(Reading time: 14 - 27 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

"பேசறதுக்கு என்ன இருக்கு? நான வாழ்கையிலே தோற்றுப் போனவ. ஆனால், ஒரு நிர்ணயத்தோடு அதில் எதிர் நீச்சல் போட்டு ஒழுங்கா வாழ நினைக்கிறேன். அவர் தான் என்னை அடிக்கடி. 'உன் இஷ்டம் போல யார் கூட வேணா நான் ஒண்ணும் கண்டுக்க மாட்டேன் நான் உதவாக்கரைன்னு தெரிஞ்சப்ப, உன்னை அடக்கி வைக்க எனக்கு உரிமையில்லைன்னு' பேசிண்டிருக்கார். உங்காத்துக்காரர் மேலே கூட அவருக்கு சந்தேகம். ஊர்லே சாயிராம்னு ஒருத்தர் மேலேயும் சந்தேகம். அவர் இங்கேயே என்னைத் தேடிண்டு வந்துட்டார். நான்தான் இதிலெல்லாம் எனக்கு இருந்த ஆசை எப்போதோ போயிடுத்து. இப்ப நான் இந்த டம்புக்கு பிரதானம் கொடுக்கலை. சுத்தமா இருக்க நினைச்சு அதைப் பழக்கப் படுத்திண்டு வரேன். அவர் என்னை அப்படியெல்லாம் தூண்டாதீங்கோன்னேன். அப்புறமா அவர் என்னோட இரண்டு நாள் பேசாம இருந்தார். என் புடவைகளோட இந்த பாங்க் புஸ்தகம் இருக்கு. ரொக்கமா ஐம்பதினாயிரம் எம்பேர்லே போட்டிருக்கார்.

  

பூரணி திறந்தவாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.

  

"வேறே கடுதாசி கிடுதாசி ஒண்ணும் இல்லை."

  

"எங்கே போயிருப்பார்?”

  

"அதானே புரியலை. நான் எப்படி தனியா இவ்வளவு பெரிய விட்டிலே இருக்கிறது? பயமா இருக்கு .."

  

"ஒண்ணு பண்ணு. ஊர்லேந்து உன் அம்மாவை வர வழைச்சு வைச்சுக்கோ. பாவம், இந்தத் தள்ளாத வயசுலே யாராத்துலேயோ சமைச்சிண்டிருக்கான்னு சொல்றியே..."

  

“அப்படித்தான் பண்ணனும் .."

  

இவர்கள் பேசிக் கொண்டிருந்த போது பாலு வந்தான். இப்போதெல்லாம் அவனுக்கு நர்மதாவைப் பற்றி ஒன்றும் சுவாரஸ்யப்படவில்லை. அன்று அவன் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட பிறகு அவளிடம் அவனுக்கு ஒரு பயமே ஏற்பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.