பொன்னுசாமியிடம் சகஜமாக இருக்கக் கூடியவனாகையினால் "பெரியவரே! விஷயத்திற்கென்ன குறைவு! இதோ இக் கடிதத்தைப் பாருங்கள்' என்று அதைக் கொடுத்தான்,
பொன்னுசாமி கடிதத்தைப் பார்த்து வியப்புற்று "ஒகோ! எந்தவிதம் செய்தால் பலிக்குமென்று எண்ணி இப்போது இவ்விதம் ஆரம்பித்திருக்கிறார்களா? இருக்கட்டும். கேசவா! இதைப் பரிமளா பார்த்தாளா! அவளிடம் காட்டினாயா?" என்றார்.
கேசவன்:- ஆம். தந்தையே! காட்டினேன்; கண்டு அவள் மிக்க விசனிக்கின்றாள்.
பொன்னு:-ஐயோ! ஏன் அவசரப்பட்டுவிட்டாய்! இதைக் கண்டு அவள் மனம் கலங்காமலிருக்குமா! இளம் தளிராகிய அவள் மனத்தை வாட்ட விட்டாயே! இதைக் காட்டாதிருந்தால் உனக்கென்ன குறைவு? போடா போ! அசட்டுப் பையா! உனக்குள்ள அன்பு எம்மட்டும் உள்ளதென்று நான் அறிவேன். ஆனால் இதை நீ காட்டியதே பிசகு. என்னிடம் முதலில் காட்டிய பிறகு இதைப்பற்றி யோசிக்கலாகாதா! கேசவா! பரிமளா இப்போது நாடகத்திலிருந்து நின்றுபோய் சுமார் ஒரு வருடமாகப் போகின்றது. இவ்வொரு வருடகாலமாகவே கம்பெனியில் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. நடிகர்களும் ஏதோ ஒருவிதமான மாறுதலுடன் இருக்கின்றார்கள். இவைகளை நாம் கவனியாமலிருப்பினும் எனக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. கேசவா! நீ இக் கடிதத்தை சாதாரணமாக நினைத்துக் கொள்வதற்கில்லை. ஏனெனில் வேண்டு மென்றே உங்களிருவருக்கும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இதை வெகு குரூரமாக எழுதி இருப்பதாய்த் தெரிகிறது. ஆகையினால் எனக்கு ஒன்று தோன்றுகின்றது. அதாவது துப்பறியும் ராஜாராம் நாயுடுவினிடத்தில் இக் கடிதத்தைக் காட்டி அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடப்போம். இதில் உனக்கென்ன தோன்றுகின் றது?" என்றார்.
இதுகேட்ட கேசவன் "தந்தையே! உங்களுடைய அபிப்பிராயத்திற்கு மிஞ்சி எதுவும் நான் கூற வல்லவனா! தங்கள் இஷ்டம் எப் படியோ அப்படியே நடக்கட்டும். என்னுடைய மனத்தில் தோன்றுவது ஒன்று தான். அதாவது, என்னால் பிறருக்கு ஒரு விதத்திலும் தீங்கு வரக் கூடாது. கபடமறியாத அக் கன்னிக்கு என் பொருட்டு ஒருவிதமான சங்கடமும் நேராமலிருந்தால் அதுவே எனக்குப் போதும்." என்றான்.
பிறகு பொன்னுசாமி அக் கடிதத்தை வாங்கிக்கொண்டு நேரே ராஜாராம் நாயுடுவின் வீட்டிற்குச்