(Reading time: 31 - 61 minutes)

னைவியையும், குழந்தையையும் அன்பாக பார்த்துக்கொண்டவன், அவளை எந்த வேலையும் செய்ய விடவில்லை கொஞ்சமும்…

சந்தோஷமாகவே போய்க்கொண்டிருந்த வாழ்க்கை அப்படியே சென்றுவிட்டால் வாழ்க்கையின் நெளிவு சுழிவினை அறிவது தான் எப்போது?...

வாழ்க்கை அதனை திலீப்பிற்கு சொல்லிக்கொடுக்க நினைத்ததோ என்னவோ, ஆனால் சரயூவினை அலைக்கழித்து விட்டது…

கையில் இருந்த செல்போன் ரிங்டோன் சத்தத்தில் சட்டென கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தாள்…

திலீப் தான் அழைக்கிறான்… வீட்டிற்கு வந்துவிட்டேனா என கேட்பதற்கு தான் அழைத்திருக்கிறான் என எண்ணியவள், உடனேயே போன் எடுக்க, அவள் எண்ணத்தை உறுதி படுத்துவது போல், வீட்டிற்கு வந்துட்டியா?... என்றான் அவன்…

“இல்லங்க… கிளம்புறேன் இப்போதான் ஹாஸ்பிட்டலிருந்து…”

“இப்பதான் கிளம்புறீயா?... ஏன் இவ்வளவு நேரம்?...”

“இல்ல செக்கப் பண்ணி ரிப்போர்ட் வர லேட் ஆகிட்டு… அதுக்குப்பிறகு டாக்டரை பார்த்துட்டு வர லேட் ஆகிட்டு…”

“சரி… சரி… பார்த்து வீட்டுக்குப் போ…” என்றவன் அவளது பதிலுக்கு கூட காத்திராமல் போனை வைத்துவிட, அவள் விரக்தியாக அந்த போனை பார்த்துவிட்டு புன்னகை சிந்தினாள்…

ஜானவி… ஜானவி… ஜானவி… அவளுடன் உண்டான வாழ்க்கையின் பயணத்தை நினைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தவனுக்குள் அவளது தாக்கம் அதிகமாய்….

சட்டென நினைவு வந்தவனாக அவளுக்கு மெசேஜ் அனுப்பினான் குட்மாரிங்க் என…

அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவள், உடனே அதை பார்த்துவிட்டு,

“இப்பதான் எழுந்தீங்களா?.. சாப்பிட்டீங்களா?..” என்றாள்..

“சாப்பிட்டேன்… நீ?...”

“சாப்பிட்டேன்மா…”

“ஓகே…”

‘காலையில எப்போ வீட்டுக்கு வந்தீங்க?...”

“காலையில தான்…”

“அதான் எப்போன்னு கேட்டேன்…”

“தெரிஞ்சு என்ன பண்ணப் போற?...”

“இல்ல நைட் வேலைன்னு சொன்னீங்கள்ள அதான்….”

“எனக்கு சொல்ல இஷ்டம் இல்ல ஜானவி… ப்ளீஸ் விட்டுடு… வேலைன்னு ஒன்னு கிடைச்சிட்டுல்ல… இன்னும் என்ன?...”

“சரிங்க… இஷ்டம் இல்லன்னா விட்டுடுங்க…”

“இதே போல எல்லாத்துலயும் இருந்துட்டா எல்லாருக்கும் நல்லது…”

அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் அவளுக்கு புரியாமல் இல்லை… புரிந்து தான் இருந்தது…

“சரிங்க… ரெஸ்ட் எடுங்க…”

“ஹ்ம்ம்.. சரி… நீ ஆஃபீஸ் வந்துட்டியா?..”

“ஆமா வந்துட்டேன் அப்பவே…”

“சரி சரி.. வொர்க் பாரு…”

“நீங்களும் கொஞ்ச நேரம் தூங்குங்க… ரெஸ்ட் எடுங்க நல்லா…”

“எனக்கு தெரியும் ஜானவி… நான் சின்னப்பிள்ளை இல்ல… என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும்… சரியா?...”

“நீங்க சின்னப்பிள்ளை இல்லன்னு எனக்கு தெரியுங்க… உங்களை நீங்க பார்த்துக்குறதும் எனக்கும் நல்லாவே தெரியும்…” என்றவள், அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் இருப்பதை பார்த்துவிட்டு,

“எனக்கு இப்பவும் உங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு… நீங்க என்னதான் என்னை தள்ளி வைக்குற மாதிரி பேசினாலும் சரி… நான் தப்பா நினைக்கவே மாட்டேன்… ஏன்னா எனக்கு உங்களை ரொம்பவே பிடிக்கும்… எனக்கும் உங்க மனசு புரியும் கார்த்தி…” என முழுமனதாக கூறிவிட்டு,

‘ரெஸ்ட் எடுங்கம்மா… நான் அப்புறம் பேசுறேன்…” என மெசேஜை அனுப்ப,

“ஓகே….” என்ற பதில் மட்டும் வந்தது அவனிடத்தில்…

அவனிடத்தில் தன் மனதை எப்படி புரிய வைக்க என்று தெரியாமல் தலையை பிடித்துக்கொண்டாள் ஜானவி…

“வேண்டாம்டா… ப்ளீஸ்… என்னை ஏன் இப்படி உன்னை கஷ்டப்படுத்த வைக்குற?.. என்னால முடியலைடா… வலிக்குதுடி ரொம்ப… நிஜமா வலி தாங்க முடியலை சகி…” என அவனும் அங்கே  வாய்விட்டே சொல்ல, இங்கே அவள் சட்டென நிமிர்ந்தாள்…

ஹாய்… ப்ரெண்ட்ஸ்… எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்.. கொஞ்சம் பெரிய அப்டேட் கொடுக்க ட்ரை பண்ணியிருக்கேன்…

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க… மறக்காம…

பை… பை… நெக்ஸ் வீக் அகெய்ன் மீட் பண்ணலாம்…

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.