(Reading time: 13 - 26 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 01 - சு. சமுத்திரம்

  

தோளுக்கு மேலே பின்புறமாய் வளைந்திருந்த ஒரு கையில் தொங்கிக்கொண்டிருந்த கோணிப் பை, அவளது முதுகுக்கு உறைபோல ஒட்டிக்கொண்டு, அங்குமிங்கும் ஆடியத. கண்ணாடி மாதிரியான கோணி, அடியில் கனத்துக்கிடந்தது. மறு கையோ மூன்றடி நீளமும், முருங்கக்காய் பருமானமும் கொண்ட ஒரு இரும்புக் கம்பியை, அங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் சர்தார்ஜி காப்புகள் மாதிரியான 'கங்கண' வளையல்கள். சட்டை என்று தள்ளவோ, ஜாக்கெட் என்று கொள்ளவோ முடியாத மேல் பாக உடுப்பு, முட்டிக் கைகள் வரை, முட்டி, இடுப்பு வரைக்கும் நீண்டு, இடையை பெல்ட்போல் சுற்றிக்கொண்டிருந்தது. அழுக்கே ஒரு நிறமாகக் கொண்டது போன்ற களிமண் நிற ஆடை. இடுப்புக்குக் கீழே இருந்து குதிகால்வரை வியாபித்த சிமெண்ட் நிறப் பாவாடை... அதில் இடையிடையே சதுரஞ் சதுரமான சின்னச்சின்ன கண்ணாடிகள். வாழைக் குலையிலிருந்து மேல்போக்காய் விடுபட்ட வாழை இலை போன்று மார்பில் பட்டும் படாமலும் இருந்த தாவணி. காதுகளில் கம்மல்களும், அந்தக் கம்மல்களில் தொங்கிய வளையங்களுமாய்...

   

சரோசா, அந்தப் பங்களாவில் ‘படிதாண்டிய' பெண் போல் நாணிக்கோணி நின்ற தென்னை மரத்தில், கைக்கு எட்டாத. உயரத்தில் ஒரு தேங்காய் குலை மீது கண் வைத்து எம்பி எம்பிக் குதித்தாள். அவள் கைபட்டு, கைபட்டு, அது மேலே போனதே தவிர அந்தக் கைக்குள் அடங்கவில்லை. ஏதோ, தப்பு செய்துவிட்டது போல தலையில் அடித்துவிட்டு, பிறகு கையில் இருந்த இரும்புக் கம்பியை ஓங்கி, ஒரு 'குலையில்' ஒரு போடு போட்டாள். ஐந்து தேங்காய்கள் அந்த வீட்டுக்கு உள்ளேயும், ஆறு வெளியேயும் விழுந்தன. ஆறு தோங்காயையும் பொறுக்கி கோணிக்குள் போட்டுக் கொண்டு, போகப் போனவளுக்கு, 'அம்மாம் பெரிசு' தேங்காய்களை வீட்டுக்குரியவர்களுக்கு விட்டுக் கொடுத்துப் போக மனமில்லை. கீழே குனிந்து, இரும்பு கேட்டின் ஓட்டைகள் வழியாக உள்ளே பார்த்தாள். வெளியே நடக்கும் எதையும் பார்க்கப் போவதில்லை என்பதுபோல, அந்த வீட்டுக்குள்ளேயே இருந்த சோபா செட்டு ஆசாமிகள் வாயும், வயிறுமாய், டி.வியும், கண்ணுமாய், சாய்ந்து கிடந்தார்கள்.

   

சரோசா, ஆமை நகர்வதுபோல, கேட்டை நகர்த்தி, உள்ளே போனபோது, தாழ்வாரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த, சடைநாய், பலமாய் குரைத்தது. சமையல் அறைக்குள் தட்டுமுட்டு சாமான்களோடு, தடுமாறிக் கொண்டிருந்த மாமி, அது 'டி.வி. நாய்' என்று அனுமானித்து, எட்டிப் பார்க்கவில்லை. அந்தச் சமயம் பார்த்து மிக்ஸியை தட்டிவிட, அது போட்ட கூச்சலில், நாய் சத்தம் உள்ளே இருந்தவர்கள் காதில் உரசவில்லை. இதற்குள், சரோசா ஆறு தேங்காய்களோடு 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.