(Reading time: 31 - 61 minutes)

ங்க மேல இருந்த என் அபிப்பிராயம் மாற ஆரம்பிச்சதும் தான் நான் உங்க கிட்ட இருந்து விலகினேன்… என்னால அந்த நாட்களை நினைச்சே பார்க்க முடியலை… ரொம்ப கஷ்டப்பட்டேன் கார்த்தி… எனக்கு நானே கெடு வச்சேன்… ஆனா என்னால ஜெயிக்க முடியலை… உங்க மேல எனக்கிருந்த காதல் தான் ஜெயிச்சது… நான் மொத்தமா உங்ககிட்ட தோத்துட்டேன் கார்த்தி… நான் தோத்தாலும் என் காதல் ஜெயிக்கணும்னு விரும்புறேன் கார்த்தி… அதும் என் கார்த்திகிட்ட தோக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…”

“என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறீயா நீ?...”

“நல்லா தெரிஞ்சு தான் பேசுறேன்…”

“உன் வீட்டுல இதுக்கு சம்மதிப்பாங்களா?...”

“தெரியலை… ஆனா என்னால உங்ககிட்ட இதுக்கு மேலயும் மறைக்க முடியலை… 6 மாசமா மனசுக்குள்ளேயே போராடுறேன் கார்த்தி… எப்படி உங்க மேல காதல் வந்துச்சுன்னு யோசிக்கிறேன்… ஆனா என்னால பதிலை தான் கண்டுபிடிக்கவே முடியலை… எந்த செகண்ட் நீங்க என் மனசுக்குள்ள வந்தீங்கன்னும் எனக்கு தெரியலை… எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு கார்த்தி… ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு….”

“அய்யோ ஜானவி… எனக்கும் உன்னை பிடிக்கும்… ஆனா என்னால அதை காதல்னு சொல்ல முடியலை சத்தியமா…”

“புரியுது கார்த்தி… எனக்கு காதல் வந்துச்சுன்னா உங்களுக்கும் வரணும்னு சட்டம் எதுவும் இல்லையே… எனக்கு பூ பூத்துடுச்சு… உங்களுக்கும் மனசுக்குள்ள அந்த பூ பூக்குற வரை நான் காத்திருப்பேன்… அதுவரை உங்களை அணுஅணுவா காதலிப்பேன் ரசிச்சு ருசிச்சு…”

“ப்ளீஸ் ஜானவி… இதெல்லாம் நடக்காது… நீ ஆசையை வளர்த்துட்டு கஷ்டப்படாத…”

“வளர்க்குறதுக்கு இனி ஒன்னுமில்லம்மா… எப்போவோ அது வளர்ந்து இப்போ விருட்சமா நிக்குது… இனி வளர்றதுக்கு ஒன்னுமே இல்லை…”

அவளின் வார்த்தையில் வாயடைத்துப் போனான் அவன்… அதன் பின் அவள் அவனை நெருங்க நெருங்க முற்பட, அவன் விலகி விலகி போனான்…

சகி சகி என்று சிறு பிள்ளையாக வாய் ஓயாமல் அவளை அழைத்துக்கொண்டிருந்தவன், அவள் காதல் சொல்லிய நொடியிலிருந்து அந்த பெயரையே மறந்து போனவனாய் நடந்து கொள்ள அவளுக்கு வலித்தது…

அன்றிலிருந்து அவன் அவளிடமிருந்து சற்றே விலகி நிற்க ஆரம்பித்தான்… அது அவளுக்கு பிடித்தமாயில்லை என்பதை அறிந்தே வைத்திருந்தான்…

ஆனால் அப்படி விலகி நிற்பது அவனுக்கு எளிதாக இல்லை… இருந்தும் விலகி நிற்க அவன் முயற்சிக்க அவள் விடாப்பிடியாய் வந்து ஒட்டிக்கொண்டாள்…

