விட்டேன். இடம் வெகு சௌகர்யமாய் இருக்கிறது. நீங்கள் சொல்லிய படியே. அவன் தாயார் எழுதுவதுபோல எழுதி நேற்றைய தினமே தபாலில் போட்டு விட்டேன். அது போய்ச் சேர்ந்திருக்கும். இனி கவலை வேண்டாம்; என்னுடைய முதல் வேலையைச் செய்து விட்டேன். அதற்காக எனக்குச் சேர வேண்டிய மிச்சம் 500 ரூபாயை உடனே அனுப்பவும்; இல்லையேல் ஆபத்துதான்; ஜாக்ரதை!
முத்தன்"
அதைப் படித்ததும் பரிமளாவின் ரத்தம் கொதித்தது. வீர கர்ஜனை செய்தவாறு ;"அடே சண்டாளா! நான் நினைத்த வாறே முடிந்திருக்கிறது. மோசக்காரப் படுபாவி! வீனாச காலத் திற்குத் தான் விபரீத புத்தி! சீச்சி! வெட்கங் கெட்ட சோதாப் பயலே" என்று திட்டியபடியே மற்றொரு வீரனையும் துப்பாக்கி யைப் பிடிக்கச் செய்து வேறொரு கடிதத்தைப் படிக்கலானாள்.
"ஜம்புலிங்கம்!
என்னுடைய வார்த்தையை இப்போதாவது கேட்டு நடக் கப் போகிறாயா இல்லையா! ஊரார் வீட்டுப் பெண்ணை உன் : காலில் கட்டி விட்டு நாங்கள் பெருத்த கஷ்டத்தை அடைகின்றோம். இங்கு சாப்பாட்டிற்கு மில்லாது திண்டாடுகையில் உனக்கு தினம் நாடகம் என்ன! கூத்து என்ன! உன் அனியா யத்தைக் காதில் கேட்கக் கூடவில்லை. நீ இவ்விதமே செய்து கொண்டிருந்தால் தற்கொலை செய்து கொண்டு உயிரை விடப் போகிறேன். நீ செய்யும் அனியாயம் உனக்கு இப்பொழுது தெரியா விடினும் கடவுளின் முன்பு நீ ஒரு நாளைக்கு ஒப்புக் கொள்ள வேண்டு மென்பதை மறக்காதே! உன்னுடன் பிறந்த சோதரியை வயிறெரியச் செய்யும் பரிபவம் ஒன்றே போதுமானது. ஜாக்ரதை உடனே நீ இங்கே வந்து சேரு.
இங்ஙனம்
சோமு"
மற்றொன்று.
"உன்னைச் சகோதரன் என்று வாயினால் கூறவும் காத்தினால் எழுதவும் என் மனம் கூசி