(Reading time: 11 - 21 minutes)
Muthu Sippi
Muthu Sippi

போலீஸுக்கு? சிவனே என்று உள்ளோடு கிடப்பவனை இதுகள் நடு வீதிக்கு இழுத்து விடும் போல் இருக்கிறதே! ஹும்" என்றார் சேஷாத்திரி பயங்கரமாகக் கண்களை உருட்டி பாலுவை விழித்துப் பார்த்தவாறு.

  

கல்யாணராமன் பாலுவின் கைகளைப் பற்றித் தம் அருகில் அழைத்தார்.

  

”ஏண்டா பாலு! நீ போய் இவர்களைப் கூப்பிட்டாயா அல்லது அவர்கள் உன்னை வந்து கூப்பிட்டார்களா? உண்மையைச் சொல்" என்று கேட்டார், அங்கு நின்றிருந்த பையன்களைச் சுட்டிக் காட்டி.

  

”அவன் தான் மாமா எங்களை வந்து கூப்பிட்டான்" என்றான் சேஷாத்ரியின் மகன்.

  

அவன் என்ன உளறி விடுவானோ என்று அவன் தகப்பனார் கவலையுடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

  

”டேய்! டேய் பொய் சொல்லாதே! கிணற்றிலே நீச்சல் சொல்லித்தரேன்னு நீ தானேடா பாலுவைக் கூப்பிட்டே?" என்று மற்றொரு பையன் அதை ஆட்சேபித்தான்.

  

கல்யாணராமனுக்கு விஷயம் விளங்கி விட்டது. எல்லோருமாகத்தான் கிணற்றில் இறங்கி அமர்க்களம் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் பழி சுமத்துவதற்குப் பாலு ஒருவன் தான் அகப்பட்டான் அந்த ஊராருக்கு!

  

"சார்!" என்று சேஷாத்ரியைக் கூப்பிட்டார் அவர்.

  

"இதிலே பெரியவர்கள் சண்டை போட விஷயமே ஒன்றும் இல்லை, கிணற்றங்-கரையில் இவர்கள் பேசிக் கொண்டு கிணற்றிலே இருக்கும்போது ஒரு கட்சியாக இருந்தார்கள். நடுவில் ஏதோ சண்டை வந்து விட்டது. இப்பொழுது இவர்களுள் ஒரு எதிர்க் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இன்னும் சற்று

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.