(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

இருள் மயமான துக்கம் வந்து மூண்டு விட்டதோ அதே போல உலகமே இருள் மூடியவாறு அவளுக்கு ஆய்விட்டது. எந்தவிடத் தில் நோக்கினும் கேசவனின் முகம் சோகத்தினால் வாடி வதங்கிக் கண்ணீர் பெருக நிற்பதாகத் தெரிகின்றது. இத்தகைய கோரமான நிலைமையில் அன்று பொழுது போயிற்று.

   

எப்போது தனக்குக் கடிதம் வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டே இருந்தாள்: மறுநாள் பிற்பகல் பரிமளாவின் அறையில் விசனமே வடிவமாய் உட்கார்ந்திருக்கையில் வேலைக்காரி வந்து "அம்மா! யாரோ ஒருவர் தங்களுடன் முக்கியமான விஷயம் பேச வேண்டுமாம். அதற்காக வந்திருக்கிறார். கேசவன் விஷயம் என்றும் சொல்லச்சொன்னார்" என்றாள்.

   

இது கேட்ட பரிமளா கேசவன் விஷயம் என்றதும் மிக்க களிப்புற்று நாயுடுவின் ஆளாகவிருக்கு மென்று தனக்குள் தீர்மானித்து "உள்ளே வரச்சொல்லு" என்றாள். உடனே வெகு ஆடம்பரத்துடனும் படாடோபமான அலங்காரத்துடனும் ஓர் உல்லாச புருஷன் அவ்வறையில் நுழைந்தான். பரிமளா விசனமே உருவான பதுமையைப்போல தலைவிரிகோலமாக விருந்தாள். இந்த ஆடம்பர அலங்காரத்தையும், ஒய்யார நடையையும் பார்த்த உடனே அவளுக்கு மனம் சப்பென்று சலித்து ஓர்விதமான வெறுப்பு உண்டாகி விட்டது. "உட்காருங்கள்'' என்று ஒருபுறமாகத் திருப்பிக்கொண்டு கூறி "தாங்கள் யார்? கேசவன் விஷயமாக என்ன பேசவேண்டும்? அதை உடனே தெரிவிக்கலாம்" என்று முடுக்காகக் கேட்டாள்.

   

அது கேட்ட அந்த மனிதன் நகைத்துக்கொண்டே "பரிமனா! என்ன இது! கேசவன் விஷயமென்று கூறும்போதே இத்தகைய ஆத்திரமும், பரபரப்பும் உண்டாகின்றதே! ஐயோ பாவம்! நீ என்ன செய்வாய்! அவனிடத்தில் நீ நன்றாக ஏமாந்துவிட்டாய். இதோ இந்த பத்திரிகையில் வெளிவந்துள்ள விஷயத்தைப் படித் துப் பார்.'' என்று கூறித் தினசரி பத்திரிகையைக் கொடுத்தான்.

   

கேசவன் அபாண்டப் பழி பெற்றுள்ள விஷயந்தான் பத்திரிகையில் வெளியாகி இருக்கும் என்பது பரிமளாவிற்கு நன்றாகத் தெரியுமாதலால் அவள் அதைப்பற்றிச் சிறிதும் கலக்கமடைய வில்லை எனினும் அதுவிஷயத்தைப் பற்றி எவ்விதம் பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது பார்ப்போம் என்று படிக்கலானாள்.

   

============= சிறந்த நடிகன் திருடனாக மாறினான் கலியாண வீட்டில் களவு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.