செய்கிறீர்களே! நான் யாருக்கு என்ன கடிதம் எழுதவேண்டும்? அதைத் தெரிவியுங்கள்." என்று வணக்கமாகக் கேட்டான்.
இதற்குள் அந்நால்வரும் "அடேய்! என்ன தைரியம் உனக்கு? உன் முகத்திற்கெதிரில் துப்பாக்கி இருக்கையில் நீ ஏதோ சாவதானமாகக் கேட்கிறாயா! உம். நாங்கள் சொல்வது போலவே எழுது. இல்லையேல் சுட்டுவிடுவோம். உம்;'" என்று அதிகாரமாய் அட்டகாலம் செய்தார்கள். அதற்குள் ஒருவன் கேசவனின் தலை மயிரைப் பிடித்துக்கொண்டான். அப்போது அதிக அகாலமும் ஆய்விட வில்லை.இரவு 8 மணி தானிருக்கலாம். கேசவன் இருக்கும் அறை மூன்றாவது மாடியில் ஓர் தனித்த அறையாதலால் அங்கு பக்கத்தில் எவரும் சகாயத்திற்கில்லை; அப்படியும் அவன் விடாது கோவெனக் கத்தவாரம்பித்தான்.
உடனே இரு கரங்கள் அவன் குவளையைக் கெட்டியாகப் பிடித் துக் கொண்டன. கேசவனுக்கு மூச்சுத் திணறும்படியாக ஆய்விட்டதால் தத்தளிக்கின்றான்; "உம். எழுது; எழுது." என்று ஒரு பேனாவை அவன் கையில் கொடுத்து வற்புறுத்தினார்கள். அவன் சமிக்ஞைபினால் "விடுங்கள் எழுதுகிறேன்" என்றதும், குவளையை விட்டார்கள். "உம் எழுது” என்று கூறியதும் கேசவன் எழுத வாரம்பித்தான்.
"என் பிரியமுள்ள பரிமளா!
இந்தக் கடிதம் கண்ட தக்ஷணம் இவர்களோடு கிளம்பிச் சென்று விடு. இவர்கள் என் மனிதர்கள். விவரம் பிறகு நான் உன்னை நேரில் கண்டு சொல்கிறேன்.
இங்ஙனம்
கேசவன்."
என்று அவர்கள் சொல்லிக்கொண்டு வருகையில் அதைக் கேட்கும் போதே கேசவனின் உள்ளம் துடிதுடித்தது, "ஏதோ பெரிய மோச வலையை விரிப்பதற்கே இவ்விதம் இவர்கள் செய்கிறார்கள்" என்று நன்றாகத் திட்டமாகத் தெரிந்துகொண்ட உடனே, அக்கடிதத்தை முற்றும் எழுதி முடிப்பதற்குள் வெகு துணிகரமாக சடக்கென்று கிழித்து எறிந்துவிட்டு "கிராதகப்பதர்களே! என்னுயிர் போனால் பாதகமில்லை. நான் என்னுயிரைத் திருணமாக மதிப்பவன் என்பதை\