(Reading time: 14 - 27 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

மகிழ்ந்தாள். பெண் இப்படி இருக்கிறாளே என்று அவளுக்குத் தோணவில்லை

  

''ஊரை விட்டு ஓடிப்போனா அவ என்ன பண்ணுவாள்? இத்தனை சொத்தையும் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை.”

  

இதைக்கேட்டு பூரணி அதிசயித்தாள். ஊரிலே அவளுடைய சிநேகிதி ஒருத்தி பால்யத்தில் விதவையான போது துக்கம் கேட்க வந்த ஒரு அம்மாள், "வெறுமனே அழுதுண்டிருக்காதே. கொஞ்சமாவா வச்சுட்டுப் போயிருக்கான்? மூணு லட்சமாமே? தங்கம் போல இரண்டு குழந்தைகள் இருக்கு ஹும் " என்று வெகு அழகாக துக்கம் விசாரித்தாள்.

  

இதெல்லாம் உலகத்தில் சகஜம் என்பது போல பூரணி சிரித்தபடி, போய்விட்டாள்.

  

''இத்தனை சொத்தையும் கட்டி ஆள தன்னால் முடியாது. அம்மாவுக்கு வயசாகி விட்டது. அதோடு கங்கம்மாவின் காசை எடுத்து என் அண்ணனுக்கும், அவன் மனைவிக்கும் கொடுப்பது தர்ம விரோதம். இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்!

  

மறுபடியும் அவள் பல மாதங்களுக்கு அப்புறம் பாலுவைத் தேடிப்போனாள். கடிதத்தைக் காட்டினாள். பாலு நெகிழ்ந்து போனான். தான் எத்தனை அற்பமானவன் என்று யோசித்தான். பட்டப்பாவால் ஆளமுடியாத பெண்ணை தான் அனுபவித்து விட வேண்டும் என்று தீவிரம் கொண்டிருந்தது அவன் நெஞ்சை அறுத்தது. அவனா ஆண்மையற்றவன்? உண்மையில் அவன் தான் நல்ல ஆண்மகன். மனைவியைப் பலர் முன்பாகக் கோர்ட் கொத்தளம் என்று கொண்டு வந்து நிறுத்தாமல், பெருந்தன்மையுடன் அவளுக்கு விடுதலை வழங்கியவன்.

  

நர்மதா தலைகுனிந்து நின்றிருந்தாள். சொட்டுச் சொட்டாகக் கண்ணீர் பூமியில் விழுந்து தெரித்துக்கொண்டிருந்தது. பூரணி நன்றாகத் தேம்பி அழுதாள்.

  

''இப்போ நான் என்னசெய்யணும்?" என்று கேட்டான் பாலு.

  

"ஒரு வக்கீலப் பாத்து, என் பேரில் அவர் போட்ட ரொக்கத்தைத் தவிர, மற்றதை கங்கம்மா பேரில் ஒரு டிரஸ்ட் ஆக மாத்தணும். ஆஸ்பத்திரிகளுக்கு, கல்வி நிலையங்களுக்கு,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.