(Reading time: 11 - 21 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

பதினோரு மணிக்கு மீண்டும் வருகை! எழுந்து சாப்பாடு போட்டேன். காலமெ செஞ்ச புளியோதரெ, சவ்வரிசி பாயசம் அப்படியே இருந்தது. நான் ருசிகூட பாக்கலெ. வீட்டுக்கு வந்தாருங்கற சந்தோசம் ஒரு நிமிஷம்கூட இருக்கற்துக் குள்ளே, சாப்ட்ட கை ஆர்றதுக் குள்ளே திரும்பி டிரஸ் பண்ணிக் கிட்டிருக்கும்போது ... அந்த நிலையெ எப்படிச் சொல்றது? என் உடம்பு கோபத்தலேயும் துக்கத்தலேயும் நடுங்கிக்கிட் டிருந்தது. எதிர்பாராமெ மண்டெ வெடிச்சி அந்த மனுஷன் எதிர்லே நான் செத்துப்போயிட்டா... ஏதாவது அபூர்வ சக்தி அவரெ நிறுத்திட்ட...? அசரீரிக் குரல் ஏதேனும் அவரெக் கண்டிச்சா... என்னாகும்? போய்க்கொண்டிருக்கும் மனிதரின் கையெ நானே பிடிச்சிக்கிட்டேன். 'இவ்வளவு ராத்ரி... தனியா இருக்கறேன்... பாபுவோட... மறுபடியும் போறீங்களா?' அதற்கு மேலெ பேச வரல்லே.

 

'சீ! எதுக்கு இதுக் கெல்லாம் அழுது தொலைக்கறே! நானின்னா தேசாந்தரம் போறனா? சுதந்திரம் சமத்துவம் வேணும்னு லெக்சர் அடிக்கிறீங்களே! ஒரு ராத்ரி தனியா இருக்க முடியாது? ஒண்ணும் பரவால்லே கதவு மூடிட்டுப் படுத்துக்கோ.'

 

நான் ஆணவத்தோட உடனே பேசறதே நிறுத்திட்டிருக்கலாம். ஆனா அந்த மனுஷனெத் திருத்த வேண்டிய கட்டாயம், கடமெ எனக்கு இருக்குது. எவ்வளவோ சாந்தமாச் சொன்னேன். 'பகலெல்லாம் அங்கேயே இருந்தீங்க. ராத்ரிகூட என்னது சொல்லுங்க? இருபத்தி நாலு மணியும் வீட்டெ விட்டு என்ன அந்த ஆட்டம்?

 

'அதெல்லாம் எனக்கும் தெரியு மாவட்டும். நீ வாயெ மூடிக்கோ! எப்பவும் வீடு வாசல், மனெவி, மகன், பொழக்கடெ, கெணறு, தொடப்பகட்டெ, சாதம் சாப் பாட்டுத் தட்டு - எழவு! மத்த நாள்ளே எப்படியோ அந்த ஆபிசிலே மாட்டிக்கிட்டு மாரடிக்கிறோம். சமயலறையிலேயே விழுந்து தடுமாறி கிட்டிருக்கும் உனக்கு என்ன தெரியும் ஆம்பளெங்க பொழுதுபோக்கெப் பத்தி? பெரிசா கேக்க வந்துட்டே?'

 

'பொழுதுபோக்கு எங்கறது ஆம்பளெக்கு மட்டும் சொந்தம் இல்லெ. பொம்பளெக்கும் இருக்குது. அதெக் கவனிக்கணுங்கற நினெப்பே உங்களுக்கில்லே. அந்தச் சமயலறையிலே விழுந்து தடுமார்றதுக்கு முடியாமெ தானே உங்களெ வேண்டிக்கற்து?'

 

'அவசியமில்லே. அது உனக்குப் பழக்கமானது தானே!'

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.