(Reading time: 29 - 57 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

கேசவன்:- (இனிமேல் தைரியமாய் அழைக்கலாம்) கண்ணே! பரிமளா! இந்த அடையாளங்கள் - கட்டு காயங்கள்- ரத்தக் கரை கள் யாவும் என் காதலின் பரிசுகள்! என்றும் மறத்தல் கூடாத முத்திரை மார்க்குகள். பரிமளா! நடந்த விஷயத்தை நீ கேட்டால் மிக்க மனமுருகுவாய்; பயப்படுவாய். என்னுயிரினுமினிய உன்னைக் காத்தல் பொருட்டு இக் குத்துக்களையும் தாங்கிக் கொண்டேன். உயிரை விடவும் துணிந்தேன். என் இன்ப வடிவமாகிய உனக்கு ஒருவித ஆபத்தும் நேராதிருப்பின் அதுவே எனக்குப் போதும்- என்று கூறி நடந்த விஷயத்தை விரிவாக உரைத்தான்.

   

இதைக் கேட்ட பரிமளா திடுக்கிட்டு, நடு நடுங்கி "ஹா! கத்தி யினால் குத்தியதா இது? ஐயோ! என் பொருட்டாகத் தங்களுக்கு இத்தகைய பெரிய அபாயம் நேர்ந்து விட்டதே! இந்த அபசாரத்திற்கு நான் என்ன செய்வேன்?" என்று வருந்தி வாடி நின்றாள்.

   

கேசவன்:- கண்மணி ! நீ வருந்துவது சற்றும் அழகல்ல! இப்போது நடந்த சம்பவங்களைத் திருப்பி வைத்துக் கொண்டு பார்ப்போம். என்னைப் பற்றி உன்னிடம் அத்தகைய சம்பவம் ஏற்படின் நீ என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பாயா !உனக்கு மனம் துணியுமா! அதை நன்றாக யோசித்துப் பாரு.

   

பரிமள:- நான் என்ன பதில் பேசுவேன்? என் உயிரைக் கொடுக்கவும் அஞ்சமாட்டேன்; ஆனால் தங்களைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். இது பரஸ்பர அன்பின் தோற்றங்கள். தாங்கள் சிரமப் படுவதையும், என் பொருட்டுக் கத்திக் குத்து பட்டதையும் காண மனஞ் சகியாமல் இவ்வாறு கூறுகிறேன். நண்பரே! இந்த ரணங்களின் பாதையை எவ்விதம் தாங்குகின்றீர்கள். எந்த சண்டாளர்கள் அவ்விதம் செய்தார்கள் என்பதை யறிய ஆள் அடையாளம் தெரிய வில்லையா! ஐயோ! நாமிருவரும் பாதேசிகள் என்பதை யறிந்து நமக்குத் தீங்கு செய்கின்றார்கள். நம்முடைய எஜமானர் கட இச் சமயம் இங்கில்லையே! என்ன செய்வது?

   

கேசவன்:- கண்ணே! நான் இவ்வேளையில் இங்கு வந்ததற் குக் காரணம் தெரிந்து கொண்டாய்; இன்று நடந்த சம்பவத்தைப் பார்த்தால் வேண்டுமென்று உனக்குத் தொந்தரவு செய்வதற்காகத் தான் அக் கடிதத்தை என்னை விட்டு எழுதச் செய்தது. அதை உன்னிடம் காட்டினால் நான் அனுப்புவதாக நீ நினைத்து அவர்களோடு வந்து விடுவாய் என்கிற சூழ்ச்சியை எண்ணிச் செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் உனக்கு எந்த சமயம் எத்தகைய தீங்கு விளையுமோ தெரியவில்லை. நமது எஜமானர் வந்த உடனே இவ் விஷயங்களைத் தெரிவிக்கின்றேன். அவர் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.