(Reading time: 11 - 21 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

வீட்லெ உக்காந்துட்டு என்ன பண்ணச் சொல்றே?'

 

வீட்லே உக்காந்து என்ன பண்ணச் சொல்றதாம்! வீட்லேயே இருக்கற மனுஷங்க எல்லாரும் என்ன பண்றாங்க! சொன்னதெல்லாம் எந்தத் தண்ணியிலெ போச்சி? கோவம் வந்தாலும் நிதானமாகலவே சொன்னேன். ' நாமரெண்டு பேரும் இருந்தாலே உங்களுக்கு ஒண்ணும் செய்யத் தோணல்லேன்னு சொல்றீங்களே? நீங்க போயிட்டு நான் ஒருத்தியே இருந்தா எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க.'

 

'அதுக்குன்னு என்னெ உனக்குக் காவல் காக்கச் சொல்றியா என்ன? எங்கேயாவது பக்கத்து வீட்டுக்குப் போ!'

 

என் கண்லே யிருந்து கண்ணீர் வழிஞ்சது. 'வீட்லே இருக்க வேண்டியமனிதர் - நீங்க வீட்டெ விட்டு ஊர் சுத்திக்கிட்டிருந்தா நான் அவங்களெ இவங்களெ வேண்டிக்கிட்டுப் போறதா? பண்டிகெ நாளும் அதுவுமா நம்ம வீட்டுக் கதவெ மூடிட்டு யார் வீட்லே யாவது போய் உக்காந்தா நல்லா இருக்குமா? எல்லா வீட்டு ஆம்பளெங்களும் வீட்லெ இருக்கற்தில்லே? நம்ம ரெண்டு பேரும் சேந்து பண்டிகெ கொண்டாடணுங்கற என் ஆசெ எப்போ தீர்றது?'

 

'உன் கேள்விகளெ நீதான் மெச்சிக்கணும். எங்கேயும் போவல்லேன்னா பாபுவெ வெச்சிக்கிட்டு வீட்லேயே உக்காந்துக்கோ-- நான் மட்டும் பொம்பளெ மாதிரி உக் காந்திருக்க முடியாது.'

 

நான் ஒன்னும் பேசல்லே. கறிகாய் நறுக்கிக்கிட்டு தலை குனிஞ்சிட்டு இருந்தேன். கண்ணுலே யிருந்து தாரெ தாரெயாக் கண்ணீர் வழிஞ்சி விழுந்தது. தன்னெப் பெரிசா நினெச்சி வேண்டிக்கற மனெவி மக்களெ அலட்சியம் பண்ணிட்டு வெளியே பத்துபேருக்காகச் சீட்டாடும் அந்தப் புருஷனுக்கு அதுக்கு மேலெ என்ன சொல்றது? குறெஞ்சது அந்த நாளு நாளாவது அவரெ வீட்லெ இருக்க வெக்கணும்னு விரும்பன்து தப்பா? எங்களவரோட நான் பண்டிகெ சந்தோஷமாக் கொண்டாடணும்னு ஏங்கற்து அநியாயமா? அவ்வளவு சாதாரணமான கோரிக்கையெ ஏன் நிறெவேத்திக்க முடியாமெ போயிட்டுது?

 

நிறெஞ்சிருக்கும் கண்ணெ அப்பப்பொ தொடெச்சிக் கிட்டே பாபுவெப் பக்கத்லே வச்சிக்கிட்டு உக்காந்திருந்தேன். பத்து. பன்னண்டு... மூணு... அஞ்சி... எட்டு... பதினொண்ணு! நடு ராத்ரி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.