==========
"நேற்று இரவு பசுபதி முதலியார் வீட்டில் சுமார் இரண்டு மணிக்கு ஆறாயிரம் ரூபாய் பெறுமான நகைகள் களவாடப்பட்டன. பசுபதி முதலியாரது குமாரத்தியின் கலியாணத்திற்காக அனேக ஸ்திரீகள் ஆபரணங்களுடன் வந்திருந் தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களில் பலருடை யது களவாடப்பட்டன. கள்ளன் நகைகளைக் கழற்றிய போது ஒருவர் கண்விழித்துக்கொண்டு கூக்குரலிட்டவுடன் எல்லோருமாக எழுந்து பார்த்துப் பெரிய கலபை உண்டாகி விட்டது. அந்த வீட்டுத் திண்ணையின் கோடியில் படுத்திருந்த ஒருவன் எழுந்த உடனே அவன் தலைப்பக்கமுள்ள நகை மூட்டை கீழே விழுந்தது. அப்போதே அவன் தான் கள்ளனென்று அறிந்து அவனைப் பிடித்துப் போலீஸ்காரர் வசம் ஒப்புவித்தார்கள். அவன் திருடிய நகைகளை இரண்டு மூட்டைகளாகக் கட்டி ஒன்றை தன் தலைப்பக்கமும், மற்றொன்றை ஒரு கிழவியிடமும் கொடுத்திருந்தான். கிழவி திருட்டு நகை என்றறிந்ததும் அதைப் போஸீஸாரிடம் தாக்கல் செய்துவிட்டாள். பிறகு விசாரித்ததில் அந்த திருடன் பிரபல நாடகக் கம்பெனியாகிய நற்குண நாடக சபை யின் கீர்த்தி வாய்ந்த நடிகன் கேசவன் என்று தெரிந்தது. அதன்மேல் பின்னும் ஆராய்ச்சி செய்ததில் அவனுடைய ஜீவிய சரிதையும் கிடைத்தது.
அவனுடைய தந்தை வேசிக்கள்ளனாம்; குடிகாரனாம். அவ னுடைய அண்ணன் பக்காத் திருடனாம். அவன் தாயார் இருக்குமிடம் தெரியாமல் ஓடிவிட்டாளாம். தந்தையைப் போலவும் தமயனைப்போலவும் கெடாதிருக்கும் பொருட்டு நாடகக் கம்பெணிக்காரர் நற்புத்தி புகட்டியும் பலனின்றி தனது அல்ப புத்தியினால் திருடவரம்பித்துவிட்டான். அவனைப் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவனுடைய எஜமானருக்குத் தந்தியடித்திருக்கிறது. உன்னதமான கீர்த்தி யுடன் நாடக மேடையில் நடித்த மனிதன் திருடியது மிக்க வியப்பாக இருக்கிறது. மற்ற விவரம் பின்னர் வரும்”
என்று வரைந்திருந்ததைப் படித்த பரிமளா முன்னர் தெரிவித்தது போல எதுவும் பதில் பேசாது பத்திரிகையைக் கொடுத்து விட்டாள். பத்திரிகையை வாங்கிக் கொண்ட மனிதன் பரிமளா, "உன் கேசவன் பவிஷு எப்படியிருக்கிறது பார்த்தாயா! உனக்கு நான் இதற்கு முன் பல கடிதங்கள் எழுதியும் ஒன்றுக்கும் பதில் போடாது அலக்ஷ்யம் செய்தாய்! ஆனால் அப்போது திருட னாகத் தோன்றாத கேசவனின் நேசம் உன்னை யவ்வாறு செய்தது. இனிமேல் அந்த எண்ணம் மடியும்