வியாதி வந்திருந்த போது யாருமே கவனிக்க வில்லையாம். நாளைக்கு இரண்டு தடவைகளாவது 'பிறந்த வீட்டுக்குப் போவது தானே' என்று மீனாட்சி எரிந்து விழுந்து கொண்டிருந்தாளாம். நடேசன் சமாசாரம் தான் உங்களுக்குத் தெரியுமே. எருமை மாட்டின் முதுகில் மழை பெய்கிற மாதிரி எதையும் லட்சியம் பண்ணமாட்டார் அவர் கொளுந்தனின் கல்யாணத்துக்குக் கூட இராமல் குழந்தையை அழைத்துக் கொண்டு தமையன் வீட்டிற்கு வந்திருக்கிறது அந்தப் பெண்" என்றாள் விசாலாட்சி.
காமு, சுவாமி விளக்கைத் துடைத்துத் திரியிட்டு எண்ணெய் ஊற்றிக் கொண்டே இதைக் கேட்டுக் கொண் டிருந்தாள். "சங்கரன் படித்தவராக இருந்தாலும். படித்தவர் என்று பெருமையாகக் காட்டிக் கொள்ள மாட்டார். நம் தன்னிந்தியக் கலாசாரங்களில். பற்றுடையவர். நீலா அவள் எப்படி இருப்பாளோ? பஞ்சாபி உடையாமே? கிள்ளுக் கிள்ளாய்க் கொசுவம் வைத்துக் கண்ணைப் பறிக்கும் ரகங்களில் புடவைகள் வாங்கிக் கட்டிக் கொண்டால் அழகாக இராதா?" என்று காமு நினைத்துக் கொண்டாள்.
ராமபத்திரய்யரின் காதில் விசாலாட்சி சொன்னவை விழுந்ததாகத் தெரியவில்லை. சரிக்குச் சரியான சம்பந்தம் வேண்டும் என்றுதானே, அதில் உள்ள குறைகளைக் கூடப் பாராட்டாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறார் கள்? தங்கப் பதுமை மாதிரி நிற்கும் காமுவைத் திரஸ்கரித்த தற்கும் இந்த அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வு மனப்பான்மை தானே காரணம்? ராமபத்திரய்யர் ஏற்கெனவே ஏழைதான். ன்றும் ஏழையாகத்தான் இருக்கிறார். ஆனால், குருடனை, "நீ குருடன், நீ குருடன்" என்று கத்தினால் அவன் மனம் எவ்வளவு புண்படும்? அது போலவே சங்கரன் காமுவைத் திரஸ்கரித்து நீலாவை மணந்து கொண்டது ராமபத்திரய்யரை, "நீ தரித்திரன், நீ ஏழை" என்று யாரோ ஏசுவதுபோல் அவருக்குத் தோன்றியது. மனத்தில் எழும் உணர்ச்சிகளை வாய் விட்டுக் கூறாமல்சுவாமி படத்து, அருகில் தீபம் ஏற்றி விட்டு உட்கார்ந்து, "சியாமளா தண்டகம்" படிக்கும் பெண்ணை காமு!" என்று கூப்பிட்டார் உருக்கமாக.
“ஏன் அப்பா?" என்று ஆதுரத்துடன் கேட்டாள் காமு தகப்பனாரைப் பார்த்து.
''காமு! சங்கரன் உன்னை ஏமாற்றியதற்கு நீ வருத்தப் படவில்லையா அம்மா? உனக்கு அது வருத்தமாக இல்லையா?'' என்று கேட்டார் அவர். விசாலாட்சி அப்பொழுது அங்கு இல்லை. உள்ளே சமையலறையில் வேலையாக இருந்தாள்.