(Reading time: 34 - 67 minutes)

‘அவ அனுபவிக்கணும் விவேக். தனிமைன்னா என்னன்னு புரியும். கண்டிப்பா உங்கப்பாவுக்கு அவ செஞ்ச தப்பு அவளுக்கு புரியும். காலம் பூரா குற்ற உணர்ச்சியிலே இருக்கணும் அவ.’

பெருமூச்சுடன் ஹாசினியின் முகம் பார்த்தான் விவேக் ‘சுதர்ஷன் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அவனே காப்பத்தலை. மத்தவங்களை சொல்லி என்ன பண்ண??? எனக்கு அவரோட இருக்க கொடுத்து வைக்கலை. அவரை எப்பவும் பார்க்க கொடுத்து வைக்கலை அவ்வளவுதான்.’

‘ஆனா.. அவர் உங்களை பார்த்திட்டு இருக்காரே என் பையன் மூலமா..’ சின்ன புன்னகையுடன் ஹாசினி சொல்ல வியந்து போய் நிமிர்ந்தான் விவேக்.

‘புரியலை..’

‘உங்க அப்பாவோட கண்ணுதான் என் பையனுக்கு பொருத்தி இருக்கு விவேக்..’  

‘வாட்???’ ஓடி சென்று ஸ்ரீனிவாசனின் அருகில் மண்டியிட்டு அவன் கண்களுக்குள் பார்த்தான் விவேக். நெகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை விவேக்குக்கு. ஸ்ரீனிவாசனை அணைத்துக்கொண்டு மாறி மாறி முத்தமிட்டான். தன்னோடு அப்படியே சேர்த்துக்கொண்டான்.

‘டாக்டர் ஸ்ரீனிவாசன் எனக்கு குரு. காலேஜ் ப்ரோஃபசர். எனக்கு வாழ்க்கையிலே ரோல் மாடல் அதனாலேதான் என் பையனுக்கு ஸ்ரீனிவாசன்னு பேர் வெச்சேன் .உங்க அப்பா இறந்த போதுகூட நான் வந்திருந்தேன். ஆனா யாரையும் கவனிக்கற மன நிலையிலே நீங்க இல்லை. என் பையனுக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. நாங்க கண்ணுக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தோம். நீங்க உங்க அப்பா ஐஸ் டொனேட் பண்ணீங்க இல்லையா. உடனே எங்களுக்கு கிடைச்சது. அந்த டாக்டர் மூலமா இது உங்க அப்பாவோட கண்ணுன்னு எனக்கு தெரிய வந்தது...’ ஹாசினி சொல்லிக்கொண்டே போக

இது எதுவுமே காதில் ஏறாதவனாக ஸ்ரீனிவாசனையே பார்த்திருந்தான் விவேக். அவன் விழிகளுக்குள் அப்பாவையே தேடிக்கொண்டிருந்தான் அவன்.

‘என் அப்பா என்னை பார்க்கிறார்!!! என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறார்!!!’

‘விவேக்..’ அவனை கலைத்து எழுப்பினாள் ஹாசினி.

கண்கள் கலங்க நிமிர்ந்தான் விவேக் ‘தேங்க்ஸ் ஹாசினி..’

‘தேங்க்ஸ்ஆ??? நாங்க இல்ல உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்..’ என்றாள் அவள். ‘அது எப்படியோ உங்களுக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் ஏன்னே தெரியாத ஃப்ரெண்ட்ஷிப். ஒரு பந்தம்  அது உங்க அப்பாவோட கண்ணு பொருத்தினதுனாலேன்னு யாரவது சொன்னா நானே விழுந்து விழுந்து சிரிப்பேன். அது மெடிக்கலி அண்ட் ஸயின்டிஃபிகல்லி கண்டிப்பா உண்மை கிடையாது. இருந்தாலும் ஏதோ ஒரு பந்தம். அது ரொம்ப அழகா இருக்கு. வாழ்க்கை முழுசும் அது தொடரட்டும் நான் வேண்டிகிட்டே இருக்கேன்,..’

‘தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன் ஹாசினி...’ என்றபடி ஸ்ரீனிவாசனை தன்னோடு சேர்த்துக்கொண்டான் விவேக்.

அடுத்த சில மணி நேரங்கள் அங்கே மகிழ்ச்சியும் குதூகலமுமாய் கழிந்தன. கிளம்பும் முன் அப்பாவிடம் சென்றாள் ஹாசினி.

‘அப்பா.. இனிமே நீங்க விவேக் கூடவே இருங்க. அதுதான் நியாயம் புரியுதா. அவன் உங்களை ரொம்பவே நல்லா பார்த்துப்பான் .’ அப்பாவிடம் சொன்னாள் மகள். 

ரண்டு நாட்கள் கடந்திருந்தன

அன்று அந்த மாலில் ஏதோ சில பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த போது கேட்டது அந்த குழந்தையின் அழுகுரல். தனது பெற்றவர்களை விட்டு வழி தவறி வந்துவிட்டது போலும். அள்ளிக்கொண்டான் அதை.

‘என்னாச்சுடா பாப்பா???” மூன்று நான்கு வயதுக்குள்தான் இருக்கும் அதற்கு.

‘எனக்கு எங்க அப்பாகிட்டே போகணும்..’

‘உங்க அப்பா எங்கே???’

‘தெரியலை எனக்கு எங்க அப்பாகிட்டே போகணும்..’

‘சரி இரு தேடுவோம்.. அவன் அதை தூக்கிக்கொண்டு நடக்க எனக்கு எங்க அப்பாகிட்டே போகணும்..’ அதையே சொல்லிக்கொண்டிருந்தது அது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.