(Reading time: 20 - 40 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”மறக்கல மறக்கலை” என சொல்லிக் கொண்டே ரோஜாவின் வீட்டைப் பார்க்க ஆனந்தும் அந்த வீட்டைப் பார்த்தான்.

   

ரோஜா அந்நேரமே தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்துக் கொண்டிருந்தாள். அவள் இந்த காரை கவனிக்கவில்லை, ஸ்கூட்டியை எடுத்த உடன் வேகமாக ஓட்டிக் கொண்டு அவள் செல்ல இப்போது ஆனந்திற்கு சுறுசுறுப்பு வந்தது, அவனும் வேகத்தை கூட்டினான். அவளை முந்திக்கொண்டு பறந்தான், அப்போதுதான் அவள் அந்தக் காரை பார்த்தாள்

   

”இந்தாளுக்கு வேற வேலையே இல்லை எப்ப பாரு நம்ம தெருபக்கமே வராப்ல, சரி எப்படியோ போகட்டும் வெங்கடேசன் சார் ஊருக்கு வந்துட்டதா நமக்கு மெசேஜ் அனுப்பிட்டாரு, ஆபீஸ்ல எல்லாரும் வர்றதுக்குள்ள நாம சேகரிச்ச தகவல்களை அவர்கிட்ட சொல்லிடனும், அய்யோ அந்த தொல்லை பிடிச்ச ஆனந்த் கூட இருப்பானே ஆமா அந்தாளு இருந்தா நமக்கென்ன நாம நம்ம வேலையை பார்க்கலாம்” என நினைத்தபடியே வண்டியை வேகமாக ஓட்டினாள்.

   

ஆனந்த் அவசரகதியில் ஆபீசை அடைந்தான், வெங்கடேசனோ அதற்கே பயந்து காருக்குள் ஒடுங்கியிருக்க அதைக்கண்டு ஆனந்த் திடுக்கிட்டான்

   

”சாரி மாமா ரொம்ப பயந்துட்டீங்களா“

   

”பயப்படாம, இப்படியா ஓட்டிட்டு வருவ இனிமேல உன்னை நம்பி நான் உன் கார்ல ஏறவே மாட்டேன்” என அலறிக் கொண்டு காரை விட்டு இறங்கி தனது கேபினுக்குச் செல்ல ஆனந்தோ ரோஜாவின் வருகைக்காக காத்திருந்தான்.

   

அவளும் சில நிமிடங்களில் வந்தாள், அவளைக்கண்டதும் செல்லப்பா சொன்னது நினைவுக்கு வந்தது

   

”வெங்கடேசன் சார் என்னிக்கெல்லாம் சீக்கிரமா ஆபீசுக்கு வராரோ, அப்ப எல்லாம் இந்த ரோஜாவும் சீக்கிரமா வந்துடுவா, நேரா தன் வேலையை பார்க்காம சாரை பார்க்க போயிடுவா, ஒரு மணி நேரம் கழிச்சிதான் வெளியவே வருவா, அப்படி என்னதான் உள்ள 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.