(Reading time: 29 - 57 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

   

பரிமள:- (குனிந்த தலை நிமிராமல் அபாரமான லஜ்ஜையுடன்) கடவுளுக்குத் தமது பக்தர்களின் மனோபாவம் நன்றாகத் தெரியும். அவ்வாறு தெரிந்தாலும் அவர்களைச் சோதியாமல் தன் பொன்னடி தருவதில்லை: அதுபோன்றே உலகத்துச் செயலும் இருக்கின்றது.

   

பொன்:- செல்வீ! பரிமளா! உன் உதாரணம் வெகு பொருத்த மானது, என் கண்ணே! நீ ச ற்றும் பயப்படாதே. கேசவனையும் உன்னையும் நான் ஒருபோதும் பிரிக்க மாட்டேன்; உங்கள் காதலின் மகிமையை நான் அறிவேன்.

   

என் வாழ்நாளில் நான் சண்டாளனா யிருந்துவிடினும் அதன் உயர்வு இப்போது எனக்கு நன்கு தெரிகின்றது. என் குணவதியின் உயிர் பறிபோனதே அதற்குச் சான்றாகும். கண்ணால் கண்டும் காணாதவனாய் - குருடனாய் — அவ் வுத்தமியை உயிர்ப் பலி கொடுத்தேன். ஆகையினால் நான் உங்களை அதிக நாள் பிரித்து வைக்கவும் சம்மதிக்காது சீக்கிரமே விலங்கிட்டுச் சிறைச் சாலையிலடைத்துவிட வாரண்டு தயார் செய்வதற்கே வந்தேன். நான் சென்று புரோகிதரை அழைத்து முகூர்த்த நாள் குறிப்பிட்டு விடுகிறேன். அதன் பிறகு மற்ற ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன். உங்கள் திருமணத்தை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் சன்னிதானத்தில்தான் செய்ய வேண்டுமென்று என் மனத்தில் தோன்றுகின்றது. அவ்விடத்திலேயே செய்து விடுகிறேன். உங்களுக்கு ஆக்ஷேபனை இல்லையே!" என்றார். அதற்கவர்கள் 'இல்லை' என்றதும் உடனே அவ்விடத்தில் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

   

அன்றே தமது புரோகிதரை அழைத்தார், அவர் வந்து நாள் பார்த்து, தை மாதம் 27-ம் தேதி முகூர்த்தம் வைத்துக் கொடுத்துச் சென்றார். லக்னப் பத்திரிகையும் எழுதித் தயாராகி விட்டது. பரிமளாவுக்கும் கேசவனுக்கும் விவாகம் என்ற விஷயம் ஊர் முற்றும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதே பேச்சாக எல்லோரும் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். விவாகத்தை பொன்னுசாமி வெகு விமரிசையாக நடத்தத் தீர்மானித்து நாயுடுவுடனேயே கலந்து யோசித்துப் பலவிதமான ஏற்பாடுகளும் செய்ய லானார்.

   

கேசவனுக்கு விவாக தினம் குறிப்பிட்ட வுடனே தன் தாயாரின் நினைவும், சகோதரிகளின் நினைவும் அபாரமாக உண்டாகி விட் டன. விவாகத்திற்கு இன்னும் 20 நாட்கள் தானிருக்கின்றன. இன்பமும் துன்பமும் சம இடையாகக் கேசவனின் மனத்தில் பாதிக்கின்றன. தன் தாயைக் கண்டு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.