(Reading time: 29 - 57 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

அவர் தங்களுடன் கலந்து சில விஷயங்களை யோசித்துச் செய்ய வேண்டுமென்று நேற்று தெரிவித்தார். இன்று அவர் தங்களைக் காண வந்தாலும் வருவார்.

   

பொன்னு:- நானே அவர் வீட்டிற்குச் செல்ல உத்தேசித் திருக்கிறேன். நேரில் பேசிக் கொள்கிறேன். இந்த காயத்திற்கு என்ன செய்தாய்! இன்னும் சில ரணங்களிருக்கின்றனவே!

   

கேசவன்:- இனிமேல் அதற்கென்ன பயம், முதலில்தான் மிகவும் பாதை செய்தது. இதற்காகக் காய்ச்சலும் வந்தது. ஜன்னி கண்டு விடுமோ என்றும் பயந்தேன். இதை நான் வெளியிடவில்லை. பரிமளா இதனால் மிக்க விசனிப்பாள் என்று பயந்து பேசாமலிருந்து விட்டேன. ஆனால் நாயுடுகாரு என்னைத் தனிமையில் விட சம்மதிக்காமல் தன்னுடன் அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே சிகிச்சை செய்தார். அதன் பிறகு நான் வீட் டிற்கு வந்து விட்டேன். அந்த மகானுபாவனைப் போல உலகத்திலேயே இல்லை எனலாம். வெகு உத்தமர். பரோபகாரத்தையே முதன்மையாகக் கருதுகின்றவர். நன் என்னுடைய தாயார் விஷயத்தையும் அவரிடம் தெரிவித்தேன்; அதற்கும் முயற்சி செய்வதாகச் சொன்னார்." என்றான்.

   

பிறகு பொன்னுசாமி "நான் சென்று வருகிறேன்" என்று கூறிவிட்டு நாயுடுவின் வீட்டிற்குச் சென்றார். நாயுடு இவரை வர வேற்று உபசரித்து "எப்போது வந்தீர்கள்!" என்று கேட்டார்.

   

பொன்னு:- நான் இன்றுதான் வந்தேன், விஷயம் இன்னும் ஒன்றும் தகவல் தெரிய வில்லையா! நான் சென்று வருவதற்குள் விபரீத சம்பவங்கள் நடந்து விட்டதாமே! இதிலேதேனும் விளங்கிற்றா! இது எதோ பூடகமாகவே வேலை நடக்கின்றதே! உங்களுக்குக் கூடப் பிடி கிடைக்கவில்லை எனில் விஷயம் எப்படியாகும். எனக்கு இதே கவலையாக இருக்கிறது. பையன் உடம்பில் காயத் தைப் பார்த்தீர்களே! என்ன அனியாயம்,!

   

நாயுடு:-நண்பரே! இந்த விஷயத்திற்கே தாங்கள் பதறிப் போய் விடுகிறீர்கள். இதைப் போன்று பத்து பங்கு சிக்கலான வழக்கில் நான் அகப்பட்டுக் கொண்டு தத்தளிப்பதைத் தாங்கள் நேரில் பார்த்திருந்தால் என்ன நினைப்பீர்களோ! இவ்விதமான சிக்கல் எங்களுக்கு மிக்க சகஜமாகி விட்டது. ஏதோ கூடிய வரையில் நான் ஒருவாறு கண்டு பிடித்திருக்கிறேன். ஆனால் இப்போது வெளியிட மாட்டேன். எனக்கு ஒன்று தோன்றுகின்றது. அதாவது, பரிமளாவின் மீது கேசவன் தன்னுயிரையே வைத்துக் காதல் கொண்டிருக்கிறான் என்பதை நான் பல விதத்திலும் தெரிந்து கொண்டேன். அதை அவனுடைய கத்தி காயத்தினால் இன்னும் நன்றாக நிதர்சனமாகத் தெரிந்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.