அப்போது ஒருநாள், அவனிடம் பேசுகையில், “கார்த்தி, உங்க கையை நான் பிடிச்சுக்கவா?...” எனக் கேட்க, வாட் என அதிர்ந்தான் அவன்…

இருவரும் பலமுறை ராத்திரியில் மெசேஜில் பேசியிருக்கிறார்கள்… நட்பு என்ற வட்டத்தை தாண்டி பேசியதில்லை…

இப்போது முதல் முறையாக அவள் நட்பு அவனுக்கு நட்பாக தெரியாமல் காதலாக தெரிய, அவன் அதிர்ந்தான்…

“லூசு மாதிரி பேசின அப்புறம் திட்டிடுவேன்…”

“என்ன லூசு மாதிரி கேட்டேன்…. நீங்க என் பக்கத்துலயா இருக்குறீங்க இப்போ?... இல்லதான… அப்படி இருந்திருந்தா நானே உங்க கையை பிடிச்சிருப்பேன்… இப்படி மெசேஜில் கேட்டிருக்கமாட்டேன்…”

“அறிவே இல்லையா உனக்கு?... என்ன பேச்சு இதெல்லாம்?...”

“ஏன் கஷ்டப்படுறப்போ என் தோள்ல சாஞ்சுக்கடான்னு நண்பனா சொல்ல முடியும் தான… அதே மாதிரி இப்போ எனக்கு உங்க கையை பிடிச்சுக்கணும்… நான் தான காதலிக்கிறேன்… நீங்க இல்லையே…. ஒரு நண்பனா நீங்க இருங்க… நான் எப்படி இருந்தா என்ன?...”

அவளின் வார்த்தைகள் அவனது கோபத்தினை தூண்டியது…

“அறைஞ்சிடுவேன் ஜானவி… என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசு…”

“தெரிஞ்சு தான் பேசுறேன்… அடிக்கணும்னா அடிச்சிக்கோங்க… பட் எனக்கு இப்போ உங்க கையை பிடிச்சிக்கணும்… ப்ளீஸ் கார்த்தி… மனசுக்கு கஷ்டமா இருக்கு ரொம்ப… மாட்டேன்னு சொல்லாதீங்க ப்ளீஸ்….”

“உளறாம போய் தூங்கு நீ… குட்நைட்…”

“கார்த்தி… ப்ளீஸ்… கொஞ்ச நேரம்… அப்புறம் நானே போயிடுறேன்…”

“இப்பவே லேட் ஆச்சு… போ போய் தூங்கு…”

“எனக்கு தூக்கம் வரலை கார்த்தி… அப்பா கோபப்பட்டுட்டார்… கஷ்டமா இருக்கு…”

“ஏன் திட்டினாங்க?...”

“எக்ஸாம்…”

“அவங்க திட்டுறதுல என்ன தப்பிருக்கு… நீ கண்ட கழுதை எல்லாம் நினைக்காம எக்ஸாம்ல கான்சென்ட்ரேட் பண்ணு ஃபர்ஸ்ட்…”

“பண்ண மாட்டேன்னு நான் சொன்னேனா?...”

“நீ செய்யுறதெல்லாம் அப்படித்தான இருக்கு… அப்ப உன்னை திட்ட தான செய்வாங்க…”

“நீங்களும் இப்போ கோபப்படுறீங்கள்ள எங்கிட்ட… “

“லூசு… சொல்லதான செஞ்சேன்… இது திட்டுறதா உங்க ஊருல… போ போய் தூங்கு… பேசாம….”

“இல்ல தூக்கம் வரலை…”

“சரி தூங்காத… எனக்கு தூக்கம் வருது…”

அதுவரை உரையாடலை இழுத்துக்கொண்டிருந்தவள்., அவனுக்கு தூக்கம் வருகிறது என்றதும், சரிம்மா தூங்குங்க… என்றபடி சாட்டிங்கை நிறுத்திவிட்டு கண் மூடி படுத்தாள், ஆனால் ஏனோ தூக்கம் தான் வரவில்லை அவளுக்கு…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.