(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

அவர்களுக்கு சுகமும் துக்கமும் கலந்து சரிசமமாகப் பங்கு செய்துதான் வைக்கின்றார். சுகம் வரும்போது அதிகமாய்ப் பொங்கிவிடலாகாது; துக்கம் வரும்போது அடியோடு இடிந்துவிடலாகாது. ஆகையினால் இச்சமயம் நீ எங்களைவிட அதிக தைரியசாலியாயும், நம் பிக்கையுடனும் இருக்கவேண்டும். சற்றும் அதைரியமோ, மனத் தாங்கலோ அடைவது கூடாது.

   

பரிமளா :- நாயுடுகாரு! என்ன இது பெரிய பீடிகை போடுகின் றீர்களே! எனக்கு விஷயம் ஒன்றுமே விளங்கவில்லையே! கடவுளின் சிருஷ்டியும் இன்பமும் துன்பமும் எல்லோருக்கும் சமத்வம்தானே; விஷயத்தை விளங்கக் கூறுங்கள்.

   

நாயுடு:-அவசரப்படாதே. இதோ இந்த தந்தியை நீயே படித்துப்பார்; பார்த்ததும் பதறாதே. இதில்தான் உன் மனோ வலிமையின் உறுதியைக் காணவேண்டும். கடவுள் இருக்கிறார். அவர் கிருபையில் யாதொரு குறைவும் வராது என்று கூறித் தந்தியைக் கொடுத்தார்.

   

பரிமளா தந்தி என்றதுமே திடுக்கிட்டவாறு, அதை வாங்கிப் படித்துப் பார்த்தாள். நாயுடு எத்தனை பீடிகைபோட்டு பேசி யிருந்தும் "ஹா! கேசவனுக்கா இந்த விபத்து! இத்தகைய அபாண்டப் பழி வந்தது! ஐயோ!....நாயுடுகாரு தந்தையே!" என்று ஏதோ பேச வாயெடுத்தாள். அதற்குள் நாயுடு தடுத்து "பரிமளா! என்ன இது! நான் இதுகாறும் சொல்லியதை எல்லாம் மறந்தனை போலும், நாங்களிருவரும் சொல்கிறபடியே நீ நடக்கவேண்டும். வீணாகக் கலங்காதே! அவன் நிரபராதி என்பதைக் கடவுள். அறிவார். அவர் கிருபையினால் அதைக் களைவதற்கு என்னை ஏவியு மிருக்கிறார்; ஆகையினால் நிதானி; பதறாதே. உன்னுடைய அன்பு எவ்வளவு தூரம் வேரூன்றியிருக்கின்றது என்பதை நான் அறிவேன்.இவ்விஷயத்தில் திடீரென்று பத்திரிகையில் பார்த்து என்ன நிலைமையை அடைவாயோ என்று நான் இப்போது உனக்கு முத வில் தெரிவித்தேன். இதோ இப்போதே நாங்கள் அவ்விடம் செல்கிறோம். நீ பயப்படாதே. கேசவன் நிரபராதி என்பதை நான் கட்டாயம் நிரூபிக்கின்றேன்; இது நிச்சயம். நீ எந்த விஷயத்திலும் கவலைப்படாதே. கடவுளையே நம்பு. அவரையே இடைவிடாது பிரார்த்தனை செய்துகொண்டு ஜாக்ரதையாக இரு. எனக்கு ஒருவிதமான ஆபத்துமில்லா திருக்கும்பொருட்டு இங்கு என் ஆட்களைக் காவல் வைத்துச் செல்கிறேன்; இவ்விடத்திலும் ஏதேனும் விஷயம் உனக்குத் தெரிந்தால் ஜாக்ரதையாகக் கவனித்துக்கொள். உன் சாமர்த்தியத்தால் நீ உன்னைக் காத்துக்கொள், கண்ணீர் விடாதே!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.