(Reading time: 34 - 67 minutes)

உடன் வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் சட்டென இவளை விட்டு சில அடிகள் தள்ளி நின்று விட்டதை போல் தோன்றியது.

‘ஆம்!!! இவள் பிரச்சனைகளை இவள்தானே சந்தித்துகொள்ள வேண்டும்!!!’

நான்கு நிமிடத்திற்கு ஒரு முறை வரும் அழைப்புகளும், இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை வரும் வாட்ஸ் ஆப் செய்திகளும் திடீரென நின்று போன உணர்வு. இப்போது எனக்கென யாருமே இல்லையா??? மனம் கரைய அப்பாவை தேடியது உள்ளம்.

‘அப்பா!!! அப்பா!!! ஆம் அப்பா வேண்டுமெனக்கு!!!’ உயிர் வரை பரவியது ஒரு வித தவிப்பு.

அவரை இப்போது எங்கே சென்று தேடுவது???  விவேக் வீட்டிலா??? யோசித்தபடியே அவள் திரும்பிய நேரத்தில் ஹாசினி வேலைப்பார்க்கும் விவேக்கின் மருத்துவமனையை கடந்துக்கொண்டிருந்தது டாக்சி.

அதுதான் சரி .ஹாசினியிடமே அப்பாவை பற்றி கேட்போம் என்று ஒரு முடிவுக்கு வந்தவளாக. ‘இங்கேயே நிறுத்திக்கோங்க’ என்றாள் டாக்சி டிரைவரிடம்.

சில நிமிடங்களில் அன்றைய டியூட்டியை முடித்துவிட்டு வெளியே வந்த ஹாசினியின் முன்னால் சென்று நின்றாள் ஹரிணி.

‘அப்பா எங்கே???’

அவளை பார்த்த மாத்திரத்தில் உடல் மொத்தமும் பத்தி எரியும் ஒரு உணர்வு ஹாசினிக்கு  எரிமலையாய் பொங்கியது அவள் உள்ளம்.

‘ஒரு மனிதன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது அவரை வேடிக்கை பார்த்துவிட்டு சென்ற இவளெல்லாம் மனித இனத்தை சேர்ந்தவளா???’ இரக்கமற்றவள்.!!! அரக்கி இவள்!!! ராட்சசி!!!

‘அப்பா எங்கே??? விவேக்கிட்டேதானே இருக்கார்???’ இவள் மறுபடியும் கேட்க

‘அப்பா இப்போ உயிரோட இல்லை போதுமா..’ அங்கே நடந்து சென்றவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உச்சகட்ட தொனியில் கத்தினாள் ஹாசினி.

‘என்ன சொல்கிறாள் இவள்??? என்னதான் சொல்கிறாள்??? நம்ப முடியாமல் உறைந்து போய் நின்றிருந்தாள் ஹரிணி.

‘சுத்ரஷனுக்காவது தான் செய்தது தப்பு என்ற ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது. ஹரிணிக்கு அது கூட இல்லையே. இனி அப்பாவை அவளுடன் அனுப்பி வைப்பது என்ன நியாயம். அவர் விவேக்குடன்தான் இருக்க வேண்டும்’ இனி அப்பாவை பார்க்க வேண்டுமென கனவினில் கூட நினைக்க கூடாது இவள். அப்பா இவளுக்கு கிடைக்கக்கூடாது. அவர் விவேக்குக்குதான்!! கூவியது அவள் மனம்.

‘என்ன ஹாசினி சொல்றே???”

உண்மையைத்தான் சொல்றேன். அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி இருக்கு கொஞ்ச நாள் முன்னாடி.’ அவள் குரல் கொஞ்சம் தழைந்தது

‘எப்போ???’

‘அதுதான் நம்ம ஸ்ரீனிவாசன் பிறந்தநாள் அன்னைக்கு. அன்னைக்குதானே அவர் காணாம போனார். அன்னைக்கே எல்லாம் முடிஞ்சிடுச்சு. அவர் நம்பர் கொடுடி நான் கேட்டேன்ல நீ தான் கொடுக்கல. கொடுத்திருந்தா அவரை அங்கே வர சொல்லி இருக்கலாம். கொன்னுட்டே. நீ தான் அவரை கொன்னுட்டே’ வாய் கூசாமல் சொன்னாள் ஹாசினி.

‘இப்படி பேச எங்கிருந்து தைரியம் வந்ததோ அவளுக்கே தெரியவில்லை. ஹரிணி தவிக்க வேண்டும்!!! குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டுமவள்’ மனம் நிறுத்தாமல் கூவியது.

‘ஹாசினி..’ குரல் நடுங்க அழைத்தாள் ஹரிணி. எனக்கு அப்பாவை பார்க்கணும்.

‘அதுதான் சொன்னன்ல. முடிஞ்சு போச்சு. எல்லாம் முடிஞ்சு போச்சு. போடி. என் முகத்திலேயே முழிக்காதே..’ சொல்லிவிட்டு நடந்து தனது காரில் ஏறி பறந்திருந்தாள் ஹாசினி.

பூகம்பத்தால் தாக்கப்பட்டது போல் நிலைகுலைந்து நின்றாள் ஹரிணி.

‘இவள் சொன்னது உண்மையா??? ஆம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஒரு மகள் இந்த விஷயத்தில் பொய் சொல்வாளா??? என்ன இருந்தாலும் ஹாசினியும் என் அப்பாவின் மகள்’ கால்கள் தளர்ந்து நடுங்கின. நடுங்கியது. கண்ணீர் மாலை மாலையாய் வழிந்தது.

‘அ....ப்....பா!!!’ உங்களை நானே கொன்னுட்டேனாபா ???’ அப்பா எனக்கு உங்களை பார்க்கணும்’. அங்கே இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்துக்கொண்டு வாயை பொத்திக்கொண்டு குலுங்கினாள்.ஹரிணி.

அதே நேரத்தில் அங்கே விவேக்கின் வீட்டில்

மகள் சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து சற்றே நிம்மதிக்கு வந்திருந்தது தாமோதரனின் உள்ளம். இருப்பினும் அவளை பார்த்து பேச வேண்டும் என்ற தவிப்பு  அதிகரித்துக்கொண்டே இருந்தது அந்த தந்தைக்கு.

‘அப்பா என்னப்பா யோசனை??? ஹரிணி பத்தி இன்னமும் கவலை படறீங்களா???’ கட்டிலில் படுத்திருந்தவர் அருகில் அமர்ந்து இவன் கேட்க

‘அதெல்லாம் ஒண்ணுமில்லையே!!! அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. தூக்கம் வருது’. சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டார் இறுக

அவரது உடல் மொழியிலும் பேச்சிலும் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை மட்டும் உணர முடிந்தது விவேக்கால்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.