சென்றார். நாயுடு அவரை வரவேற்று விசாரித்தார். நமது பொன்னுசாமியும் யோக க்ஷேமம் விசாரித்த பிறகு தன் காரியத்தை வெளியிட்டுக் கடிதத்தையும் காட்டினார்.
நாயுடு:- (கடிதத்தைப் பார்த்து விட்டு) "இதென்ன சில்லரை விஷயம். இதற்காகக் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். பையன் நடித்து நான் பார்த்திருக்கிறேன். மிக்க யோக்கியமானவனென்று தோன்றுகின்றது.
பொன்னு:- ஆக்ஷேபனை என்ன! மகா யோத்யன். அபார புத்தியுடையவன். ஒழுக்கந் தவறாதவன். தெய்வ பக்தி யுடையவன். என்மீது உயிரையே வைத்திருப்பவன். என்னுடைய வார்த்தையை ஓர் இம்மியளவும் தட்டாதவன்.
நாயுடு:-ரொம்ப சந்தோஷம். நான் இப்போது ஒரு அவசர காரியத்தின் நிமித்தம் வெளியில் செல்கிறேன். பிறகு தங்களைப் பார்க்கிறேன்.- என்று கூறிப் போய் விட்டார். பொன்னுசாமியும் விடை பெற்றுக்கொண்டு பரிமளாவின் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது பரிமளா ஏக்கம் பிடித்து உட்கார்ந்திருந்தாள். பொன்னுசாமி அவளுக்கு வேண்டிய தைரிய மொழிகளைக் கூறிப் பின் வீடுபோய்ச் சேர்ந்தார். அன்று முதல் கேசவன் இவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. அவன் தன் வேலையைக் கவனித்துக் கொண்டு வெளியிட முடியாத விசனத்தை உள்ளடக்கியவாறு இருக் கிறான். பரிமளவல்லியைப் பார்க்காத துக்கத்தைக் கூறமுடியாது. கேசவனின் மனத்தில் அவன் தாயாரைக் காணாது தவிக்கும் பெரும் விசனத்தோடு இதுவும் சேர்ந்தது. இதனால் உடம்பு இளைத்து உருக வாரம்பித்தது.பரிமளவல்லியினிடம் காதல் கொண்டான்; ஆனால் அதை வெளியிடவும் அஞ்சித் தவிக்கின்றான். இராப்பகலாக அதையே எண்ணி ஏக்கங்கொண்டு தவித்து ஒரு தினம் அதே சிந்தாக்ராந்தனாய் உட்கார்ந்திருக்கையில் திடீரென்று நான்கு பேர் அவ்வறையில் பிரவேசித்து "அடேய் கேசவா! நான் சொல்கிறபடி ஒரு நிமிடத்தில் இக்கடிதத்தை எழுதித் தருகிறாயா! அன்றி உன்னை சுட்டுவிடட்டுமா?" என்று சுற்றிக்கொண்டார்கள்.
இந்த எதிர்பாராத சம்பவத்தினால் கேசவன் நடுநடுங்கிப்போய் அப்படியே அசைவற்று உட்கார்ந்துவிட்டான். அவனது ஆவி துடிக்கின்றது. அங்கம் பதறுகின்றது. செய்வதறியாது விழித் துக்கொண்டே "ஐயா! இதென்ன அக்ரமம், நீங்கள் யார்? இப்படிக் கள்வரைப் போல வந்து கடிபிடி