(Reading time: 34 - 67 minutes)

இதற்கு காரணம் நிஜமாகவே கவனக்குறைவுதானா??? இல்லை யாருடைய தூண்டுதலின் பெயரிலாவது இப்படி நடந்ததா??? இது தீவிரவாதிகள் சதியா??? ஏதேதோ கேள்விக்கணைகள் இவளிடத்தில்.’ மொத்தமாகவே தளர்ந்திருந்தாள் இவள்.

‘என் அப்பா என்னை விட்டு போனதும் நான் அவனுக்கு செய்த பாவத்தினால்தானோ??? இனி வாழ்க்கையில் எதையெல்லாம் சந்திக்க போகிறேனோ??? இனிமேல் கண்ணீர்தான் தொடர்கதையா??? அழுதுக்கொண்டே படுத்துக்கிடந்தாள் ஹரிணி.

றுநாள் காலை ஹாசினியை கைப்பேசியில் அழைத்தான் விவேக்.

‘எஸ் சொல்லுங்க விவேக். குட் மார்னிங். உங்க அப்பா நல்லா இருக்காரா???’

‘எஸ்.. உங்க அப்பா... ரொம்ப நல்லா இருக்கார்.’ அழுத்தமாக சொன்னான் விவேக்.

‘எங்க அப்பாவா??? யாரது???’ குரலில் பொய்யான ஆச்சர்யத்தை சேர்த்துக்கொண்டாள் பெண்.

‘பொய் சொல்லாதீங்க ஹாசினி. எனக்கு அது பிடிக்காது..’ சற்றே இறுக்கமாக சொன்னான் அவன்.

‘உங்களுக்கு யார் சொன்னது???’ அவள் குரல் கொஞ்சம் இறங்கியது.

‘யாரோ சொன்னங்க அது முக்கியமில்ல. இப்போ நீங்க என் வீடு வரைக்கும் கொஞ்சம் வர முடியுமா ப்ளீஸ்???

சில மணி நேரங்கள் கடந்திருக்க விவேக்கின் வீட்டு வாசலுக்கு வந்து நின்றது அந்த கார். அதிலிருந்து இறங்கினர் ஹாசினி, ராகுல், ஸ்ரீனிவாசன் என மூவரும்.

‘ஹாய் அங்கிள்...’ அவனை ஓடி வந்து அணைத்துக்கொண்டான் ஸ்ரீனிவாசன். மற்ற இருவரையும் வரவேற்றுவிட்டு

‘டேய்... கண்ணா... உங்க தாத்தாவை நீ பார்த்தது இல்லைதானே??? அவர் எங்கே இருக்காருன்னு தெரியாதுன்னு அன்னைக்கு சொன்னியே. இப்போ உனக்கு சர்ப்ரைஸ். வா உங்க தாத்தாவை பார்க்கலாம்’ என்றபடி அவனை படுக்கை அறைக்குள் அழைத்து சென்றான் விவேக். ஹாசினியும், ராகுலும் பின் தொடர்ந்தனர்.

‘அப்பா..’ விவேக் தாமோதரனை அழைத்த விதத்தில் ஒரு அழகான புன்னகை மலர்ந்தது ஹாசினியின் முகத்தில். கட்டிலில் படுத்திருந்த தாமோதரன் மெல்ல கண் திறந்தார்

‘எப்படி இருக்கான் பாருங்க உங்க பேரன். ஸ்ரீனிவாசன்!!!’ அவனை அணைத்துக்கொண்டு அறிமுகப்படுத்தினான் அவருக்கு. ‘ஏன்பா உங்களுக்கு யாருமே இல்லைன்னு பொய் சொன்னீங்க??? அவன் கேட்கவே இல்லை அவரிடம்

‘பேரனா..’ வியப்பில் விழுந்து மீண்டு எழுந்தார் தாமோதரன்.

‘இதுவரைக்கும் இவனை நீங்க பார்த்திருகீங்களா???’

‘ம்ஹூம்..’ என்றவர் பார்வை மகளை அடைந்தது. 

மனதை ஆட்க்கொண்ட உணர்ச்சி போராட்டத்தில் அவர் உடல் நடுங்க கண்களில் நீர் சேர்ந்தது. பல வருடங்களாக அவர்கள் சந்தித்தது இல்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது அவனால். அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு அங்கிருந்து அழகாய் விலகிக்கொண்டான் விவேக்.

சில நிமிடங்கள் கடக்க அங்கே பலவகை பாசப்போராட்டங்கள் அரங்கேறி முடிந்திருக்க நால்வரும் விவேக் அமர்ந்திருக்கும் கூடத்துக்கு வந்தனர்.

‘விவேக்..’ இது தாமோதரன். ‘ஹரிணிக்கு என்ன ஆச்சுன்னு கொஞ்சம் இவங்களுக்கு சொல்லுப்பா.’

‘கவனிக்காம ரன்வே விட்டு ரோட்டிலே லேன்ட் பண்ண போயிருக்கா. கிரௌண்ட் பண்ணிட்டாங்க  ஹாசினி .’ சொன்னான் ஹாசினியிடம்.

‘போகட்டும் எப்படியோ போகட்டும்..’ கொதிப்புடன் வெடித்தாள் ஹாசினி.

‘பாவம்மா அவ.’ மெல்ல சொன்னார் தாமோதரன்.

‘என்னப்பா பாவம்??? கொலைக்காரி அவ. பெரிய கொலைக்காரி. விவேக்கோட அப்பா உயிருக்கு போராடிட்டு இருந்தப்போ அவரை கண்டுக்காம ரோட்டிலேயே விட்டுட்டு அவ ஃப்ரெண்ட்ஸோட கல்யாணத்துக்கு போயிட்டா. அவ நினைச்சிருந்தா விவேக் அப்பாவை காப்பாத்தி இருந்திருக்கலாம்..’ ஹாசினி படபடவென வெடிக்க அதிர்ந்து எழுந்தான் விவேக்.

‘ஹரிணியுமா??? அவளும் இருந்தாளா அங்கே???’ கண்களை இறுக மூடி உண்மைகளை உள்ளே அழுத்திக்கொண்டான் விவேக். தாமோதரன் முகத்திலும் கொஞ்சம் மாற்றம் வந்து போனது.

‘இனி நீங்க விவேக்குக்குத்தான் அப்பா. அவன் கூடவே இருங்கப்பா’ சொன்னாள் ஹாசினி. சில நொடி தயக்கத்துக்கு பின் தொடர்ந்தாள் அவள் ‘நீங்க இப்போ உயிரோட இல்லைன்னு அவகிட்டே சொல்லிட்டேன்பா..’

தாமோதரன், விவேக் இருவரிடமுமே உச்சகட்ட அதிர்ச்சி!!!

‘என்ன ஹாசினி நீங்க. பாவம் உங்கப்பா அவரை போய்..’ தாமோதரனின் முகத்தை பார்த்துக்கொண்டே விவேக் சற்றே திகைத்து போன குரலில் சொன்னான்.

‘தனது மகளின் வாயாலேயே இப்படி ஒரு வார்த்தையை கேட்பதற்கு எப்படி வலிக்கும் அந்த தந்தைக்கு’ நன்றாகவே புரிந்தது விவேக்குக்கு. எதுவும் பேசாமல் தலை தாழ்த்திக்கொண்டார் அந்த தந்தை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.