(Reading time: 16 - 31 minutes)
Vata malli
Vata malli

  

பிள்ளையார், அந்தக் கதவைத் தாழிட்டார். அவனைப் பெறுவதற்கு முன்பு எப்படி உடம்பில் ஒரு முறுக்கு வந்ததோ, அப்படி அவருக்கு வந்தது. ஒரே எத்து, “எய்யோ...” என்று சுயம்பு கீழே படுத்தான். ஆறுமுகப் பாண்டி, அவன் கழுத்தில் தன் பாதத்தை வைத்துக் கொண்டு கீழே போட்டு அழுத்தினான். அதட்டிக் கேட்டான்.

  

ஏல இப்பச் சொல்லு. இனிமேலும் சேல கட்டுவியா...”

  

கட்டுவேன். எக்கா... எய்யோ.. என் கழுத்துப் போச்சே... என் தலை போச்சே!”

  

இவன் இப்படிச் சொன்னாக் கேட்க மாட்டாண்டா. இரும்புக் கம்பியை எடுத்து சூடு பண்ணிட்டு வாடா...”

  

பலமாகத் தட்டப்பட்ட கதவைத் திறந்து கொண்டு, ஆறுமுகப்பாண்டி வெளியே ஓடினான். உள்ளே அலறியடித்து ஓடி வந்த மரகதமும், வெள்ளையம்மாவும் சுயம்புவைப் புரட்டிக் கொண்டிருந்த பிள்ளையாரைத் தடுக்கப் போய், தாங்களும் அடி வாங்கினார்கள். அவரோ தனது கையும் காலும் ஒடியப் போவது போலவும், ஒடித்துக் கொள்ளப் போவது போலவும் இயங்கினார். சுயம்புவின் வாயிலே கால்குத்து. முகத்திலே கைக்குத்து. இடையே வந்த பெண்களுக்கு விலாக்குத்து. ஒரு பெரிய மரத்தைக் குறிவைத்துக் கோடாரியால் இடைவெளி கொடுக்காமலே அரைமணி நேரம் முன்னாலும் பின்னாலும் இயங்கும் அந்தக் கையே, இப்போது ஒரு கோடாரியாகிக் கீழே மரம்போல் கிடந்த சுயம்புவை வெட்டிக் கொண்டிருந்தது. கல்லு மண்ணான கரடு முரடு நிலத்தில் கூட, ஒரு அடி ஒரு விநாடி கூட நிற்காமல் மணிக்கணக்கில் உழவு செய்யும் அவர் கால்கள், அவன் உடம்பை உழுது கொண்டிருந்தன. சுயம்புவும் இப்போது புலம்புவதை விட்டுவிட்டு, ஒரு வைராக்கியத்தோடு அப்படியே கிடந்தான். இதற்குள் ஆறுமுகப்பாண்டி வந்தான். வலது கையில் சாதுவான மரப்பிடி அதன் முனையில் நீண்டு வளைந்த கம்பி! அதன் முன்பக்கம் ரத்தக்கட்டி, பிள்ளையார் சுயம்புவைத் தூக்கி நிறுத்திய படியே கேட்டார். “ஏலே சேலைய எடுக்கிறியா...”

  

சுயம்பு, இப்போது தலையை மாட்டேன் என்பது போல் ஆட்டினான்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.