கலங்கிய விழிகளுடன் இருந்தவள் அருகில் வந்து அமர்ந்தார்கள் கவி யும் ராஜீயும். அக்கா என்று ராஜீ அழைக்க என்னடா என்றால் நம் ஈஷ்வரி அதாவது நம் நாயகி பௌஷிதா பௌஷாலி.
உங்களுக்கு எங்கனா அடி பட்டு இருக்கானு பார்தீங்களா? -கவி
இல்ல கவிமா எனக்கு எந்த ஒரு சின்ன அடியும் உடம்பில் படல அதர்கு அர்த்தம் என் மனதில் அனைத்திர்க்கும் சேர்த்து பட்டு விட்டது.
அது சரி அக்க எப்படியும் நீங்க என் கிட்ட கொடுத்த நகை ஒரு 20 25பௌன் இருக்கும் எந்த நம்பிக்கையில் என் கிட்ட கலட்டி கொடுத்தீங்க நான் எடுத்துக்கிட்டு ஓடி டா என்ன செய்வீங்களாம் என்றாள் ராஜீ.
என்னை அக்கானு கூப்பிட்டு இருக்க நீ கொண்டு போன என் தங்கச்சிக்கு கொடுத்ததா நினைத்து இருப்பேன் அவ்லோ தானே.
ஐயோ அக்கா ... இப்படி எல்லாம் உலகம் தெரியாம இருக்காதீங்க இந்தாங்க என்று ஒரு சாவியைக் கொடுத்தாள்.
இங்க பேஷண்ட்களுக்கு லாக்கர் இருக்கு தான் இருந்தும் எனக்கு பயமா இருந்தது. இது சீப் ராக்டர் இருகார்ல அவரோட சேஃப் கீ அவர் லாக்கர்ரை ஆக்குபை பன்னி்கலாம்.
சீப் லாக்கரை யூஸ் செய்தோம்னா அவர் கோபிக்க மாடாரா. அவர் ஏதாவது வேல்யூபல் திங்ஸ் வச்சி இருந்தார்னா?
என்னக்க நீங்க அவர் லாக்கர்ல மிஞ்சி மிஞ்சி போன கொஞ்சம் காதல் கடிதம் தான் இருக்கும் அதும் இன்ட்ரஸ்ட்டா இருக்காது என்று ரகசியம் பேசியது கவி
பொருமையாக சிரித்தவள் பக்கத்துல ஏதாவது கடைங்க இருக்குமா போன் வாங்கரா மாதிரி.