நேரம் தத்தளித்தான். பிறகு தன்னுயிர் நிலைக்க வேண்டு மென்கிற பயத்தினால் பரிமளாவின் முகத்தைப் பரிதாபகரமாக நோக்கினான். தன்னுடைய கேவலமான நிலைமையை நன்றாகத் தெரிந்துகொண்டான். "சீச்சீ! இந்த அநியய காரியத்திற்கு உடந்தையாகிவிட்டோமே!" என்று வருந்தியவாறு பரிமளாவை நோக்கி "அம்மணி! நான் செய்தது தப்பிதந்தான்; என்னை விட்டுவிட வேண்டும். இது என்னுடைய குற்றம் மட்டுமல்ல. இதில் சம்பந்தப்பட்டுள்ளவரின் பெயரைக் கூறினால் நீங்களே நம்பமாட் டீர்கள்; அவரால் நாங்கள் கெட்டோம். நான் உண்மையைக் கூறிவிடுகிறேன். தாங்கள்மட்டும் தனித்திருக்கையில் அதை வெளியிடுகிறேன்"
பரிமளா-ஒகோ! இனி உன்னுடைய விஷயத்தில் ரகஸ்யம் வேறு வேண்டுமா!........ சரி; வீரர்களே! இவனை இவ்வறையிலேயே போட்டுப் பூட்டிவிடுங்கள்! என் எஜமானரும் நாயுடுவும் வந்தபிறகு தான் இவனை விடவேண்டும்; ஜாக்கதை.- என்று கூறி அவனை அவ் வறையிலேயே போட்டுப் பூட்டிவிட்டாள்.
பிறகு பரிமளா தன் தாயாரிடம் சென்று வெகு சாதாரண மாகப் பேசுவதுபோலப் பேசத்தொடங்கி "அம்மா! நான் நேற்றிரவு ஓர் கனவு கண்டேன், அக்கனவு எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. அதாவது, - ஏதோ ஒரு உருவம் என் முன்பு தோன்றுகின்றது. அதைப் பார்த்து நான் பயப்படுகிறேன்; அந்த உருவம் பயப்படாதே! கண்ணே! கோமளா!. நான் தான் உன் பிதா. நான் அநியாயமாய்ச் சண்டையில் இறந்துவிட்டேன். உன் தாயின் கருப்பத்திலிருந்த குழந்தையும் பெண் சிசுவாகப் பிறந்ததாகக் கேள்வியுற்றேன். உங்களைப் பார்க்க நான் ஓடிவந்தேன். நான் உன்னையொன்றும் செய்யமாட்டேன்; பயப்படாதே" என்று கூறி மறைந்தது."அம்மா! நான் எத்தனை தரம் கேட்டாலும் நீ தந்தை யின் விஷயத்தைக் கூறுவதே இல்லையே! இந்த கனவில் தெரிந்த விஷயம் உண்மையா அம்மா! என் தந்தை சண்டையிலா உயிர் துறந்தார்?" என்று கேட்டாள்.
இதைக் கேட்டதே பார்வதியம்மாளுக்கு மனம் திடுக்கிட் டது. "இது உண்மையில் கனவாகவிருக்குமா! அன்றி இவளுக்கு உண்மை எப்படியாவது தெரிந்துவிட்டதா!" என்ற பெருத்த சந்தேகம் உண்டாய்விட்டது. அவ்வாறு உண்டாகிய சந்தேகத்தை அறிந்த பரிமளா "அம்மா! உன்னுடைய முகமே கனவு உண்மையென்று எடுத்துக் காட்டுகின்றது. இனி இவ்விஷயத்தை ஒளித்து என்ன பயன்? எங்களுக்கு அதை அறிவித்தால் விசனமென்று நீ நினைக்கின்றாய்; அது எந்த காலத்திலாவது தெரியவேண்டாமா! அவரவர் செய்த பாப புண்ணியத்திற் கேற்றவாறு