தன்னுடைய நிலைமை நர்மதாவுக்கு நன்றாகப்பு ரிந்தது. தகுந்த துணை என்று சொல்லிக் கொள்ள அம்மாவைத் தவிர வேறு யாருமே இல்லை.
சாயிராம் என்னென்னவோ கேட்டான்.
"எப்பப் போனான், என்னிக்கி வருவான்? பணம் காசு குடுத்துட்டுப் போயிருக்கானா? இல்லையன்னா கிளம்பு. அன்னிக்கே சொன்னேன். லட்சணத்துக்கு இத்தனை நாள் பெரிய ஸ்டாரா ஆகியிருக்கலாம், ஹூம்..."
அவள் இதெற்கெல்லாம் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
“நீங்க இந்த வீட்டிலே இருக்கிறது சரியில்லை. ஊருக்குப் போங்க''
போய்விட்டான். அம்மாவும் பெண்ணும் சமைத்தார்கள். சாப்பிட்டார்கள், பேசினார்கள். அவள் தினமும் அவனைப் பற்றி ஏதாவது தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் கொண் டிருந்தாள்.
பட்டப்பா அன்று கிளம்பியவன் நேராக வாரணாசிக்குப் போனான். மனம் போன படி சுற்றித் திரிந்தான். அவனைப் போல அங்கு எத்தனை பேர்? மன சாந்தியைத்தேடி, கங்கா ஸ்னானம் பண்ணுவதற்கு, மூதாதையர்களுக்கு சிரார்த்தம் பண்ண, வாழ்க்கையை வெறுத்தவர்கள், ஊரில் வீடு வாசல் மனைவி குழந்தைகள் இருந்தும் ஏதோ ஒரு பிரமை தங்களைப் பிடித்து ஆட்டுவதுபோல் உணர்ந்து அதிலிருந்து விடுதலை பெறத்துடிப்பவர்கள்.
அவன் ஒருநாள் மணிகர்ணிகை கட்டத்தில் இருந்தான். இன்னொரு நாள் கேதர் கட்டத்தில் இருந்தான். அடுத்த நாள் ஹரிச்சந்திர கட்டம். அப்புறம் ஹனுமான் கட்டம் இன்னொரு நாள் அஸ்ஸி கட்டம், ஆஞ்சநேயர் கோயிலில் உட் கார்ந்திருந்தான்.
அந்தக் கட்டத்தில் பிணம் தின்னும் கழுகுகள் பிணங்களைக் கொத்தித் தின்பதை மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தான்.
"உடம்புக்கு இவ்வளவு தானா மதிப்பு? அதான் நர்மதா சொன்னாளே.'' திடும்மென்று அவன்