(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

வெறுக்கின்றது, உடன் பிறந்தவனென்று பெயர்கொண்ட உதவாக் கட்டையே! ஆதியிலும் என்னை அடியோடு கெடுத்தீர்கள். நம்முடைய ஏழ்மை நிலைமையின் கொடுமையினால் என்னை ஒரு தனம் படைத்த கிழவனுக்குக் கொடுத்து என்னைப் பாழ்ப்படுத்தி விட்டீர்கள். கிழவனின் பொருளைக் கொள்ளை யடிக்க எண்ணியே என்னைக் கொள்ளை கொடுத்தீர்கள்! கிழவனின் பணத்தையும் கரைத் தாய்! கிழவனையும் எமனுலகம் அனுப்பினாய் இரண்டு குழந்தைகளுடன் சந்தியில் நின்ற கைம்பெண்ணைக் கலங்கச் செய்கிறாய்!

   

என்னுடைய சகல வாழ்வையும் பாழ்ப்படுத் தினாய்! என்னிடம் மிச்சமிருந்த சில நகைகளையும் திருடன் போல எடுத்துக் கொண்டு சென்றதுமன்னியில் அது விவ ரத்தைக் கேட்டதற்கு நிர்த்தாக்ஷண்யமாய் நல்லதங்காளைப் போல குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி நீயும் விழு' என்று கையும் மனமும் துணிந்து எழுதினாய்! அடேய் படுபாவி! உன் மனம் துணிந்தது போல உடன் பிறந்த பாசத்தினால் என் மனம் இன்னும் துணிவு கொள்ள மாட்டேனென்கிறது, இதுவே கடைசிக் கடிதம் என் வீட்டையும் அடகு வைத் தாய். அதற்கு வரி கட்ட என்னிடம் ஒரு காசும் இல்லை. வீட் டுக் கடன்காரன் வீட்டை ஏலத்திற்கு விடுவதாக நோட்டீஸ்

   

கொடுத்து விட்டான்; படு பாவி உன்னால் நான் உயிரிழக்கப் போகிறேன். இனி மேல் நான் தயை தாக்ஷண்யம் பார்க்கப் போவதில்லை. என்னுடைய மனம் முறிந்து விட்டது. நான் கட்டாயம் இனி மேல் உன் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன்; அம்மட்டு மின்றி நீ அந்த நாடகக்காரப் பொன்னுசாமி யைக் கொலை செய்ய நினைத்திருக்கும் பாதகருடன் சம்பந்தம் வைத்துக் கொண்டிருப்பதை நான் போலீஸாரிடம் உளவு கூறி உன்னைச் சந்தி சிரிக்கச் செய்வேன்! உன்னுடைய இந்த சதியாலோசனையை இன்றுதான் அறிந்தேன்! நீ இக்ஷணமே அதிலிருந்து விலகிக் கொள். இல்லையேல் அனியாயமாய் மாண்டு விடுவாய் ! உன்னுடைய மோசம் வெளியான விவரத்தை நேரில் தெரிவிக்கின்றேன். உடனே இவ்விடம் வந்து என் பணத்திற்கு ஓர் வழி செய். இல்லையேல் நீ அதோகதி யாவாய்.

   

இங்ஙனம்

   

உன் சோதரி"

   

மற்றொரு கடிதம்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.