(Reading time: 15 - 29 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

பின்னணியாகக் கொண்ட, உடலாசை தீர்ந்ததும் அழிந்து போகிற அற்பமான காதல் அல்ல. சேதுபதியிடம் இவள் கொண்டுள்ள நேசத்துக்கும் பாசத்துக்கும், அன்புக்கும் அக்கறைக்கும் முன்னால், வயதும் புறத் தோற்றமும் மிக மிக அற்பமானவை. வயதின் கவர்ச்சியும் அழகின் வசீகரமும் மங்கிப்போன பிறகு, வலிவிழந்து விட்ட பின்னர், காலம் கடந்த காலத்தில் தோன்றியுள்ள காதல் இது. அதனால்தான் சேதுபதியின் தோற்றத்தை அவளால் உருவகப்படுத்திப் பார்க்க இயலவில்லை.

ராஜாவைப் போலவே பார்வதியின் உறக்கமும் அடிக் கடி தடைப்பட்டுக் கொண்டிருந்தது. தூக்கம் கலைந்த போதெல்லாம் அவள் உறங்க முயன்று கொண்டிருந்தாள்.

உறங்கிய போதெல்லாம் சேதுபதியின் தோற்றத்தை உருவகப்படுத்த முயன்று கொண்டிருந்தாள்; உறக்கம் வந்தது. ஆயினும் அவளால் சேதுபதியின் உருவத்தைக் காண முடியவில்லை.

அன்று மாலை அவர் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவள் நெஞ்சத்தில் பதிந்து கிடந்தன. இன்ஷாரன்ஸ் பற்றிய தன்னுடைய அறியாமையை அறிய நேர்ந்த சேதுபதி என்ன எண்ணியிருப்பார் என்பதை நினைத்தபோது அவளுக்கு வெட்கமாயிருந்தது. நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குத்தானே?' என்று அதிமேதாவியைப் போல் தான் கூறியபோது, அவர் அலட்சியமாகச் சிரித்த சிரிப்பில் எத்தனைப் பொருள் பொதிந்து கிடந்தன!

'நீ மெத்த படித்தவளாயிருக்கலாம்; பட்டங்கள் பெற் றிருக்கலாம்; அறிஞர்கள் பலரோடு வாதாடி வெற்றி பெற்றிருக்கலாம், கல்வி கேள்விகளில் வல்லவளா யிருக்கலாம். ஆனாலும் இந்தச் சின்ன விஷயம் உனக்குத் தெரிய வில்லையே, என்று அவர்தம் சிரிப்பின் மூலம் கூறாமல் கூறி விட்டாரே! இப்போது அதை எண்ணிய பார்வதிக்கு வெட்க மாயிருந்தபோதிலும், கூடவே இன்பமாகவும் இருந்தது!

என்னுடைய பெரு மதிப்புக்கும், நேசத்துக்கும் பாத்திர மாகியுள்ள சேதுபதி தானே சிரித்தார்? அந்தச் சிரிப்பு என்னுடைய அறியாமையைப் பற்றியதுதானே? என் அறியாமையை எள்ளி நகையாடும் அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுத்துக் கொண்டதால் அல்லவா அவர் அவ்வாறு சிரித்தார்? அப்படியானால் அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது; அக்கறை இருக்கிறது; ஆசை இருக்கிறது; பாசமும், பரிவும் இருக்கின்றன. அந்தச் சிரிப்புக்கு இதெல்லாம்தான் பொருள். சேதுபதியின் சிரிப்பு அவள் காதுகளில் ரீங்காரமிட்டது. அந்தச் சிரிப்பின் இனிமையிலே, பாசத்திலே, பரிவிலே என்றுமே அனுபவித்தறியாத சுகம் இருப்பதை அவள் உணர்ந்தாள். அந்த உணர்ச்சீ களை யெல்லாம் ஒன்றாகத் திரட்டிப் புன்முறுவலாக வெளி யிட்டுக் கொண்டிருந்தன அவளுடைய இதழ்கள்.

ணி ஒன்பது இருக்கும். ராஜாவுடன் டாக்ஸியில் வந்து இறங்கிய பாரதி, நெஞ்சு படபடக்க

One comment

  • :clap: nice epi.moothorgal solli irukkiraargale katrathu kaimmannalavu,kallathathu ulagalavu endru.athai pinpatri nadappom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.