"என்ன அப்படி பாக்குற?"

"நீ பலமுறை எங்க காதலை சேர்த்து வைக்குறேன்னு உன் வேலையை மட்டும் முடிச்சிக்குவியே. அதான் சந்தேகமா இருக்கு"

ஜான் கேட்ட கேள்வி வசந்தை தடுமாற வைத்தது.

"நீ எப்பவும் தப்பாவே நினைக்குற ஜான். அதான் உன் காதல் தனிமரமா நிக்குது"

ஜான் வெறுப்போடு உதட்டை பிதுக்கினான்.

"ஷூட்டிங் முடிய எப்படியும் ஒரு வார காலம் ஆகும். அதுவரை ஜெஸிகாவும் இங்கே தான் இருப்பா. நினைச்சு பாரு. இது போன்ற சூழ்நிலையை நீ சந்திச்சிருக்கியா?"

ஜானின் முகம் லேசாக பிரகாசம் அடையத் தொடங்கியது.

"இங்க இருக்கிற இயற்கை சூழல் இரண்டு பேருக்கும் பேசிக்குறதுக்கான அருமையான வாய்ப்பு. தனக்காக தான் ஜான் ஷூட்டிங் எடுக்க சம்மதிச்சான்னு அவ நினைப்பா. டக்குனு ஸ்பார்க் வரும். அது எப்போ வரும்னு சொல்ல முடியாது. ஒரு சின்ன வெளிச்சம் அது தான் ஜான். காதல் தேடி வர அழகான வாய்ப்பை நீ குப்பைல போட போறியா?"

ஜானின் மனம் சந்தோஷத்தில் குதூகலித்தது. தன் காதல் நிறைவேறிவிட்டதாகவே கனவு கண்டான்.

தான் வந்த வேலை முடிந்துவிட்ட திருப்தியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டான் வசந்த். ஜெஸிகாவிற்கு உதவி செய்துவிட்டதையும் ஜானிற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம் என்ற இரட்டை திருப்தி அடைந்தான்.

"உனக்கு இதுல நல்ல பணமும் கிடைக்கும் ஜான்"

"சரி வசந்த், இந்த காரியத்துக்கு நான் சம்மதிக்கிறேன்"

"நன்றி ஜான். அதே போல இனொரு விஷயமும் இருக்கு"

"என்ன விஷயம்?"

"ஜெஸிகாகிட்ட சும்மா சும்மா சண்டை போட்டுட்டு இருக்காதா. அது உன் மேல இருக்க வெறுப்பை அதிகரிக்கும்"

"நான் எங்கே சண்டை போடுறேன்? அவ தான் என்னை கண்டாலே எரிஞ்சு எரிஞ்சு விழுவா"

"அதை தான் மாத்தணும். அவ சண்டை போடுறது போல பேசினாலும் நீ அமைதியா கையாளணும்"

"இது எனக்கு பழக்கமில்லாத ஒண்ணு"

"பழக்கப்படுத்திக்க. காதல்னா சும்மாவா?"

"என்னல்லாமோ சொல்லுற,  ம்ம் முயற்சி செய்து பாக்குறேன்".என்று கூறிவிட்டு சமையலறையை நோக்கி சென்றான் ஜான்.

அவன் என்ன செய்யப்போகிறான் என்ற ஆவலோடு வசந்தும் பின்னால் சென்றான்.

"என்ன செய்ய போற?"

"ஜெஸிகாவுக்கு காபி தயார் செய்யுறேன்"

"அது சரி"

இரண்டு நிமிடங்களில் காபி தயார் செய்து வெளியில் நின்றுகொண்டிருந்த ஜெஸிகாவிற்கு எடுத்து சென்றான் ஜான். குளிரில் நடுங்கியபடி கைகளை பரபரவென தேய்த்துக்கொண்டிருந்தாள் ஜெஸிகா.

"ஜெஸ்ஸி"

ஜெஸிகா திரும்பினாள். காபி கோப்பையோடு சிரித்த முகத்தோடு தன் முன்னே நின்றிருந்த ஜானை கண்டு ஆச்சர்யமடைந்தாள்.

"இந்தா காபி எடுத்துக்க"

ஜெஸிகா பதில் ஏதும் கூறாமல் வேறு பக்கம் தலையைத் திருப்பினாள்.

"என்ன பேசாம இருக்க? காபி எடுத்துக்க" என்றான் மீண்டும் ஜான்.

"அவன் தான் ஆசையா சொல்லுறான்ல வாங்கிக்க" என்று கேலியாக சிரித்தபடி அங்கே வந்து நின்றான் வசந்த்.

ஜெஸிகா வசந்த்தை எரித்து விடுவதை போல் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.