பரிமளா:- நண்பரே! நான் இனி நாடக மேடையில் நடிக்கப் பிரியப்படவில்லை. என் மனம் முற்றும் முறிந்து விட்டது. என்னுடைய தற்போதிய நிலைமையில் நான் எனது வாழ்க்கையைக் கூட வெறுக்கக் கூடியவளாக இருக்கிறேன். நாடகம் நம்மைச் சேர்த்தது. அதுவே நம்மைப் பிரித்தது. இப்போதே முதலாளி வந்திருந்தார். அவரிடம் சகலமான விஷயங்களையும் பேசி முடித்தாய் விட்டது. கடைசியாக ஒரு நாடகம் நடிக்க இச்சையுற்றார்; அதற்கு மட்டும் இசைந்தேன். நான் முதலில் நாடக அரங்கத்தில் தோன்றியது வள்ளியம்மையாக; அதே வேடத்துடன் மறைகிறேன்" என்றாள்.
------
இதைக் கேட்ட கேசவன் உண்மையிலேயே தன்னை யறியாத விதமாய்க் கண்ணீர் உதிர்த்தான். பரிமளா! உன்னைப் பிரிய வேண்டுமா! உன்னைப் பாராதிருக்க வேண்டுமா! இவ்விதமான ஏற்பாடுகள் உண்மையில் நடந்தேறி விட்டனவா! என்ன ஆச்சரியம்! இந்த நான்கு வருடங்களாக நாம் ஒன்றாக நடித்துப் பிரியமான நண்பர்களாகும்படிச் செய்த கடவுள் நம்மைப் பிரித்து விடவா எண்ணி விட்டார் ! ... பரிமளா !... பரிமளா ["....... என்று மேலே பேச மாட்டாது அவள் முகத்தை நோக்கியவாறு தம்பித்து விட்டான்.
கேசவனின் ஆழ்ந்த அன்பையும், பரிதாபகரமான நிலைமை யையும் கண்ட பரிமளா மனமுருகினாள். அவள் தன்னை யறியாத துக்கமேலிட்டால் தன்னிரு கரங்களினாலும் தன் முகத்தை மூடிக் கொண்டு கவிழ்ந்தவாறு மேஜையின் மீது சாய்ந்தாள். பரிமளாவின் கண்ணீர் மேஜையின்மீது சொட்டி அதை நனைக்க வாரம்பித்தது. அன்றைய மனோ வேதனையினால் அவள் தலை கூட வாராதிருந்ததனால் சிகை தாறுமாறாகக் கலைந்து கிடந்தது. இத்தனை இளம் பிராயத்தில் இச் சிறுமி உலகானுபவம் முற்றும் விசன ரூபமாயறிந்து கலங்க நேரிட்டதை எண்ணிக் கேசவன் மனந்தாங்காது வருந்துகிறான். "பரிமளா! பரிமளா! நான் இங்கு இப்பொழுது எதற்கு வந்தேன், எவ்விதம் முடிந்தது. ஐயோ! என் மனத்தில் என்னரிய தாயாரையும், சகோதரிகளையும் எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தேன். நேற்றிரவு கண்ட கனவினால் இன்று முற்றும் விசனக் கடலில் மூழ்கினேன். என் மனத்தின் துயரத்திற்கு ஓர் ஆறுதல் செய்து கொள்ளும் பொருட்டு இங்கு வந்தால் உனது இனிய சங்கீதத்தையும், இன்ப மொழிகளையும் கேட்டு மகிழலாம் என்ற எண்ணத்துடன் வந்தேன். வந்த விடத்திலோ எனது வேதனையை விடப் பதின் மடங்கு அதிகரித்த மனக் கிலேசத்தை யடைந்து விட்டேன். என்