திருடன் என்று தெரியாமல் போயிற்றே! அடே சண்டாளா! என்னைச் சந்தியிலே இழுக்க வாடா பார்த்தே! நானு தெய்வமேன்னு கிடக்கறேன்....
ஐயா! போலீஸ்கார ஐயா! நான் ஒரு பாபமும் அறியமாட்டேன். நானு இந்த வீட்டில் கல்யாணத்துக்காக வேலை செய்ய வந்திருக்கிறேன். பத்துப் பாத்திரங்கள் தேய்த்து வைத்துவிட்டு வீட்டிற்குப் போய் படுத்துக்கொண்டேன். வேலை செய்த அலுப்பினால் தூங்கி விட்டேன். நடு நிசியில் தூக்கம் விழித்தது. அப்போது இந்தப் பாவி என்னருகில் வந்து "ஆயா! இந்த மூட்டையை வைத்துக் கொண்டிரு; நான் காலையிலே வாங்கிக்கிறேன்" என்றான். எனக்குத் தூக்கக் சலக்கத்திலும், இருட்டிலும் ஒன்றும் தெரிவில்லை; இவன் தோட் டக்காரன் என்று எண்ணி 'பக்ஷண மூட்டையா?' என்றேன். 'ஆமாம். வைத்துக் கொண்டிரு; அவுக்காதே" என்றான். 'சரிதான்' என்று நினைத்து வாங்கி தலைபின் கீழே வைத்துக் கொண்டு படுத் தேன்; இப்போ கண்ணை விழித்துக் கொண்டு பார்த்தால் திருட்டு சமாச்சாரம் கேள்விப் பட்டேன். மூட்டையில் பார்த்தால் நகைகள் காணப் பட்டன. பக்ஷணமில்லை அப்போதே என் வயிற்றில் இடி இடித்தது; ஒடி வந்தேன். இந்த கம்மனாட்டித் தடியன் செய்த வேலை இது," என்று பெரிய ராமாயணம் போலப் பேசிக் கொண்டே வந்து நகை மூட்டையை போலீஸ்காரனிடம் கொடுத்தாள்.
இந்த சம்பவம் சேசவன் மனத்தை ஈட்டி போலக் குத்தியது. கோபம் பொங்கி எழுந்த பார்வையுடன் “அடீ சண்டாளீ! உன் முகத்தையேனும் நான் பார்த்தேனா! பைசாசமே! நீ யாரோ! உன்னை நான் பார்த்தது மில்லையே! நீதான் இத்தனை நகைகளையும் திருடி என் தலைப் பக்கத்தில் பாதி நகைகளை மூட்டையாகக் கட்டிப் போட்டுவிட்டு நீ மிச்ச நகைகளை வைத்துக் கொண்டு வேண்டு மென்று இவ்வித சதி செய்திருக்க வேண்டும்! நான் என் தாயாரைக் காண வேண்டி இவ்விடம் வந்த நிரபராதி என்பதைக் கடவுள்தான் அறிவார்! சீச்சீ! துஷ்டையே! பழி சுமத்தாதே. இத்தனை வயதை விழுங்கிவிட்டு மதியற்ற முண்டமாகப் பேசுகிறாயா!" என்றான்.
இதற்குள் அருகிலுள்ளோர்கள் "ஐயோ பாவம்! கிழவியை ஏன் திட்டுகின்றாய்! அவன் உண்மையில் திருடி இருப்பின் அவளாக நகைகளைக் கொண்டுவந்து தாக்கல் செய்வாளா! மேலும் இக் கிழவி இவ்வூரிலேயே இருக்கிறவள். இவளை வெகு நாட்களாக நாங்களறிவோம். இவள் வெகு நல்லவள். இவள் அத்தகைய வேலை செய்யமாட்டாள்.'' என்று கூறினார்கள்.
கிழவி "அடே படுபாவி ! நீ செய்த வேலை ஜெரிப்பதற்கு என்னையும் துணைக்கு இழுக்கின்றாயா! சீச்சீ! உன் திருட்டுத் தனத்தைச் செருப்பாலடிக்க; நீ பெரிய யோக்யனன்று, ஐயா! போலீஸ்காரரே!