(Reading time: 14 - 27 minutes)

"அப்பா இந்தியா போகணும்னு விரும்புறாரு"

"அப்பா இருக்குற நிலைமைக்கு சொந்த ஊரு சொந்த பந்தம் நிறைய ஆறுதல் கொடுக்கும்"

"சரியாதான் சொல்லுற"

"எப்போ கிளம்புறதா உத்தேசம்?"

"அதான் குழப்பமா இருக்கு"

"எதுக்கு குழப்பம்?"

"அமேலியா தான்"

"அவளுக்கென்ன? அவளையும் கூட்டிட்டு போக போறிங்களா?"

"விளையாடுறியா"

"அப்புறம் என்ன? அவ இங்கயே இருக்கட்டும். நான் தான் இங்கே இருக்க போறேன்ல"

"புரிஞ்சு தான் பேசுறியா வசந்த்? ஒரு ஆணையும் பெண்ணையும் எப்படி தனியா விட்டுட்டு போக முடியும்?"

"என்ன அக்கா. நீ அந்த காலத்து மனுஷங்க போல பேசுற. உன் தம்பி மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"நம்பிக்கை இருக்குடா ஆனா..." என்று எழுந்தவள், "இல்லடா அதெலாம் சரிப்பட்டு வராது"

வசந்த் சிரித்தான். அதில் ஏளனம் மிகுதியாய் இருந்தது.

"என்னடா கிண்டலா சிரிக்குற"

"உலகத்தையும் என்னையும் நினைச்சு பாத்தேன் சிரிப்பு வந்திடுச்சு"

மேகலாவுக்கு கோபம் வந்தது. ஆனால், அதை வெளிக்காட்ட அவள் விரும்பவில்லை.

"அப்பா வேற சொந்தகாரங்க வீடு கோவில் குளம்னு ரொம்ப ஆசை வச்சிட்டாரு. நிலாவுக்கும் லீவு"

"நீங்க ஊருக்கு கிளம்புற வேலைய பாருங்க"

"அப்போ அமேலியா?"

"அதுக்கு ஒரு வழி வச்சிருக்கேன்"

"என்ன வழி?"

"நீங்க வர வரைக்கும் ஜெஸிகா வீட்டுல அமேலியா இருக்கட்டும்"

"அவ சம்மதிப்பாளா?"

"சம்மதிக்க வைக்கிறேன். நீ மத்த வேலைய பாரு. இப்போ எனக்கு ஒரு காபி ப்ளீஸ்"

காபி தயார் செய்ய சமயலறைக்கு சென்ற மேகலா, அங்கு பயந்தபடி நின்றிருந்த அமேலியாவை கண்டாள்.

"இங்க என்ன பண்ணுற?"

அமேலியா அமைதியாக நின்றாள்.

சிறிது நேரத்தில் காபி தயாரனதும் சமையல் செய்யும் அவசரத்தில் அமேலியாவிடம் காபியை கொடுத்து வசந்திடம் கொடுக்குமாறு சைகையில் கூறினாள். நடுங்கியபடி வசந்தின் முன்னால் வந்து நின்றாள் அமேலியா. அவளின் நடுக்கத்தை ரசிக்கப் பிடிக்காமல் காபியை வாங்கி பருகினான் வசந்த்.

நடப்பவற்றையெல்லாம் ஓர் ஓரமாய் நின்று நாராயணன் பார்த்துக்கொண்டிருந்தார்.

தொடரும்...

Episode # 27

Episode # 29

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.