(Reading time: 31 - 61 minutes)

தே சமயம், அங்கே அர்னவும் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான்… அவனுக்கு அவளைப் பிடிக்கும் ரொம்பவே… ஆனால் காதலா என்று அவனுக்கே தெரியாத நிலையில் இருந்தான்… அதையும் மீறி காதலாகவே இருந்தாலும் அதை அவளிடத்தில் இருந்து மறைத்துவைக்கவே முடிவு செய்திருந்தான்…

இன்றோ அவளது பேச்சு, அவனது தூக்கத்தை மொத்தமாக திருடிக்கொண்டு சென்றிருந்தது… கையைப் பிடித்துக்கொள்ளவா என்று கேட்கிறாள், என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் இவள்?... என அவன் கோபம் கொண்ட வேளை, உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என மனமும் பதில் தர, அப்படியே அதிர்ந்து போனான் அவன்…

“எக்ஸாம்…” என்ற பேச்சு வர, அவன் மனம் மேலும் தவித்து போனது…

“வேண்டாம்…. அவள் நன்றாக இருக்க வேண்டும்… தன்னால் தான் அவளால் எதிலும் கான்சென்ட்ரேட் செய்ய முடியவில்லை…” என்ற எண்ணம் வர, அவளிடமிருந்து ஒதுங்கியே தீர வேண்டும் என முடிவு செய்தான்….

முடிவு தான் செய்தானே தவிர, அவனால் அதை நடைமுறைப்படுத்த இயலவில்லை… அவள் விடாது அவனை தன் அன்பால் பின் தொடர அவன் தவியாய் தவித்து போனான்…

அவன் அன்பில் கரைந்து போகாமல், மனதை கல்லாக்கி என்ன செய்ய என்று யோசித்த போது, அவளாகவே தன்னிடமிருந்து விலகி போக வேண்டும் என்ற எண்ணத்தில், அவளிடம் பட்டும் படாமல் பேச ஆரம்பித்தான்…

அத்தனையையும் தகர்த்தெறிந்து கொண்டே வந்தாள் அவளும்… காதல் சொல்லியும் ஒரு வருடம் ஆகிவிட, நாளுக்கு நாள் அவளது அன்பு அதிகரித்துக்கொண்டே போனது…

ஆனால் அது எதிலுமே தான் சிக்கிக்கொள்ளவில்லை என்பது போல் நடந்துகொண்டான் அவன்…

என்ன செய்த போதிலும் அவள் விடாப்பிடியாக இருக்க, அவளிடம் எரிந்து விழ ஆரம்பித்தான்… அவளுக்கு வலிக்க ஆரம்பித்தது…

ஆனால் அவள் அங்கு துடிப்பதை விட, இங்கு அவன் தான் அதிகமாக துடித்தான்…

“இப்படி பேசிட்டியேடா… தாங்குவாளாடா அவ?... ஏண்டா நீ இப்படி பண்ணுற?... பாவம்டா அவ…”

என நூறு முறை தனக்குள் புலம்பும் மனதை அவன் பெரும்பாடுபட்டு அடக்கி வைப்பான்…

என்ன தான் அவளிடம் வேண்டாத வெறுப்பாக பேசுவது போல் காட்டிக்கொண்டாலும், மனதினுள் அவள் பிடிவாதத்தை எண்ணி ஆச்சரியப்பட்டான்…

எத்தனை முறை எடுத்து சொன்னாலும், கேட்டபாடில்லை அவள்…

“உங்க மனசு மாறுற வரைக்கும் நான் காத்திருப்பேன் கார்த்தி…” என்றவள் அதுபடியே காத்திருக்கவும் ஆரம்பித்தாள்…

இதோ ஒருவருடமும் நிறைவுபெற்றிட, அவனுக்குத்தான் என்ன செய்ய என்று தெரியவில்லை…

இந்த 12 மாதத்தில், அவளது அன்பை அவன் எவ்வளவு நிராகரிக்க முடியுமோ அவ்வளவு நிராகரித்தான்… எனினும், அவள் ஏதேனும் ஒருவழியில் அவனிடம் அன்பை காட்டிக்கொண்டே இருந்தாள், என்னதான் காயம் பட்டாலும்…

அவனுக்கும் அது தெரிய தான் செய்தது… இருந்தும் அவன் அதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை…

அவள் எது கேட்ட போதும், தெரியாது என்றான் முதலில்… பின், நாட் இண்டிரஸ்டட்… என்ற சொல்லில் அவள் வாயை அடைத்துவிடுவான்…

அவனுக்கு தெரியும்… நாட் இண்டிரஸ்டட் என்று சொல்லிவிட்டாள் அவள் முகம் வாடி போகும்… அதன் பின் எதுவும் அன்றைக்கு கேட்கமாட்டாள் என்று…

அப்படித்தான் சில மாதங்களும் சென்றது… அவனது எண்ண ஓட்டங்களை அவள் அறிந்து கொண்டாளோ என்னவோ, அவன் அவ்வாறு சொன்னாலும், மேலும் கெஞ்ச ஆரம்பித்தாள் அவள்… அவன் முடியாதென்றால் ப்ளீஸ் ப்ளீஸ் என உருகுவாள்… அவன் அதில் கொஞ்சம் கரைய ஆரம்பிப்பதென்னவோ உண்மைதான்… ஆனால் சட்டென்று, “அதான் சொல்லுறேன்ல… நாட் இண்டிரஸ்டட்… வேறென்ன வச்சிடவா?... வொர்க் இருக்கு…” என்று வெறுப்பேற்ற முயலுவான்… அது மிகசரியாக அவளை வெறுப்பேற்றி கலங்க வைக்கும்போது, இங்கே அவனும் கலங்கி தான் போவான்…

எதற்காக இந்த காயம், எதற்காக இந்த வேதனை, எதற்காக இந்த வலி, எல்லாம் மறந்து அவளிடம் சகஜமாக பேசித்தான் தொலையேண்டா என அவனின் மனதும் அவனிடம் தன் ஆதங்கத்தை சொல்லியபோது,

“எப்படிடா பேச சொல்லுற?... நான் எப்படி பேச முடியும்?... நான் பேசினாலே அவ கல்யாணம் அது இதுன்னு ஆரம்பிப்பா?... நீயே சொல்லு… எனக்குன்னு ஒரு வேலை கூட நிரந்தரமா கிடையாது… அவளை எப்படிடா நான் காப்பாத்த முடியும்?... என்னை நம்பி வர்றவளை நான் கஷ்டப்படவிடாம பார்த்துகணும்லடா…” என்றான் அவனும் அப்படியே இதயத்திலிருந்து வார்த்தைகளை கொண்டுவந்து…

அவனது வார்த்தைகளை செவிகொடுத்து கேட்ட மனம், “நீயும் அவளை விரும்ப ஆரம்பிச்சிட்டீயா அர்னவ்?....” என கேட்க, அப்போதுதான் தான் பேசியதே அவனுக்கு நினைவு வந்தது…

தன்னையே அதிர்ச்சியாக கண்ணாடியில் பார்த்துக்கொண்டவன், பின் தன் மனதிடமே, “இல்ல ஒருவேளை அவ மேல எனக்கும் அந்த மாதிரி அபிப்பிராயம் இருந்தா, நான் என் வேலை எல்லாம் யோசிக்கணும்னு சொன்னேன்… மத்தபடி வேற ஒன்னும் இல்லை… அவ அவளோட வழியில போறது தான் அவளுக்கு நல்லது… அதை தான் நானும் விரும்புறேன்…” என்றான் அதன் வாயடைப்பதற்காக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.