(Reading time: 14 - 27 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

அவளுக்குக் கடிதம் எழுதினான்.

  

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவளுக்குக் கடிதம் வந்தது.

  

'நான் உயிரோடு இருக்கிறேன். நீ சுமங்கலிதான் பயப்படாதே. நான் எங்கங்கோ அலைந்து கொண்டிருக்கிறேன். இதை ஒரு சோதனைபோல நடத்தவே அங்கிருந்து கிளம்பினேன். என்னுடைய பிரிவுக்கு அப்புறம் உன் மனசிலே படியப் போகும் எண்ணங்கள் வேறாக இருக்கலாம் என்று எனக்குள்ளே ஒரு அனுமானம். அது பொய்யோ, நிஜமோ, நான் காசிக்குப் போய் இருத்தேன். இந்த க்ஷேத்ரத்தில் சங்க மிருக்கும் மனோ விகாரங்கள், மனோ லயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனுஷாள்ளே முக்கால்வாசிப்பேர் நிம்மதிக்காக அலைவதும் புரிந்தது ஏதோ ஒரு குறை எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. எனக்கு எப்போதாவது திரும்பி வர வேண்டும் போல் இருந்தால் ஊருக்கு வருவேன்,  இல்லை என்றால் இல்லை. என் கையில் கொண்டுவந்த பணம் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு. அதுவும் செலவழிந்து விட்டால் அப்புறம் என்ன பண்ணுவேன் என்று யோசிப்பாய். பரந்த இந்த நாட்டில் என் பொழுது எப்படியோ போய்விடும். எங்காவது வேலைசெய்வேன், கர்மண்யவே அதிகாரய... என்கிறான் பசுவான். வேலைக்குக் கூலி கிடைக்க அவன் பார்த்துக் கொள்வான். உன்னோடு வாழ்ந்த இந்த ஆறேழு வருஷங்கள் என் வாழ்க்கையில் இனிமையான காலம் அதற்கு முன்பும் நான் அவ்வளவு இனிமையோடு இருந்ததில்லை பின்பு எப்படி இருக்கப் போகிறோனோ. நர்மதா! என் இனியவளே! புண்ணிய நதியின் பெயரைத் தாங்கியவளே! அவளைப் போல புனிதமானவள் நீ. நன்றாக இரு

  

கல்லாகச் சமைந்து உட்கார்ந்திருந்தாள் அவள் வெகு நேரம். தாபால்காரர் பதினோரு மணிக்குக் கடிதம் கொண்டு வந்து கொடுத்தார். ஒரு மணி வரை அந்தக் கடிதத்தையே திருப்பித் திருப்பிப் படித்தாள். பிறகு எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறது என்று சுவரின் மேல் முத்திரையைக் கவனித்தாள். அழிந்த நிலையில் சந்த்ராபூரோ, சீதாபூரோ எதுவுமே சரியா தெரியாதபடி எழுத்துக்கள் காணப்பட்டன

  

வெங்குலட்சுமி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். உழைத்து உழைத்து ஓடாகிப்போன உடம்பு சுகம் இன்னதென்று அறியாத மனம். சுகமாக மகளின் வீட்டில் இரண்டொரு மாதங்களாகத் சங்கியிருப்பதில் மிகவும் சந்தோஷப் பட்டாள். வித விதமாகச் சமைத்தாள். தேங்காயைப் பறிக்கச் சொன்னாள். நெற்களஞ்சியத்தில் நெல் நிரம்பி வழிவதைப் பார்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.