(Reading time: 34 - 67 minutes)

‘நிச்சயாமாய் மருத்துவமனையிலிருந்த தாமோதரன் இல்லையே இவர்???’ யோசித்துக்கொண்டே இருந்தான் அவன். ‘ஹரிணிக்கும் இவருக்கும் கண்டிப்பாய் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கிறது!!!

அதே நேரத்தில் அங்கே

கணவன் ராகுலின் தோளில் சாய்ந்துக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதுக்கொண்டிருந்தாள் சுஹாசினி.

‘பொய் சொல்லிட்டேன். என் வாயாலே சொல்லக்கூடாத பொய்யை சொல்லிட்டேன் ராகுல். ஆனால் ஹரிணிக்கு இது தேவையான தண்டனை.தான். காலம் பூரா குற்ற உணர்ச்சியிலேயே கிடைக்கணும் அவ. ராட்சசி!!!’

எதுவுமே பேசாமல் அவள் முதுகை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான் ராகுல்.

‘ஆண்டவன் எங்கப்பாவையும் விவேக் அப்பாவையும் ஒரே மாதிரி படைச்சது ஒரு காலத்திலே அவனுக்கு இவராலே ஆறுதல் கிடைக்கனும்னுதான் போலே. எல்லாம் நல்லதுக்குதான்’ அவள் சொல்லிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் உள்ளே நுழைந்த சிறுவன் ஸ்ரீநிவாசனுக்கு புரிந்தது ஒன்றே ஒன்றுதான்.

‘என் தாத்தாவும் விவேக் அப்பாவும் ஒரே உருவத்தில் இருப்பார்கள்!!!’

‘ஆம்!!!. அன்று விவேக் அப்பாவின் புகைப்படத்தை பார்த்த போது எங்கேயோ பார்த்த நினைவு வந்ததே எனக்கு’ நினைவு பளிச்சிட்டது அவனுக்கு.

அவசரமாக ஓடிச்சென்று தனது தாத்தாவின் புகைப்படத்தை எடுத்து பார்த்தான் ஸ்ரீனிவாசன். அடுத்த நிமிடத்தில் அவனது விரல்கள் விவேக்கின் எண்ணை அழுத்திவிட்டிருந்தன.

லோ மிஸ்டர் ஸ்ரீனிவாசன்!!! எப்படி இருக்கீங்க???’ சந்தோஷமாய் துவங்கினான் விவேக்.

‘நல்லா இருக்கேன் அங்கிள். நான் உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா???’

‘சீக்ரெட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும் சொல்லு சொல்லு..’

‘நீங்க யார்கிட்டேயும் சொல்லக்கூடாது..’

சொல்ல மாட்டேன் சொல்லு..’

‘உங்க அப்பாவும் எங்க தாத்தாவும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்களாம்’

‘என்னது???’ தனது புரிதல் சரிதானா என தெரிந்துக்கொள்ள விவேக் மறுபடியும் கேட்க

‘உங்க அப்பாவும் எங்க தாத்தாவும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்களாம். அங்கிள்...’ ஸ்ரீனிவாசன் மறுபடியும் சொல்ல தடதடத்தது அவன் இதயம்.

அப்படி என்றால் தாமோதரன் ஹரிணியின் தந்தையா!!! உயிர்வரை பரவியது அதிர்ச்சி.

‘உனக்கு யார் சொன்னங்க???’ ஒரு ஆழ்ந்த மூச்சுக்கு பின் கேட்டான் விவேக்.

‘எங்க அம்மா பேசிட்டு இருந்தாங்க. இப்போ நான் கேட்டேன்..’

‘ஓ!!!!’ என்று ஏதோ யோசித்தவன் ‘வாவ்.. செம சீக்ரெட்டா!!! சரி வேறே என்ன விசேஷம் உங்க ஸ்கூல்லே..’ சிறுவனிடம் எதையும் வெளிகாட்டிக்கொள்ளாதவாறு தன் பேச்சில் கொஞ்சம் சிரிப்பை சேர்த்துக்கொண்டான்.

அவனுடன் பேசி முடித்த பிறகு சில நிமடங்கள் அசைவின்றி அமர்ந்திருந்தான் விவேக் ஸ்ரீனிவாசன். தாமோதரனின் தற்போதைய தவிப்புக்கும் காரணம் புரிந்திருந்தது. ‘அவர் ஹரிணியின் தந்தையா??? அப்படி என்றால் அடுத்து என்ன நடக்கும்.???

தனது மனதை நிலைப்படுத்திக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைய அங்கே கட்டிலில் தாமோதரன் அப்படியே உறங்கிப்போயிருந்தார்.

அவர் அருகில் அமர்ந்துக்கொண்டான். அவர் முகத்தையே பார்த்திருந்தான் அவன்..இவரும் என்னை விட்டு சீக்கிரம் பிரிந்து போய்விடுவாரோ???

தே நேரத்தில்

ஏதோ ஒரு ஹோடேலில் அறையை எடுத்துக்கொண்டு கட்டிலில் சென்று விழுந்தாள். இவள் அப்பாவை அதிகமாக போனில் கூட அழைத்ததில்லை.. ஆனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது அவர் அழைத்து விடுவார் இவளை..

‘ஹரிணிமா..; என்பாரே அன்பாய்.

‘என்ன விஷயம் சொல்லுங்க. பிஸியா இருக்கேன்..’ பட்டென உடைப்பேனே நான். மனசாட்சி அவளை கீறிவிட்டு சிரித்தது.

யாருமற்ற தனிமை அவளை பாரங்கல்லாய் அழுத்தியது. சில லட்சங்கள் தனக்கென சம்பாதித்து வைத்திருந்தாலும் யாருடைய அன்பையும் இதுவரை சம்பாதித்து வைக்கவில்லை என்பது புரிந்தது அவளுக்கு.

‘அப்பா......அப்பா......வென அரற்றிகொண்டே இருந்தாள் அவள்.

‘அப்பா நீங்க வந்திடுங்கபா. உங்க மடியிலே படுத்துக்கணும்..’ அழுதுக்கொண்டே திரும்பி படுத்தவளின் கண்களில் பட்டன அந்த ரோஜாப்பூக்கள். அங்கே படுக்கைக்கு பக்கத்தில் இருந்த அந்த பூஜாடியில் இருந்த ரோஜாப்பூக்கள்

இப்போது மனக்கண்ணில் வந்து போனார்கள் ஸ்ரீனிவாசனும், விவேக்கும். அவர்களுக்கு தான் செய்தவைகள் ஒவ்வொன்றாய் மனதில் ஓடின.

‘விதைத்ததைதான் அறுக்கிறேனோ???’ சுரீரென குத்தியது மனசாட்சி.

‘அவனுக்கு தீங்கு நடக்கவேண்டுமென நினைத்தேனே. என்னுடைய வேலை இன்று கேள்விக்குறியாய் போனதே!!! என்கொயரி என்ற பெயரில் ஏதேதோ கேள்விகள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.