பின்னரும் என் சவங்கூட உன்னை மறக்க முடியாது. என்னாவியைக் கொடுத்தேனும் உன்னைக் காப்பாற்ற நான் முயற்சி செய்வேன். உன் கண்கள் நீரைக் கக்கவும், மனம் விசனத்திலாழவும், தேகம் மெலிந்து வாட வும், முகம் சோர்ந்து வதங்கவும் நான் ஒரு போதும் பார்த்துச் சகிக்க மாட்டேன். என் மனத்தின் உண்மையை நீ அறிந்திருப்பினும் சரி; அறியாதிருப்பினும் சரி கடவுளறிய நான் உனக்கு என்னாலான உதவியைச் செய்து காப்பாற்ற ஒரு போதும் பின்னடையேன், பரிமளா ! நீ பயப்படாதே. நான் ஏதோ காரணமாகத் தான் சொல்கிறேன்." என்று நயமாகக் கூறினான்.
பரிமளா ஏதும் பதில் பேசவில்லை. உடனே சகுந்தலா வீதியில் சென்று அந்த மனிதனிடத்தில் கேசவன் சொல்லியது போலச் சொல்லி விட்டாள். அம் மனிதனும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றான். பிறகு கேசவன் "பரிமளா! நீ என்னுடன் சற்று எஜமானர் வீட்டிற்கு வருகிறாயா! அன்றி நான் மட்டும் சென்று வாட்டுமா?" என்றான். பரிமளா தானும் வருவதாகத் தெரிவித்தாள். அதன் பிறகு இருவரும் வண்டியிலமர்ந்து முதலாளியின் வீட்டிற்குச் சென்றார்கள்.
-------
இவ்விருவரையும் கண்ட முதலாளி மிக்க ஆச்சரியமடைந்து "என்ன பரிமளா! கேசவா! இருவரும் ஒன்றாக எங்கே வந்தீர்கள்? விஷயம் என்ன! உட்காருங்கள்." என்று அன்போடு கூறினார். உடனே இருவரும் நமஸ்காரம் செய்து விட்டு உட்கார்ந்தார்கள்.
கேசவன்:- தந்தையே! எங்களிருவருடைய போஷகராகிய நீங்கள் இருக்கையில் எங்களுக்கு ஒரு விதமான குறைவு மில்லை. இன்று சற்று முன்னர் இப்படி நடந்தது. நான் இப்படிச் சொல்லியனுப்பினேன்- என்று நடந்த விஷயங்களை எல்லாம் கூறினான்.
இது கேட்ட பொன்னுசாமி ஆச்சரிய மடைந்து "அப்படியா! அந்த ஆசாமி யார் தெரியுமா! அவனை இன்னாரென்று காண முடிய வில்லையா! சரி; இருக்கட்டும்.. என்று சில விஷயங்களை அவ்விருவருக்கும் சொல்லி விட்டு அவர்களுடன் தானும் புறப்பட்டுப் பரிமளாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அனேக ஏற்பாடுகள் ஆயின.
இரவு மணி ஒன்பது அடித்தது, பரிமளா தன்னறையில் உட்கார்ந்திருந்தாள். அப்போது ஒரு