(Reading time: 11 - 21 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

மிகச் சாதாரணமான விருப்பத் தெக்கூட நிறெவேத்திக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையெ எப்படிப் பொறுத்துக்கறது?" பானு ஒரு வினாடி நிறுத்தினாள். "ஒரு விஷயம் கேள் அண்ணா! உனக்கு நிலமெ விளங்கும். போன பொங்கலுக்கு அம்மா கடிதம் போட்டுக் கூட நான் போகல்லே. அதுவரெ ஒரு பொங்கல் கூட இங்கெ கொண்டாடல்லே. இந்தப் பொங்கல் இங்கேயே கொண்டாடணும்னு எண்ணம் வந்து இங்கேயே இருந்துட்டேன். பண்டிகெக்குப் பத்து நாளிருக்கும்போதே எவ்வளவோ நினெச்சி வெச்சேன். என்னென்னவோ முடிவுபண்ணேன். அந்த நாலு நாளும் நான் என்னென்ன புடவெ கட்டிக்கற்து, பாபுவுக்கு என்னென்ன சட்டெ போட்றது, என்னென்ன டிபன் பண்றது, என்னென்ன சமயல் பண்றது - ஒண்ணொன்னா? எல்லாத்துக்கும் லிஸ்ட் எழுதி வெச்சிட்டேன். எல்லாத்தையும் மாமாவுக்குச் சொன்னேன். 'பண்டிகெ நாலு நாளெக்கும் புதுப்புது டிபன் பண்ணிச் சாப்டுட்டுப் பேசிக்கிட்டு உக்காந் திருக்கலாம். இந்தப் பண்டிகையெ சந்தோஷமா நடத்திக்கணும்னு இருக்குது--எப்பவும் உங்களெ ஒண்ணும் கேட்டதில்லே. அந்த நாலு நாளும் வீட்லெ இருக்கணும் நீங்க. இந்த ஒரு தடவெயாவது எனக்காக...' எவ்வளவு வெக்கத்தெவிட்டு, எவ்வளவு ஆசையோடெ கேட்டேன்னு புரிஞ்சிக்க முடியுமா உன்னாலே? அப்படி ஒரு பெண் கேக்கவேண்டிய நிலையே வரக் கூடாது. புருஷனுக்கே அந்த நல்ல பழக்கம் இருக்கணும்! அவர் ஒண்ணும் சொல்லல்லே. சிரிச்சிட்டு பேசாம இருந்தார். என் விருப்பத்தெத் தள்ளிட மாட்டார்னு கர்வப்பட்டேன். போகிப் பண்டிகெ அன்னக்கி காலமெ எவ்வளவு சந்தோஷமா வேலெங்களெ ஆரம்பிச்சேன். தலெ முழுகற் தெல்லாம் முடிஞ்சது. டிபன் சாப்டுட்டு அவர் பேப்பர் படிச்சிகிட்டு உக்காந்திருந்தார். நான் சமயலறெலே வேலே செஞ்சிட்டிருந்தேன். ஒரு அரெமணி நேரம் ஆயிருக்கும். அவர் சமயலறெ* வாசப்படிகிட்டே வந்து 'ஒண்ணும் பொழுது போக மாட்டேங்குது பானூ!' என்றார்.

 

'ஒரு கால்மணி நேரம் உக்காந்திருங்க, இதோ வந்துட்றேன்'னு சொன்னேன்.

 

'அப்பப்பா! இப்படி கைகட்டிட்டு வீட்லெ உக்காந்திருந்தா போர் அடிக்குது. அப்படீ கொஞ்சநேரம் வெளியே போயிட்டு வர்றேன்.'

 

நான் ஆச்சரியத்தோடு தலெ எடுத்துப்பார்த்தேன். 'இப்பொ வெளியே போனா வந்தாப்போலத்தான்? குறெஞ்சது இந்தப் பண்டிகெ நாளுங்களாவது...'

 

'என்னவோ உன் கழுத்தறுப்பு - பண்டிகெ ஆனதுனாலேதான் பத்துபேர் சேர்றாங்க. இப்படி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.