(Reading time: 31 - 61 minutes)

ல்யாணம் முடிந்து 9 வருடமும் பிறந்து விட்டது…

காலத்தின் அதிவேக சுழற்சியை நம்ப முடியாதவளாய் நினைத்துக்கொண்டிருந்தாள் சரயூ…

“சரயூ… உங்களை டாக்டர் கூப்பிடுறாங்க….” என்ற குரலில் கலைந்து மருத்துவரின் அறைக்குள் சென்றாள் அவள்…

“என்ன சரயூ… லாஸ்ட் டைம் வந்தப்பவே சொன்னேன் தான… இப்படி இருந்தீங்கன்னா, எப்படி உங்க உடம்பு க்யூர் ஆகும் அதுவும் சீக்கிரம்?....”

“இல்ல டாக்டர்… நான் டைமுக்கு சாப்பிடத்தான் செய்யுறேன்…”

“சாப்பிட்டா மட்டும் போதாது சரயூ… மனசுல கவலை இல்லாமலும் இருக்கணும்… பாருங்க… உங்க ரிப்போர்ட்ஸ் கூட உங்களுக்கு ஏகப்பட்ட டென்ஷன், கவலைன்னு தான் சொல்லுது…”

“கவலைன்னு எல்லாம் எதுவும் இல்ல டாக்டர்?...”

“அப்போ ரிப்போர்ட்ஸ் பொய் சொல்லுதா?... உங்க தலைவலி தான் தெளிவா சொல்லுதே உங்களுக்கு நிறைய ப்ராப்ளம் இருக்குதுன்னு…”

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல டாக்டர்…”

“இங்க பாருங்க சரயூ… டாக்டர் கிட்டயும், லாயர்கிட்டயும் பொய் சொல்லக்கூடாது… ஒரே விஷயத்தை நீங்க திரும்ப திரும்ப யோசிக்குறீங்க… அதனால தான் உங்க தலை அவ்வளவு வலிக்குது… இப்படி நீங்க தொடர்ந்து உங்க தலைக்கு ஸ்ட்ரெஸ் கொடுத்திட்டிருந்தீங்கன்னா, அப்புறம் அந்த ட்யூமர் இன்னும் பெரிசாகி உங்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிச்சிடும்…”

“ம்ம்…. சரி டாக்டர்…”

“சரி சரின்னு சொல்லுறீங்களே தவிர, ஒன்னும் செஞ்ச மாதிரி தெரியலையே…”

“…….”

“டேப்லட்டிலேயே கரைச்சிடலாம் சரயூ… பட் நீங்க மேலும் மேலும் கவலைப்படாம இருக்கணும்…. அது ஒன்னு தான் அஸ் அ டாக்டர் ப்ளஸ் ஃப்ரெண்டா நான் உங்ககிட்ட கேட்குற ரெக்வஸ்ட்… சரியா?...”

“சரி டாக்டர்… நான் எதையும் யோசிக்கலை… கவலைப்படவும் இல்லை… இப்போ ஒகே தானா?...”

“குட் குட்… இதை தான் நான் எதிர்பார்த்தேன்… ஆமா சரயூ… எங்க உங்க ஹஸ்பெண்டை காணோம்?...”

“இல்ல டாக்டர்… கொஞ்சம் கடையில வேலை… அதான் அவரால வர முடியலை…”

“என்ன சரயூ இது… நான் தான் ஒவ்வொரு செக்கப் அப்பவும் அவரை வர சொல்லுங்கன்னு சொல்லியிருக்குறேன்ல…”

“புரியுது டாக்டர்… பட் அவரோட வொர்க்கும் அப்படித்தான் இருக்கு கொஞ்சம் பிசியா…”

“ம்ம்… பேசியே சமாளிச்சிடுங்க என்னை….” என சிரித்த அந்த பெண் மருத்துவர்,

“எனிவேஸ், உங்களை எனக்கு ஒரு பேஷண்டா மட்டும் பார்க்க தோணவே மாட்டிக்குது… ஒரு நல்ல ஃப்ரெண்டா தான் பார்க்க தோணுது… ஏனோ உங்களை ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததுல இருந்து…” என்றதும்,

சரயூ சிரித்தாள் அழகாக…

“ம்ம்… எதாவது சொல்லிட்டா போதுமே… உடனே இப்படி சிரிச்சே கவுத்துடுங்க… அநேகமா உங்களோட இந்த ஸ்மைல் பார்த்து தான் உங்க ஹஸ்பெண்டும் உங்க கிட்ட அப்படியே விழுந்துட்டாரோ என்னமோ?...” என்றவளுக்கும் சிரிப்பு தொற்றிக்கொள்ள,

முகத்தில் எந்த ஒரு மாற்றமும் காட்டாமல் இருக்க ரொம்ப சிரமப்பட்டாள் சரயூ…

“சரி டாக்டர்… நான் கிளம்புறேன்…”

“ஒகே சரயூ… போயிட்டு வாங்க… நெக்ஸ்ட் டைம் வரும்போது உங்க ஹஸ்பெண்டையும் கூட்டிட்டு வாங்க… ஒகேயா?...”

“கண்டிப்பா டாக்டர்…” என்ற புன்னகையோடு அறையை விட்டு வெளியே வந்த சரயூ அப்படியே தொப்பென்று அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்…

அந்த பெண் மருத்துவரிடம் தான் அவள் கருவுற்ற நாளிலிருந்து செக்கப் வந்து கொண்டிருக்கிறாள்…

கருவுற்ற நாள்… ஒவ்வொரு பெண்ணுக்கும் அளவிட முடியாத ஆனந்தம்… அதைவிட அதை தன் கணவனிடத்தில் சொல்லி அவன் முகத்தில் உண்டாகும் மாற்றத்தை ரசித்து பார்த்திடுவதை தவிர வேறென்ன இன்பம் இருக்க முடியும் அவளுக்கு?... அப்படித்தான் சரயூவும், அந்த நாள் தன் வாழ்வில் வந்ததை கொண்டாடினாள்… அதை விட அவனுக்கு மனைவியான வரத்தை எண்ணி பூரித்து போனாள்…

கல்யாணம் முடிந்து அவனுடன் தனது புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவளுக்கு அது தன்னவனது வீடு என்ற எண்ணம் வர, மனதினுள் குடிகொண்ட சந்தோஷம் அவளது முகத்திலும் தானாய் பிரதிபலித்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.