மீனாட்சி அம்மாள் தன் பெரிய உடம்பைக் குறுக்கிக் கொண்டு, சுண்டைக்காய்போல் முகம் வற்ற உள்ளே போய் விட்டாள். "பார்த்தாயா அவள் பேசுகிறதை?" என்று அழ முடியாத குறையாக ருக்மிணியிடம் சொல்லிக்கொண்டாள்.
"பார்க்கிறது என்ன? பெரிய இடத்து சம்பந்தம் எல்லாம் அப்படித்தான் இருக்கும்!" என்று சர்மா ஒரு போடு போட்டார் மனைவியைப் பார்த்து.
“இருக்கும், இருக்கும்! என்னை யார் என்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. நன்றாக இருக்கிறதே. மட்டு மரியாதை இல்லாமல்! ஆகட்டும்! சாயங்காலம் சங்கரன் அவாள் வீட்டுக்குப் போகிறதைப் பார்க்கிறேன். இவனுக்கு என்ன சுரணை இல்லையா? பெண்டாட்டி வா என்று காரை அனுப்புகிறது, இவன் பறந்து கொண்டு ஓடுகிறது?" என்று பெரிதாகக் கத்தினாள் மீனாட்சி அம்மாள்.
"பத்துவருஷம் குடும்பத்தின் கஷ்டசுகங்களைப் பகிர்ந்து சகித்து வாழ்ந்து வந்த சம்பகத்துடனும் சண்டை, நேற்று கல்யாணம் ஆகி, இன்றோ நாளையோ புக்ககம் வரவிருக்கும் புது நாட்டுப் பெண்ணிடமும் சண்டை என்று சமையல் அறையில் வேலையாக இருக்கும் சமையற்கார மாமி நினைத்துக் கொண்டாள்.
தன் கட்சியை யாரும் ஆமோதிக்கவில்லை என்பது தெரிந்ததும் மீனாட்சி அம்மாள் சமையலறைப் பக்கம் வந்தாள். சம்பகம் இருந்தபோது இருந்த சமையலறையாக இல்லை அது. சாமான்கள் வைத்திருக்கும் டப்பாக்களின் மேல் தூசி படிந்து மங்கிப் போய் இருந்தது. கண்ணாடி ஜாடிகளில் ஊறுகாய் சுண்டி உலர்ந்து கிடந்தது. குழாய் அடியில் சற்றே தவறினால் வழுக்கி விழுந்து விடும்படி பாசி படிந்து கிடந்தது. இரண்டு வேளை சமைத்து, இடை வேளை சிற்றுண்டி காபி போட்டு விட்டு, சலையற்கார மாமி கதை, புராணம் கேட்க எங்காவது போய் விடுவாள். சமையலறையைத் துப்புரவாக ஒழித்து வைக்க வேண்டும் என்று அவளுக்கு என்ன அக்கறை?
வீட்டில் இருக்கும் மற்றப் பெண்கள் புடவைகளைப் பற்றியும் நகைகளைப் பற்றியுமே பேசிப் பொழுதைக் கழித் தார்கள். சாமான் அறையில் மூலைக்கு மூலை தேங்காய் உரித்த நாரும், குப்பையும் இறைந்து கிடந்தன. மாதத்துக்கு இரண்டு தடவைகள் அந்த அறையைச் சுத்தம்