(Reading time: 29 - 57 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

கொண்டேன். அந்த பெண்ணும் அப்படியே என்பதை அறிந்தேன். கேசவனின் வாயினாலும் இருவருடைய மனோபாவத்தையும் அறிந்து கொண்டேன். ஆகையினால் அவர்களுடைய விவாகத்தை நாம் சீக்கிரத்தில் முடித்து விட்டால் என்ன! அவளை யபகரிக்கவோ, அன்றி அவனை அபகரிக்கவோ பகைவர்களின் சூழ்ச்சியாக விருக்கின்றது. நாம் விவாகத்தை நடத்தி விட்டால் அவ்வளவு பாதகமில்லை என்று தோன்றுகின்றது. உங்கள் அபிப்பிராயமென்ன!

   

பொன்னு:--என்னுடைய அபிப்பிராயம் தாங்கள் கேட்க வேண்டுமா? தாங்கள் எப்படிக் கூறுகின்றீர்களோ அதன்படிக்கு நான் நடக்கத் தயாராக இருக்கிறேன். தங்களுடன் நானும் இதைப் பற்றிப் பேசவே வந்தேன்; தாங்களே இவ்விஷயத்தைப் பிரஸ்தாபித்து விட்டீர்கள். எனக்கும் மனம் வெறுத்து சலித்து விட்டது. இது பரியந்தம் செய்த ஸ்தாபனங்கள் போதும். இனி மேல் நான் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரை சென்று சுவாமி தரிசனம் செய்து கங்கை நீராடி வாவேண்டும்; பிறகு திருப்பதி க்ஷேத்திரத் திலேயே சில காலம் மலைமீதே தங்கி இருக்க மனம் ஆவல் கொண்டிருக்கின்றது. ஆதலால் அவ்விதம் செய்யத் தீர்மானித்து விட் டேன்; இவர்களுடைய விவாகத்தை யொருவாறு முடித்து விட்டு, என்னிடமுள்ள செல்வத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி ஒருவழி செய்து விட்டு, நான் கூடிய சீக்கிரத்திலேயே புறப்பட நினைக்கிறேன். அதற்குள் இந்த விபத்துக்களும் ஒழியும், நான் என்னாலான நன்மைகளைச் செய்து விடுவது என் கடமை.

   

நாயுடு:- அப்படியாயின் மெத்த சந்தோஷம்; நாம் இக் காரிய த்தை விரைவில் செய்து முடித்து விடுவோம்: பிறகு மற்றதைக் கவனிப்போம். பொறாமைத் தீ கொண்டு இவ்விதம் கலகம் செய்கின்றார்கள்; நீங்கள் அந்தப் பெண்ணின் தாயாரிடம் கலந்து யோசனை செய்யுங்கள்; அவர்களுடைய சம்மதியைப் பெற்ற பிறகு நாம் மேல் கொண்டு செய்வோம்.

   

அப்புறம் பொன்னுசாமி விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தார்; கேசவனை பழைத்து, "அப்பா கேசவா! நானும் நாயுடுவும் ஒரு காரியம் நிச்சயம் செய்தோம். நீயும் பரிமளாவும் கொண்டுள்ள ப்ரேமை எத்தகைய தென்பதை நான் அறிந்துள்ளது போலவே நாயுடுவும் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆதலால் உங்களுடைய திருமணத்தை விரைவில் முடித்து விடுவதென்று நாங்கள் தீர்மா னித்து விட்டோம்; அது விஷயத்தில் உன்னுடைய அபிப் பிராயத்தையும், அவர்களுடைய அபிப்பிராயத்தையும் கலந்து கொண்டு செய்ய எண்ணுகிறேன்; நீ என்ன சொல்லுகிறாய்; உன் சம்மதமெப்படி?" என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.