(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

தப்பிக்க வழி செய்வாய்; அதற்கு மேலும் பேசுவாய். பாம போக்யன் போல வேலைக்காரியைத் தேடிக் கொண்டு வந்த திருட்டுப் பயலல்லவா நீ! என்று தாறுமாறாகக் கூறுகையில் ஒருவன் ஓடிச் சென்று போலீஸ் சேவகனை அழைத்து வந்து விட்டான்.

   

அங்கு வந்த போலீஸ் சேவகன் கேசவனைப் பிடித்துக் கொண்டு விறைக்கப் பார்த்தான். இதற்குள் கேசவன் தாங்கமாட்டாத துயரத்தோடு 'ஐயோ! அனியாயமே! அக்ரமமே! இவ்விதம் பழி சுமத்துவது தருமமா! பாவிகளே! எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு வேண்டுமென்று என்னை இவ்விதம் பழிக்குப் பாத்திரமாக்குகின்றீர்கள்! நான் ஒரு பாபமும் அறியாதவன். நான் யாரென்பதை யறியாது இவ்விதம் தாறுமாறான வார்த்தையை உபயோகிக்கின்றீர்கள். என்னுடைய பெயரைத் தமிழுலகமே அறி யும், நற்குண நாடக சபையில் நடிக்கும் கேசவன் நான்தான் என்பதை அறியுங்கள்; பொன்னுசாமியினுடைய புகழை, அவர் செய்துள்ள தர்மங்களின் கீர்த்தியை நீங்கள் அறியாதிருக்க மாட்டீர்கள். அவருடைய சிஷ்யனாகிய நானா இத்தகைய ஹீனமான வேலை செய்வேன் என்பதை நினைத்துப் பாருங்கள். இதோ இக் கடிதம் எனக்குக் கிடைத்தது. என் தாயாரைக் காணக் கூடிய பேராவலோடு நான் வந்தேன். ஐயா! போலீஸ் உத்யோகஸ்தரே! நீரேனும் இதைச் சரியாகப் படித்துப் பாரும்.'' என்று வெகு வீராவேசத் தோடு கூறி, கடிதத்தைக் கொடுத்தான்.

   

கடிதத்தை வாங்கிப் படித்த சேவகன், கேசவனின் சரிதையை விசாரித்தறிந்து கொண்டான். பிறகு வீட்டுக்காரர்களை நோக்கி "ஐயா! இவ் வீட்டு வேலைக்காரி எங்கே? அவளையும் விசாரித்துப் பிறகு நான் சொல்கிறேன்" என்றான். வீட்டுக்காரன் வேலைக்காரி வீட்டிற்கு ஆளையனுப்பி அவளை அழைத்துவரச் செய்தான். அவளைப் போலீஸார் விசாரித்ததில் கேசவனுக்கும் அவளுக்கும் ஒரு விதமான சம்பந்தமும் கிடையாதென்று விளங்கி விட்டது.

   

அவ்வாறு விளங்கியதும் கேசவன் திடுக்கிட்டான். உடனே போலீஸ் சேவகன், "ஓகோ! இப்போது தெரிகின்றது. நீ ஒருக்கால் அகப்பட்டுக் கொண்டால் இக் கடிதத்தைக் காட்டித் தப்பித் துக் கொள்ள வழி செய்யலாம் என்று இதை முன் கூட்டியே எழுதி வைத்திருக்கிறாய். இதில் கண்டபடி ஒரு விஷயமும் நிஜமல்ல என் பதை நன்றாகத் தெரிந்து கொண்டாய் விட்டது. நீ நாடகத்தில் நடிப்பவனாய் இருக்கலாம். பொன்னுசாமியின் சிஷ்யனாயுமிருக்கலாம். எப்படி இருப்பினும் நீ இதோ கையுங் களவுமாக அகப்பட்டுக் கொண்டிருப்பதிலிருந்து தப்ப முடியுமா என்று கேட்டுக் கொண்டே இருக்கையில் ஒரு கிழவி, "ஐயோ! யம்மாடி! யப்பாடா! என் போதாக் காலத்திற்குத்தான் விஷயம் இப்படி என்று தெரியாமல் ஒப்புக் கொண்டேன். அடே பாவி! நீ 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.