(Reading time: 34 - 67 minutes)

‘ஆனா நான் தப்பு செஞ்சா எங்கப்பா என்னை இப்படி எல்லாம் ஈசியா மன்னிசிட மாட்டர்னும் எனக்கு தெரியும். ஏன்னா நீங்க ஸ்ரீனிவாசன். அவர் தாமோதரன்!!!’ இல்லையாப்பா??? புன்னகைத்தான் மகன்.

‘நீங்க நீங்கதான்பா. என் அப்பா என் அப்பாதான். எங்க அப்பா இடத்தை வேறே யாராலையும் நிரப்ப முடியாதுபா ’ என்றான் அவன் கண்களில் பெருமை கூத்தாட. அழகான சிரிப்பு மாறாமல் புன்னகையுடன் புகைப்படத்திலிருந்து அவனையே பார்த்திருந்தார் அவன் அப்பா ஸ்ரீனிவாசன்!!!

‘ஆச்சுப்பா!!! நிறையவே பிரேக் எடுத்தாச்சு.. இப்போ மனசும் தெளிவா இருக்கு. நீங்க எனக்குள்ளேயே இருக்கீங்கபா. இனிமே உங்களை தேடி நான் கலங்க மாட்டேன். எந்த ரோஜாப்பூவும் என்னை ஒண்ணும் செய்யாது!!!’ அழகாய் சிரித்தான் விவேக்.

‘நாளையிலிருந்து பழையபடி.....

அடுத்த சில மணி நேரங்களில்

யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத ஒரு வேகத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பறந்துக்கொண்டிருந்தது அந்த ஹோண்டா சிட்டி.!!! சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது அந்த கார்.!!! அதை செலுத்திக்கொண்டிருந்தான் நம் விவேக் ஸ்ரீனிவாசன்.

இரண்டு நாட்கள் கழிந்திருக்க அன்று காலை ஆறு மணிக்கு டெல்லியில் இருந்தான் நம் விவேக்.

அவனது வழக்கமான சீருடையில் நன்றாக ஷேவ் செய்ய்பட்ட முகத்தில் நேர்த்தியாக இருந்த அந்த மீசை, காற்றில் ஆடிக்கொண்டிருந்த கேசம், பளபளக்கும் ஷூக்கள் என கம்பீரமாய் காக்பிட்டில் அமர்ந்திருந்தான்.

அன்று டெல்லி விமான நிலையத்தின் ஓடு பாதை முழுவதும் பனி மூட்டம். சுத்தமாக ஓடு பாதையின் அடையாளமே தெரியாத நிலை. ஆனாலும் கிளம்பி ஆக வேண்டும்

‘திஸ் இஸ் யுவர் கேப்டன் விவேக் ஸ்ரீனிவாசன். ப்ளீஸ் ஃபாசன் யுவர் சீட் பெல்ட்ஸ் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென். இட்ஸ் டைம் ஃபார் டேக் ஆஃப்’ படு உற்சாகமாக அறிவித்தான் அவன்.

அவர்கள் பனியில் நகர்ந்து செல்வதற்காக வந்தது அந்த ஃபாலோ மீ கார்’ அந்த கார் நகர்ந்து செல்ல அதன் முகப்பு விளக்குகளை பார்த்துக்கொண்டே இவன் விமானத்தை நகர்த்த வேண்டும். கண்களை மறைத்து மறைத்து விளையாடிக்கொண்டிருக்கும் பனிப்புகையினூடே மிக அழகாக வழிக்காட்டிக்கொண்டு செல்லும் அந்த காரை பின் தொடர்ந்தான் விவேக்.

‘ஆம்!!! என் அப்பாவும் இதே போலத்தானே!!! வருத்தமும், சந்தோஷமும் மாறி மாறி வரும் வாழ்கையில் என் அப்பா எனக்கு வழிக்காட்டிக்கொண்டே செல்கிறார்’ அவன் இதழ்களில் தன்னிச்சையாய் ஒரு பளீர் புன்னகை.

அடுத்த சில நிமிடங்களில் ஓடு பாதையில் வேகமெடுத்தது விமானம்.

'வி1..' அருகில் வேகத்தை கண்காணித்து கொண்டிருக்கும் துணை விமானியிடமிருந்து அவனுக்கு அறிவிப்பு வர...  விமானம் இன்னும் கொஞ்சம் வேகமெடுக்க.... ...

மேலே எழும்ப துவங்கியது விமானம். மேலே... மேலே... மேலே..

மகிழ்ச்சி!!! அவன் மனமெங்கிலும் புத்தம் புது சந்தோஷம்!!. மெல்ல மெல்ல விடியதுவங்கி இருந்தது வானம். வழக்கம் போல் மேகக்காதலிகளுடன் ஊடலும் கூடலுமாக பறந்துக்கொண்டிருந்தான் அவன்.

அப்போது அவனது கம்ப்யூட்டர் திரையில் தெரிந்தது அவர்களை நோக்கி வரும் இன்னொரு விமானம். டெல்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது அது. ஜன்னலின் வழியே அந்த விமானத்தை ஏனோ ஒரு முறை பார்த்தான் விவேக் ஸ்ரீனிவாசன்.

பொதுவாக வானத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றை ஒன்று கடப்பது கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும் ஒன்றுதான். சர்ரென்று ஒரு புயல் போல் அது அவனை கடந்து சென்றிருந்தது அது. தன்னையும் அறியாமல் புன்னகைத்துக்கொண்டான் அவன்.

அவனை கடந்து சென்ற அந்த விமானத்தில்தான் இருந்தாள் அவள். அவனுக்கானவள். இதயங்களை மயக்கி பின் அதை இயங்க வைக்கும் வித்தை கற்றவள். எத்தனையோ பேரின் வாழ்த்துக்களுக்கும், அன்பிற்கும் சொந்தக்காரி. எல்லார் மீதும் அன்பை பொழியும் குணம் இருக்கும் தேவதை. 

ஜீன்சும், டி ஷர்டும், காதில் இருக்கும் ஹெட்போனில் இசைத்துக்கொண்டிருக்கும் இளையராஜாவும், கையில் ஒரு ஆங்கில நாவலுமாய் அந்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தாள் அவள்

எல்லாம் அறிந்த அப்பா சந்திக்க வைக்க மாட்டரா என்ன??? இருவரையும். நான் உனக்காக பார்த்துவைத்த துணை இதுதான் என சொல்ல மாட்டரா என்ன??? அதற்கான நேரம் வந்துக்கொண்டே இருக்கிறது!!. அது வரையில் தனது மேகக்காதலிகளை முத்தமிட்டுக்கொண்டே இருக்கட்டுமே நம் விவேக் ஸ்ரீனிவாசன்!!!                            

டியர் ஃப்ரெண்ட்ஸ்

லவ், ரொமான்ஸ் இல்லாமல் ஒரு கதை. எப்படி வருமோன்னு நிறைய யோசிச்சுதான் ஆரம்பிச்சேன் இந்த கதையை. ரொம்ப அழகா வந்திருக்கு. மனசுக்கு நிறைவா இருக்கு. இதுக்கெல்லாம் காரணம் உங்க எல்லாருடைய ஊக்கம் தான்.

Thanks a lot for your support and encouragement My dear friends and Chillzee. Special thanks to my friend  Pradeepa Sridharan for her beautiful picture which added a special beauty to all the episodes of VS. Thanks so much.

 

நிறைந்தது!!!

Episode # 13

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.