(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

பொன்னு:-கண்ணே! பரிமளா! என் மன நிலைமையில் எனக்குப் பேசவுங் கூடவில்லை. வெண்ணெய் திரளும் சமயம் தாழி உடை வது போல உங்கள் கல்யாண சமயத்தில் இத்தகைய கஷ்டம் வந்து விட்டது. நமக்கு நாயுடு இருக்கையில் யாதொரு குறைவுமில்லை. நீ பயப்படாதே. வருத்தப்படாதே, தைரியமாயிரு. நாங்கள் சென்று வருகிறோம்.

   

பரிமளா:- என் தந்தையே! நாயுடுகாரு! நீங்கள் சொல்லியது போலவே நான் தைரியமாக இருக்கிறேன். இந்தப் பழி நீங்குமா! கேசவன் விடுதலையடைந்து விடுவாரா!.... தங்களுடன் நானும் வருகி றேனே, அவ்விடம் வந்து அவரைப் பார்த்துவிட்டு உடனே திரும்புகிறேன். என்னையும் அழைத்துச் செல்லலாகாதா!

   

நாயுடு:-பரிமனா! நீ என்ன விஷயமறியா தவளைப்போலப் பேசுகின்றாய். நீ இச்சமயம் அங்குவருவது கூடாது, நாங்கள் சென்று காரியத்தைக் கவனிக்கவேண்டும், நேரமாகிவிட்டது. உனக் குத் தேறுதல் கூறத்தான் நாங்கள் வந்தோம். ஆகையினால் அகக் கண்ணால் கேசவனைப் பார்த்துவிடு. தடுக்காதே! நாங்கள் சென்று கடிதம் எழுதுகிறோம்.-என்று கூறிவிட்டு இருவரும் விடை பெற் றுச் சென்றார்கள்.

   

பரிமளாவோ கூறவியலாத விசனத்துடன் எண்ணாததும் எண்ணி ஏக்கங்கொண்டு "கேசவனை மீண்டும் முன்போலக் காணப் போகின்றோமா!" என்று மனம் உடைந்து விட்டாள். அவளுடைய தாயாரும் சகோதரியும் அவ் விஷயத்தைக் கேட்டு விசனித்தார்கள். "என் மனோராஜ்யமெல்லாம் வீணாகி விட்டதே! குழந்தையைச் சந்தோஷமாக திருமணக் கோலத்துடன் கண்டு களிக்க எண்ணிய எண்ணம் வீணாயிற்றே! ஐயோ! கேசவனா இத்தகைய காரியம் செய் திருப்பான்! அவன் காலில் ஒட்டிய தூசுகூட இவ்விதம் செய்யாதே! உத்தமனென்றால் அவனுக்கன்றோ தகும்!" என்று பார்வதியம்மாள் புலம்புகின்றான்,

   

பரிமளா இவ் விஷயத்தினால் அன்றே சித்தம் சிதறியவன் போன்று ஆய்விட்டாள். அவள் ஆகந்தத்திற்கு ஏதோ பங்கம் வந்து விட்டதாகவே தோன்றி விட்டது. “ஆ! கடவுளே! என் அன்பனுக்கு ஒரு விதமான விபத்தும் நேராமல் காப்பாற்ற வேண்டும். மகா உத்தமன் குணசீலன் என்பதை யறிந்து நீ இத் தகைய அனியாயப் பழியை அவன் மீது சுமத்துவது தருமமா! இது உன் கருணைக்கு அழகா! அப்பனே! தீன சரண்யா! கேசவனுக்குற்ற மாசை யொழித்துக் காப்பாற்றுவாய்!" என்று வேண்டிக் கொண்டு படுத்து விட்டாள். அவளது மனத்திற்கு எவ்விதம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.