இவ்விதமாக அவர் கேட்பார் என்பதைக் கனவிலும் நினைக்காத கேசவனுக்கு வியப்பும் சந்தோஷமும் உண்டாயது. எனினும் தன் தாயின் துயரம் ஒருபுறம் குப்பென்று கிளம்பியது. அந்த நிலைமையில் அவன் எஜமானனிடத்தில் லஜ்ஜையோடு "தந்தையே! நான் என்ன சொல்லப் போகிறேன்! தங்கள் இஷ்டம் எப்படியோ அப்படியே காரியம் நடக்க வேண்டியதே என் கருத்து. என்னை இதுபரியந்தம் பிதாவைப் போல ரக்ஷித்து வரும் உங்கள் அடிமை யல்லவா நான்!" என்றான்.
பொன்:- என்ன இப்படிப் பேசுகிறாய்? நான் சொல்லியது எல்லாம் உனக்குச் சட்டமாக விருப்பின் நான் பரிமளாவை மணக்க வேண்டாமென்றால் நீ நின்று விடுவாயா?
.
கேசவன் - தந்தையே! என்னுடைய சுகத்தையும் துக்கத்தையும் கோரும் தாங்கள் என் விஷயமாகச் செய்யும் எந்த காரியமும் எனக்குப் பிரதிகூலமாக இருக்காதென்கிற உறுதியை நான் கொண்டிருக்கிறேன். தங்களுடைய சித்தம் அவ்வாறிருக்குமாயின் அதுவே கடவுளின் சித்த மென்று நினைத்து நான் கிட்டாதாயின் வெட்டென மற என்றதை எண்ணிப் பேசாமலிருப்பேன்.
பொன்னு:-கேசவா! பேஷ்; நன்றாகப் பதிலுரைத்தாய்; உன்னுடைய மனோபாவத்தை நானறிந்தது போல வேறு யாருமறிந்திருக்க மாட்டார்கள். உன்னை நான் எவ்விதத்திலும் களிப்பிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். உன் மனமறிந்தும் நான் வேண்டு மென்றே கேட்டேன்; ஏன் கண்ணீர் வடிக்கின்றாய்? என்ன விசனம்?
கேசவன்:- விசனம் என்ன வென்பது தாங்களறியாததன்றே! என்னுடைய அன்னையைக் காணாது நான் கலங்கியபடியே விவாக சந்தோஷமடைய வேண்டி இருக்கின்றதே. என் தாயார் இருந்தால் எத்தனை ஆனந்தமாக விருக்கும். அதை நினைத்தால் விசனம் பொங்குகின்றது.
பொன்னு:- வாஸ்தவம்; உன் தாயாரை உயிருடன் பறி கொடுத்தது பற்றி நானும் விசனிக்கின்றேன்; நான் எத்தனையோ விதத்தில் அந்த அம்மாளைப் பற்றித் தேடியலைந்தும் ஒருவிதமான தகவலும் தெரிய வில்லையே என்று கவலையாகத் தானிருக்கிறது. உம். என்ன